ஸ்மார்ட்போன்களை விற்க புதுவிதமான ஏற்பாடு: சியோமி பலே யோசனை.! மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் ஷாக்.!
முதலில் இந்த திட்டத்தை இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் வெளியிடவுள்ள சியோமி நிறுவனம், பிறகு அனைத்து நகரங்களுக்கு இதனை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சின நிறுவனமான சியோமி இந்தியாவிலும், சீனாவிலும் அதிகளவு ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது. மேலும் தற்சமயம் இந்நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போன்களை விற்க புதுபுது முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது, அதன்படி சியோமி ஸ்மார்ட்போன்களை விற்க தானியங்கு வெண்டிங் மெஷினை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது அந்நிறுவனம்.

விரைவில் இதற்காக சியோமி நிறுவனத்தின் படைப்பான Mi Express Kiosks-ஐ அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, Mi Express Kiosks என்பது பெரிய ஷாப்பிங் மால்கள், சூப்பர் மார்க்கெட்கள் போன்ற இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் தானியங்கு வெண்டிங் மெஷின் போன்றது தான்.

சூப்பர் மார்கெட்
ஆனால் சூப்பர் மார்கெட்டில் இருக்கும் வெண்டிங் மெஷினுக்குள் மிட்டாய்கள் மற்றும் பல உணவு பண்டங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும், இந்த மெஷினில் பணத்தை செலுத்தி, நமக்கு வெண்டுமென்கிற பண்டத்தை பெற்றுக்கொள்ளலாம். இதே முறைப்படி சியோமி தனது ஸ்மார்ட்போன்களை விற்க Mi Express Kiosks என்ற பெயரில் வெண்டிங் மெஷின்களை அறிமுகப்படுத்துவுள்ளது.

எளிதில் ஸ்மார்ட்போன்களை பெற முடியும்
குறிப்பாக சியோமியின் இந்த திட்டம், வாடிக்கையாளர்களின் செலவை குறைக்கவும் மற்றும் அவர்கள் எளிதில் ஸ்மார்ட்போன்களை பெறவுமே துவங்கப்பட்டுள்ளது. சியோமி கொண்டுவரும் Mi Express Kiosks வெண்டிங் மெஷின் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் அருகாமையில் உள்ள மெஷின்களில் எளிதில் ஸ்மார்ட்போன்களை பெற முடியும்.

மெட்ரோ நகரங்களில் ..
முதலில் இந்த திட்டத்தை இந்தியாவின் மெட்ரோ நகரங்களில் வெளியிடவுள்ள சியோமி நிறுவனம், பிறகு அனைத்து நகரங்களுக்கு இதனை விரிவுபடுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Experience it at Manyata Tech Park & our office in ETV. 50 more kiosks coming your way. pic.twitter.com/uqjjKkbb2b— Mi India (@XiaomiIndia) May 13, 2019 '>
மி.காம்
மேலும் சியோமி நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், இந்த வெண்டிங் மெஷின் ஆனது எங்கெங்கு
வைக்கப்பட்டுள்ளது என்பதை சியோமி மி.காம் தளத்தில் அறிந்துகொள்ளலாம், மக்களின் நேரத்தையும், பணத்தையும் மிச்சம் செய்யவே இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள்
பின்பு பணம் செலுத்த பல வழிகளை கொண்டுள்ள இந்த மெஷினில், மக்கள் நேரடியாக பணம் செலுத்தியோ, அல்லது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் பரிவர்த்தனை மூலமாகவோ பணம் செலுத்தி
தாங்கள் விரும்பும் ஸ்மார்ட்போனை பெற்றக்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

ஷாப்பிங் மால்கள்
சியோமி நிறுவனம் புதிய வெண்டிங் மெஷின்களை முதலில் மக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளான விமான நிலையம்,மெட்ரோ ஸ்டேசன், ஷாப்பிங் மால்கள் மற்றும் காம்ப்ளக்ஸ் போன்ற இடங்களில் அறிமுகம் செய்யும்.
பின்பு இந்தி மெஷினில் மொபைல்போன்கள் மட்டுமின்றி அந்த நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளையும் விற்பனைக்கு
வைக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications