பழைய சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாசமான 'எக்ஸ்சேன்ஜ்' ஆபர்.!
இப்போது சியோமி, அதன் வலைத்தளத்திலும் இந்த வாய்ப்பை திறந்துவிட்டுள்ளது.!
கடந்த நவம்பர் 2017-ல், சியோமி நிறுவனம் அதன் பிரத்யேக எக்ஸ்சேன்ஜ் வாய்ப்பை அறிமுகம் செய்தது. இதன் வழியாக ஒரு பழைய ஸ்மார்ட்போனை கொடுத்து ஒரு புதிய கருவியை வாங்கிக்கொள்ள பயனர்கள் அனுமதிக்கப்படுவார்கள். இது தற்காலிகமான சலுகை அல்ல, ஒரு வர்த்தக திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்றுவரை இந்த வாய்ப்பானது நிறுவனத்தின் மி ஹோம் கடைகளில் மட்டுமே, மி எக்ஸ்சேன்ஜ் என்கிற பெயரின் கீழ், பங்குதாரர் ஆன கேஷிப்பை (Cashify) உடன் அணுக கிடைத்தது. இப்போ து சியோமி, அதன் வலைத்தளத்திலும் இந்த வாய்ப்பை திறந்துவிட்டுள்ளது. அதை அணுகி எக்ஸ் சேன்ஜ் வாய்ப்பை பெறுவது எப்படி.? என்பதை பற்றி விரிவாக காண்போம்.!

பரிமாற்ற விரும்பும் ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்கவும்.!
மி.காம் வழங்கும் இந்த புதிய வாய்ப்பின் கீழ், பயனர்கள் ஒரு உடனடி பரிமாற்ற கூப்பனைப் பெறலாம். இது ஒரு பழைய ஸ்மார்ட்போனிற்கு மாற்றாக ஒரு புதிய ஸ்மார்ட்போனை வாங்க உதவும். இதை நிகழ்த்த சியோமி நிறுவனத்தின் அதிகாரபூர்வமான வலைத்தளத்தில் உள்ள பிரத்யேக எக்ஸ்சேன்ஜ் பக்கத்திற்கு சென்று, நீங்கள் பரிமாற்ற விரும்பும் ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்கவும்.

சிறந்த பரிமாற்ற மதிப்பானது உங்களுக்கு கிடைக்கும்.!
பின்னர் அந்த கைபேசியின் நிலை மற்றும் அதன் தற்போதைய சந்தை விலை அடிப்படையில், சிறந்த பரிமாற்ற மதிப்பானது உங்களுக்கு கிடைக்கும். சியோமி வழங்கிய பரிமாற்ற மதிப்பை ஏற்றுக்கொண்டதும் மொபைலின் ஐஎம்இஐ எண்ணைப் பயன்படுத்தி, உங்கள் மி அக்கவுண்டில் எக்ஸ்சேன்ஜ் கூப்பனின் மதிப்பை வரவு வைத்துக்கொள்ளவும்.

புதிய ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்க வேண்டும்.!
அந்த கூப்பனின் மதிப்பு தான் ஒரு புதிய ஸ்மார்ட்போன் வாங்க பயன்படும் என்பதை நினைவில் கொள்ளவும். அந்த கூப்பன் பயன்படுத்தி ஒரு புதிய கைபேசியை வாங்க, முதலில் நீங்களொரு புதிய ஸ்மார்ட்போனை தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் டெலிவரியின் போது உங்களின் பழைய ஸ்மார்ட்போனை ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கும் முன்னர்.!
இந்த வாய்ப்பின், நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்யும் பழைய ஸ்மார்ட்போன் ஆனது வேலை செய்யும் நிலையில் மற்றும் உடல் சேதம் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதும் மற்றும் ஒப்படைக்கும் முன்னர், ஸ்மார்ட்போனில் உள்ள எல்லா வகையான 'லாக்'களையும் திறக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

14 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.!
மிக முக்கியமாக நீங்கள் எக்ஸ்சேன்ஜ் செய்ய விரும்பும் தொலைபேசியானது சியோமி வழங்கும் பட்டியலில் இருக்க வேண்டும். மேலும் இந்த வாய்ப்பி கீழ், ஒரு வாடிக்கையாளர் ஒரே நேரத்தில் ஒரு சாதனத்தை மட்டுமே பரிமாற்றம் செய்ய முடியும். கிடைக்கப்பெறும் பரிமாற்ற கூப்பனை, வழங்கப்பட்ட 14 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்பதை குறிப்பிட விரும்புகிறோம்.


ஆக்சஸெரீஸ்களை வாங்க முடியாது.!
மேலும், இந்த கூப்பன்கள் கொண்டு ஸ்மார்ட்போன்களை மட்டுமே எக்ஸ்சேன்ஜ் செய்ய முடியும். அதாவது இந்த வாய்ப்பின் கீழ் இதர சியோமி ஆக்சஸெரீஸ்களை வாங்க முடியாது என்று அர்த்தம். மேலும் இதுபோன்ற டெக் அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் வலைதளத்தின் செய்தி பிரிவுடன் இணைந்திருக்கவும்.


Click it and Unblock the Notifications