Home
News

இந்திய வாடிக்கையாளர்களின் இல்லங்களை அலங்கரிக்கும் சியோமி மீ எல்.,இ.டி டிவி 4 ஏ புரோ

ஸ்மார்போன்களை அறிமுகப்படுத்தி இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள சியோமி நிறுவனம்

ஸ்மார்போன்களை அறிமுகப்படுத்தி இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ள சியோமி நிறுவனம், நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்கியுள்ள பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட் டி.விகளை இந்திய சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. தீபஒளித் திருநாள் நெருங்கும் இந்த தருவாயில், சுக்கில பட்சமும், திரியோத நட்சத்திரமும் கூடிய ஒரு நல்ல நாளில் பெங்களூரில் அறிமுகப்படுத்தியுள்ளது.

விற்பனைக்கு வந்துள்ள சியோமி மீ எல்.இ.டி டிவி 4 ஏ புரோ, மீயின் தயாரிப்பு வரிசையில் பிரத்யேகமான வடிவமைப்பாகும். 49 இஞ்ச் வேரியண்டில் அகன்ற திரை விகிதங்களைக் கொண்ட இந்த ஸ்மார்ட் டி.வியில், மேம்படுத்தப்பட்ட பேட்ச்வால் ஓ.எஸ் தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது. சியோமியின் தனித்துவமான கண்டென்ட் டிஸ்கவரி இன்ஜினுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதால், 15க்கும் மேற்பட்ட சோர்ஸ்கள் மூலம், மணிக்கு 7 லட்சத்துக்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை பார்க்க முடியும்.

இல்லங்களை அலங்கரிக்கும் சியோமி மீ எல்.,இ.டி டிவி 4 ஏ புரோ

29,999 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ள சியோமி ஸ்மார்ட் டிவி, மீ டாட் காமில் விற்பனைக்கு வந்துள்ளது. எச்.டி.ஆர் ஆதரவு மற்றும் 8.1 நவீனப்படுத்தப்பட்ட ஆண்ட்ராய்டு இயங்குதளம் மூலம் 1080 பேனல் வீடியோ அவுட் புட்டுடன் இயங்குதிறன் கொண்டது.

பிரத்யேக வடிவமைப்பு

பிரத்யேக வடிவமைப்பு

மீ எல்.இ.டி டிவி 4 புரோவில் இருந்து, சியோமி மீ எல்.இ.டி டிவி 4 ஏ புரோ முற்றிலும் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 4.9 மில்லி மீட்டர் சுய விவரமும், உறுதியான பருமனும் கொண்டது. துல்லியமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டிவியில் நான்கு பக்கங்களிலும் உள்ள பெசல்கள் கூட தெளிவாகப் புலப்படக்கூடியது. வெற்றுப்பூச்சுகளால் ஈர்ப்பதை தவிர்த்து முறையாக வடிவத்தை இறுதி செய்துள்ளனர். டிவி ஸ்டாண்டில் வைக்க முடியாதவர்கள் சுவரில் மாட்டிக் கொள்வதற்கான வசதிகளும் புறப்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது

காட்சித் தெளிவு

காட்சித் தெளிவு

கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரூபாயில் ஐ.பி.எஸ் பேனல் உதவியுடன் வீடியோக்களை துல்லியமாக வண்ணங்களுடன் பார்க்க முடியும். பார்வையாளர்களின் அனுபவத்தை ஆழமாக்க கறுப்பு வண்ணம் மெருகேற்றப்பட்டுள்ளது. சியோமி மீ எல்.இ.டி டிவி 4 ஏ புரோவில் தரமான வீடியோ கோப்புகளை பார்க்கும்போதும், விரைவான வைபையை இயக்கும் போதும் ஏமாற்றம் இருக்காது என்பது உத்தரவாதம். எச்.டி.ஆர் ஆதரவு மற்றும் 1080 வீடியோ வெளியீட்டுத் திறனும் வண்ணச்சாரலையும், கண்ணியமான பொலிவையும் தருகிறது.

