Home
News

தீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.!

ரூ.1க்கு குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களாக எம்ஐயின் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கு கொண்டு ஆன்லைனில் வாங்குவார்கள் என்று என்பதில் சந்தேகமில்லை.

தீபாவளி பண்டிகை நடப்பதையொட்டி தற்போது, சியோமி எம்ஐ நிறுவனம் பல்வேறு அதிரடி சிறப்பு தள்ளுபடியை அறிவித்து வாடிக்கையாளர்களை அசர வைத்துள்ளது.

எம்ஐ நிறுவனத்தின் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையானது 23ம் தேதி (நாளை) முதல் துவங்கி 25ம் தேதி வரை 3 நாட்கள் நடக்கின்றது. இதில் ஏராளமான பொருட்கள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

தீபாவளிக்காக ரூ.1க்கு விற்பனை செய்யும் சியோமி எம்ஐ நிறுவனம்.!

இந்நிலையில் சியோமி நிறுவனம் ரூ.1க்கு பிளாஷ் விற்பனை செய்வதாக அறிவத்துள்ளது. இதில் எம்ஐ கோம் செக்கியூரிட்டி கேமரா, போகோ எப் 1 ஸ்மார்ட் போன், எம்ஐ காம்பேக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர், ரெட் மீ நோட் 5 புரோ, எல்இடி டிவி 4 ஏ புரோ, எம்ஐ ஏ 2 ஸ்மார்ட் போன் ஆகியவைகள் விற்பனைக்கு வர இருக்கின்றது.

ரூ.1க்கு குறைந்த விலையில் கிடைக்கும் பொருட்களாக எம்ஐயின் வாடிக்கையாளர்கள் போட்டி போட்டுக்கு கொண்டு ஆன்லைனில் வாங்குவார்கள் என்று என்பதில் சந்தேகமில்லை.

 எம்ஐ கோம் கார்டு செக்கியூரிட்டி கேமரா 360°:

எம்ஐ கோம் கார்டு செக்கியூரிட்டி கேமரா 360°:

எம் ஐ கோம் கார்டு செக்கியூரிட்டி கேமரா 360°-ன் உண்மையான விலை ரூ.2699 ஆகும். தீபாவளியையொட்டி தற்போது ரூ.1க்கு சியோமி எம்ஐ நிறுவனம் வழங்கின்றது. இதில் 35 யூனிட்கள் மட்டும் விற்பனைக்கு உள்ளது. இதை 23ம் தேதி மாலை 4 மணிக்கு ஆடர் செய்ய முடியும்.

போகோ எப்1  ஸ்மார்ட் போன்:

போகோ எப்1 ஸ்மார்ட் போன்:

போகோ எப்1 ஸ்மார்ட் போன் ஸ்டீல் ப்ளூ 6 ஜிபி+28 ஜிபி உடைய போனின் உண்மையான விலை ரூ.23999 ஆகும். 23ம் தேதி மாலை 4 மணிக்கு ஆன்லைனில் ஆடர் செய்தால், இந்த போனை ரூ.1க்கு பெற முடியும்.

இந்த போகோ எப் 1ன் போன்கள் 10 யூனிட்கள் மட்டும் விற்பனைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஐ காம்பேக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர்:

எம்ஐ காம்பேக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர்:

எம்ஐ காம்பேக்ட் ப்ளூடூத் ஸ்பீக்கர்2 -ன் உண்மையான விலை ரூ.799 ஆகும். 24ம் தேதி மாலை 4 மணிக்கு எம்ஐயின் விற்பனை தளத்தில் ரூ.1க்கு கிடைக்கும். அப்போது முதலில் ஆடர் செய்வோருக்கு மட்டும் கிடைக்க வாய்புள்ளது. இதில் 30 யூனிட்கள் மட்டுமே விற்பனைக்கு உள்ளன.

 ரெட்மி நோட் 5 புரோ கோல்டு :

ரெட்மி நோட் 5 புரோ கோல்டு :

ரெட்மி நோட் 5 புரோ கோல்டு 4ஜிபி+64ஜிபி உண்மையான விலை ரூ.14999 ஆகும். 24ம் தேதி மாலை மணிக்கு எம்ஐயின் தளத்திற்கு சென்று ஆடர் செய்தால் ரூ.1க்கு பெற முடியும். இதில், 10 யூனிட்கள் மட்டும் விற்பனைக்கு இருக்கின்றது.

எம்ஐ எல்இடி டிவி 4ஏ புரோ :

எம்ஐ எல்இடி டிவி 4ஏ புரோ :

எம்ஐ எல்இடி டிவி 4ஏ புரோ 123.2 சிஎம் (49-ன் ஸ்மார்ட் டிவியின் உண்மையான விலை ரூ.29,999 ஆகும். 25ம் தேதி மாலை 4 மணிக்கு எம்ஐ தளத்தில் ஆடர் செய்தால், ரூ.1 இந்த ஸ்மார்ட் டிவியை பெற முடியும். இதில் 5 யூனிட்கள் மட்டும் விற்பனைக்கு இருக்கின்றது.

 எம்ஐ ஏ2 ஸ்மார்ட் போன்:

எம்ஐ ஏ2 ஸ்மார்ட் போன்:

எம்ஐ ஏ2 ஸ்மார்ட் போன் உண்மையான விலை ரூ.16,999 ஆகும். தற்போது 25ம் தேதி மாலை 4 மணிக்கு எம்ஐயின் ஆன்லைனில் ஆடர் செய்தால் இந்த போனை ரூ.1க்கு பெற முடியும். இதில் 10 யூனிட்கள் மட்டும் விற்பனைக்கு இருக்கின்றது.

Best Mobiles in India

English summary
xiaomi mi diwali sale re 1 offer : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X