ரூ.1000 சலுகை விலையில் சியாமியின் மிமேக்ஸ் 2 மாடல் விற்பனை

By Siva
|

சியாமி வாடிக்கையாளர்கள் கடந்த தீபாவளி சலுகை விலையை தவற விட்டுவிட்டீர்களா? கவலை வேண்டாம், உங்களுக்காக மீண்டும் சியாமி மேக்ஸ் 2 மாடல் ரூ.1000 தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 சலுகை விலையில் சியாமியின் மிமேக்ஸ் 2 மாடல் விற்பனை

சமீபத்தில் வெளியான மி மேக்ஸ் 2 மாடல் இரண்டு ஸ்டோரேஜ் கெப்பாசிட்டியில் வெளியானது. 4G+64GB மாடலின் விலை ரூ.16,.999 என்றும், 4GB+32GB மாடலின் விலை ரூ.14,999 என்றும் விற்பனை செய்யப்பட்டது.

தீபாவளி சலுகையை அடுத்து தற்போது இந்த மாடல்களின் விலை ரூ.15,999 மற்றும் 13,999 முறையே அமேசான் மற்றும் பிளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் மி மேக்ஸ் 2 மாடலும், கடந்த மாதம் இதன் 32GB மாடலும் விற்பனைக்கு வந்தது

இந்த மாடல் குறித்து நாம் நினைவு கொள்வோம் எனில் மி மேக்ஸ் 2 ஸ்போர்ட்ஸ் மாடல் மெட்டல் பாடி டிசைனில் உருவாக்கப்பட்டிருக்கும். மேலும் பிங்கர் பிரிண்ட் சென்சார் பின்பக்கத்திலும், மேல் பக்கத்தில் IR பிளாஸ்டர் வசதியும் இந்த மாடலில் உள்ளது. மேலும் மேல் மற்றும் கீழ் பக்கங்களில் ஆண்டெனா பாண்ட் வசதியும் உண்டு

"என் முதல் ஸ்மார்ட்போன்" திட்டத்தின் கீழ் ரூ.1349/-க்கு ஏர்டெல் 4ஜி ஸ்மார்ட்போன்.!

மேலும் இந்த மாடலில் 12MP பின்பக்க கேமிரா உள்ளது. இந்த கேமிராவில் சோனி ஐஎமெக்ஸ்386 சென்சர் மற்றும் ஆட்டோ போகஸ், எல்.இ.டி பிளாஸ்ஹ், PDAF சப்போர்ட், HDR ஆகிய அம்சங்கள் உள்ளது. மேலும் இந்த மாடலில் 5MP செல்பி கேமிராவும் உள்ளதால் வீடியோ காலிங் செய்ய உதவும்

இந்த மாடலின் மிகப்பெரிய சிறப்பம்சம் இதன் பேட்டரிதான். 5300mAh தன்மையுள்ள இந்த பேட்டரி இரண்டு நாட்களுக்கு நிற்கும் தன்னையுள்ளது.இந்த பேட்டரி புல் ஆனால் 18 மணி நேரம் வீடியோ, அல்லது 10 நாட்களுக்கு ஆடியோ, அல்லது ஒன்பது மணி நேரம் கேம் விளையாடுதல் அல்லது 57 மணி நேரம் பேசுதல் ஆகியவை செய்யலாம்.

மேலும் இந்த மாடலின் சாப்ட்வேர் பக்கம் சென்றால் ஆண்ட்ராய்ட் 7.1.1 நெளகட் தன்மையும், MIUI 8 ஸ்கின்னும் உள்ளது. மேலும் இந்த மாடலில் டூயல் பவர் ஆம்ப்ளிஃபையர் ஸ்டிரீயோ ஸ்பீக்கர்கள், டூயல் சிம் சப்போர்ட், 4G LTE, 174.1×88.7×7.6mm அளவிலும் 211 கிராம் எடையிலும் இந்த போன் அமைந்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
After the price cut, the 4GB+64GB model of Xiaomi Mi Max 2 is available at Rs. 15,999.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X