நம்பமுடியாத விலைகுறைப்பில் விற்பனைக்குவரும் சியோமி மி மிக்ஸ் 2.!
இந்த சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் சாதனத்திற்கு தற்சமயம் விலைகுறைப்பை அறிவித்துள்ளது சியோமி நிறுவனம். மேலும் இந்த சலுகையை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி மிக்ஸ் 2 சாதனத்தின் முந்தைய விலை ரூ.32,999-ஆக இருந்தது, தற்சமயம் அறிவிக்கப்பட்டுள்ள ரூ.3000-விலைகுறைப்பின் மூலம் ரூ.29,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் அதிகளவில் இந்த மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்பட்டது.
இக்கருவி 5.99-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது,அதன்பின்பு 2160 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக சிறந்த பாதுகாப்பு வசதியுடன் சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1 நௌகட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக 128ஜிபி மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
இந்த ஸ்மார்ட்போனில் 12எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஃபேஸ் அன்லாக் வசதியைக் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

வைபை,ப்ளூடூத் 5.0, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 3.1, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் வீடியோ கால் அழைப்பு மற்றும் ஆப் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.
சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனில் 3400எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.


Click it and Unblock the Notifications