செராமிக் பாடி மற்றும் 8GB ரேம் உடன் வெளிவரவுள்ள சியாமி மிமிக்ஸ் 2
சியாமி நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான மி மிக்ஸ் 2 மாடல் ஸ்மார்ட்போன் எந்த அளவிற்கு உலகம் முழுவதும் வரவேற்பை பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே.

பெஸல் லெஸ் வகை மாடலை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இதன் அடுத்த தயாரிப்பாக சியாமி மிமிக்ஸ் 2 மாடலின் பிரிமியர் மாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக வதந்திகள் பரவி வருகிறது.
இந்த சியாமி மிமிக்ஸ் 2 மாடலின் சிறப்பு வெளிடு குறித்த தகவல்கள் பிரபல சீன இணையதளமான வைபோ இணையதளத்தில் வெளிவந்துள்ளது. இந்த தகவல்களில் இருந்து இந்த புதிய மாடல் ஸ்மார்ட்போன் 8GB ரேம் கொண்டது என்றும் இந்த மாடல் செராமிக் வெள்ளை நிறத்தில் ஆனது என்றும் கூறப்படுகிறது.

மேலும் ஒருசில இணையதளங்களில் இந்த சியாமி மிமிக்ஸ் 2 செராமிக் வெள்ளை மாடல் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. டெக்னிக்கல் ஆய்வாளரான சன் சங்ஸ்யூ என்பவர் இந்த மாடலை கையில் வைத்து போஸ் கொடுத்துள்ள புகைப்படமும் சீன ஊடகங்களில் கசிந்து வருகிறது.
இவர் ஒருவேளை சியாமி நிறுவனத்தின் ஊழியராக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. 8GB ரேம் கொண்ட இந்த சியாமி மிமிக்ஸ் 2 வெள்ளை மாடல் கருப்பு நிறத்திலும் வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

மேலும் ரேம் மற்றும் வண்ணம் ஆகியவற்றை தவிர மற்ற வசதிகள் ஏற்கனவே வெளிவந்த 6GB மிமிக்ஸ் 2 மாடலை ஒட்டியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த புதிய மாடல் குறித்து சியாமி நிறுவனம் எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்பையும் வெளியிடும் காலம் குறித்தும் இதுவரை அறிவிக்கவில்லை. இருப்பினும் இந்த மாடல் நவம்பர் 11ஆம் தேதி வெளிவர வாய்ப்பு இருப்பதாகவும், இந்த மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூல்.46208ஆக இருக்கலாம் என்றும் வதந்திகள் கூறுகின்றன
அதே நேரத்தில் 6GB மிமிக்ஸ் 2 மாடலின் பயனாளிகள் இந்த புதிய மாடல் வெளிவந்தால் அவர்களுக்கு கூடுதல் அனுபவம் மற்றும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications