ஃபோல்டபில் போன் வாங்க ஆசையா? இப்படி ஒரு மடிப்பு, அப்படி ஒரு மடிப்பு! ரெடியாகும் Xiaomi Mi Mix Fold 2!

|

சியோமி ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ், சாதாரண மாடல் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி போர் அடித்துவிட்டதா? உங்கள் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யவிருக்கிறது. ஆம், இந்த புதிய டிவைஸ் வழக்கமான ஸ்மார்ட்போன் மாடல்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. எப்படி என்று கேட்கிறீர்களா? Xiaomi இடமிருந்து வரவிருக்கும் இந்த புதிய டிவைஸ் ஒரு போல்டபில் ஸ்மார்ட்போன் மாடலாக வெளிவரப் போகிறது.

சியோமியின் புதிய Xiaomi Mi Mix Fold 2 போன்

சியோமியின் புதிய Xiaomi Mi Mix Fold 2 போன்

சியோமி நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் புதிதாக Xiaomi Mi Mix Fold 2 என்ற ஸ்மார்ட்போன் மாடலை சேர்த்துள்ளதாக தெரிகிறது. இந்த புதிய டிவைஸ் 50 மெகாபிக்சல் கேமரா சென்சார் மற்றும் லைக்கா பிராண்டிங் மற்றும் டால்பி விஷன் HDR வீடியோ ரெக்கார்டிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்று சமீபத்திய டிப்ஸ்டர் தகவல் தெரிவித்திருக்கிறது. Xiaomi நிறுவனத்தின் இரண்டாவது போல்டபில் ஸ்மார்ட்போன் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த டிவைஸ் அறிமுகத்திற்கு முன்னதாக சீனாவின் 3C சான்றிதழ் இணையதளத்தில் 22061218C மாடல் எண் உடன் காணப்பட்டுள்ளது.

சீனாவில் காணப்பட்ட புதிய டிவைஸ் பற்றிய தகவல்

சீனாவில் காணப்பட்ட புதிய டிவைஸ் பற்றிய தகவல்

இந்த பட்டியலில், வரவிருக்கும் Xiaomi Mi Mix Fold 2 ஸ்மார்ட்போன் சாதனம் 67W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் வரும் என்பதை சுட்டிக்காட்டியுள்ளது. சீனா 3C பட்டியல் படி, இந்த புதிய டிவைஸ் சீனாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதை பரிந்துரைத்துள்ளது. Xiaomi Mi Mix Fold 2 ஆனது 120Hz ரெப்பிரேஷ் ரேட் கொண்ட 6.5' இன்ச் மற்றும் 8' இன்ச் அளவு கொண்ட டிஸ்பிளேவை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சீனவின் மைக்ரோ பிளாக்கிங் தளமான Weibo இல் இந்த தகவல் பகிரப்பட்டுள்ளது.

Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?Snapdragon 8+ Gen 1 சிறந்ததா? அல்ல Snapdragon 8 Gen 1 சிறப்பானதா? எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்?

டால்பி விஷன் எச்டிஆர் உடன் 50 மெகாபிக்சல் கேமரா

டால்பி விஷன் எச்டிஆர் உடன் 50 மெகாபிக்சல் கேமரா

Xiaomi Mi Mix Fold 2 ஸ்மார்ட்போன் Leica பிராண்டிங் மற்றும் டால்பி விஷன் எச்டிஆர் (Dolby Vision HDR) வீடியோ ரெக்கார்ட் ஆதரவுடன், 50 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. டிப்ஸ்டர் தகவல் இந்த டிவைச பற்றிய கூடுதல் விவரங்களை வெளியிடவில்லை. இருப்பினும், மற்றொரு அறிக்கையின் படி, Xiaomi Mi Mix Fold 2 ஸ்மார்ட்போன் 22061218C என்ற மாடல் எண்ணுடன் கவனிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த டிவைஸ் விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

சக்தி வாய்ந்த சிப்செட் உடன் போல்டபில் போன்

சக்தி வாய்ந்த சிப்செட் உடன் போல்டபில் போன்

Xiaomi Mi Mix Fold 2 ஆனது 6.5' இன்ச் மற்றும் 8' இன்ச் டச்ஸ்கிரீன் பேனல்களை கொண்டுள்ளது. இதன் இன்னர் டிஸ்பிளே 120Hz ரெப்பிரேஷ் ரேட் மற்றும் வெளிப்புற டிஸ்பிளே 60Hz ரெபிரெஷ்ஷிங் ரேட் உடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அதன் முன்னோடியான Xiaomi Mi Mix Fold உடன் ஒப்பிடும்போது இது ஸ்லிம் கிரீஸைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய போல்டபில் ஸ்மார்ட்போன் சக்திவாய்ந்த Qualcomm Snapdragon 8+ Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.

லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?லேப்டாபை கூட சார்ஜ் செய்யும் 50,000mAh பவர் பேங்க் டிவைஸா? இது என்ன விலை தெரியுமா?

சியோமியின் முதல் போல்டபில் போன் Xiaomi Mi Mix Fold

சியோமியின் முதல் போல்டபில் போன் Xiaomi Mi Mix Fold

இது 2022 ஆம் ஆண்டின் மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தெரியாதவர்களுக்கு, தற்போது வாங்க கிடைக்கும் சியோமியின் முதல் தலைமுறை Xiaomi Mi Mix Fold டிவைஸ், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Qualcomm Snapdragon 888 சிப்செட் மூலம் இயங்க கூடியது. இந்த டிவைஸின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் CNY 9,999 விலையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் இந்திய மதிப்பு தோராயமாக ரூ. 1,18,100 விலையை நெருங்குகிறது.

இந்த புதிய டிவைஸ் இந்தியாவில் அறிமுகமாகுமா?

இந்த புதிய டிவைஸ் இந்தியாவில் அறிமுகமாகுமா?

அதேபோல் இதன் 16 ஜிபி ரேம் + 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் CNY 12,999 என்ற விலையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய மதிப்பில் இதன் விலை தோராயமாக ரூ. 1,53,500 என்ற விலையை நெருங்குகிறது. இந்த இரண்டு வேரியண்ட் மாடல்களில் சீனாவில் அறிமுகமானது. ஆனால், என்னவிதமான காரணம் என்று தெரியவில்லை, சியோமி நிறுவனம் இந்த போல்டபில் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தவறிவிட்டது. சியோமி, இம்முறையாவது அதன் புதிய போல்டபில் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்யுமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi Mix Fold 2 Tipped Launch With 50 Megapixel Camera Leica Branding On It

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X