ஆடியோவில் தரம்

ஆடியோவில் தரம்

அமேசான் பிரைம் வீடியோ மற்றும் நெட்பிளிக்ஸ் இதில் இல்லை என்பதுதான் குறைபாடு. மற்றபடி ஆடியோ தரத்தில் மற்ற ஸ்மார்ட் டிவிக்கள் மல்லுக்கு நிற்க முடியாத அளவுக்கு தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது டி.டி.எச் மற்றும் எச்.டி ஒலிபெருக்கி வசதிகளுடன் டி.வி இருக்கும் அறை அழகிய ஓசைகளால் நிரம்புகிறது.புளூ டுத் ஸ்பீக்கர், சவுண்ட் பார் இல்லாமல் நல்ல ஒலிகளை கேட்க முடியும். 14 வித்தியாசமான கண்டென்களில் மணிக்கு 7 ஆயிரம் இசையை உள்வாங்கிக் கொள்ளலாம். ஹாட் ஸ்டார், ஹங்கமா, சோனி லிவ், வூட், ஈரோஸ் நவ், ஜீ5, ஜியோ சினிமா, ஹூக், எபிக் ஆன் சேவைகளை உள்ளடக்கியது.

வரம்பற்ற வீடியோக்கள்

வரம்பற்ற வீடியோக்கள்

ஆண்ட்ராய்டு ஓரியோவில் நிறுவப்பட்டுள்ள யூ.ஐ தொழில்நுடப உதவியுடன் யூடியூப் உள்ளிட்ட ஸ்டீரிமிங் சேவைகளை பெற வசதி உள்ளது. வரம்பற்ற வீடியோ உள்ளடக்கங்களை பார்க்க அனுமதிக்கிறது. ஆண்ட்ராய்டில் டிவி இயங்கும்போது அகன்ற திரையில் கூகிள் பிளே ஸ்டோர் மூலம் நல்ல ஆப்ஜெட்களை நிறுவ முடியும் பேட்ஜ்வால் வாடிக்கையாளர்களின் பார்க்கும் திறனை மேலும் செம்மைப்படுத்துகிறது. பேஸ்புக் அக்கவுண்ட்களை ஓபன் செய்து, ஸ்டீரிமிங் வீடியோக்களை பார்க்கும் வசதி இதில் சிறப்பு.

ரிமோட்டின் தனிததன்மை

ரிமோட்டின் தனிததன்மை

சியோமி மீ டிவியின் முக்கியமான அம்சமாக அதன் ரிமோட் கண்ட்ரோல் ஆகும். 12 பட்டன்களை கொண்ட ரிமோட் கண்ட்ரோல் பேட்ஜ்வால் யு.ஐ யைக் கொண்டது. ப்ளூ டூத்தை வைத்து இயக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு பெரிய டயல் மையத்தில் 4 திசை பொத்தான்களும், ஒரு நடவடிக்கை விசையும் உள்ளது. ஆண்ட்ராய்ட் ஓ.எஸ் பொத்தான், பேட்ஜ்வால் பொத்தான் தவிர குரல்வழி கட்டளைப் பொத்தானையும் உள்ளடக்கியது. யூடியூப் உள்ளிட்ட இதர சேவைகளை இதில் பெற முடியும்.

உள்ளடக்கத் திறன்

உள்ளடக்கத் திறன்

சியோமி மி எல்.இ.டி டிவி 4 ஏ புரோவில் அம்லோஜிக் குவாடு கோர் ஜிப் செட்டைக் கொண்டது. அதனுடன் மாலி 450 ஜிபியு இருக்கிறது. 2 ஜிபி ரேம், 8 ஜி.பி உள்ளடக்க நினைவகத்திறன் உள்ளது. பேஸ்புக், எம்.எஸ் ஸ்டீரீம் வீடியோக்களை பிளே செய்து பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. எச்.டி.எம்.ஐ போர்ட்கள், இரண்டு யு.எஸ்.பி போர்ட்கள் இதில் இருக்கின்றன. ஒரு ஈத்தர்நெட் போர்ட்டும், ஏவி உள்ளீடும் பொருத்தப்பட்டுள்ளது. ப்ளூ டுத், வைபை இணைப்பு உள்ளடக்கமாகக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi LED TV 4A Pro 49-inch Review The only real Smart TV in the budget price-point: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X