தீபாவளிக்கு எம்ஐயின் சிறப்பு தள்ளுபடியும், அசரவைக்கும் இ-வாலெட்களின் தள்ளுபடியும்.!
இந்த ஆப்பரானது 23ம் தேதி (நாளை) துவங்கி முதல் 25ம் தேதி வரை 3 நாளுக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஐ பொருட்களுக்கு தள்ளுபடி அறிவித்த போதிலும், இந்த இ-வாலெட்களை பயன்படுத்தி வாங்கும் போதும்
தீபாவளி பண்டிகை தற்போது கொண்டாடப்பட இருக்கின்றது. இதையொட்டி எம்ஐ நிறுவனம் பல்வேறு அசர வைக்கும் தள்ளுபடிகளையும் அறிவித்துள்ளது.
இதன் தீபாளிக்காக சிறந்த தள்ளுபடிகளையும் எம்ஐ அறிவித்து வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தியுள்ளது. மேலும் வாடிக்கையாளர்களுக்கு ஸமார்ட் போன், டிவி, இயர்போன், பவர் பேங், வீட்டு கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கும் அதிரடியாக விலை குறைத்துள்ளது.

இதை ஏராளமான வாடிக்கையாளர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் எம்ஐ நிறுவனத்தில் பொருட்கள் வாங்கும் போது, ஆன்லைனில் பணம் செலுத்தினால், எஸ்பிஐ வங்கி, பேடிஎம், அமேசான் பே, மொபி விக், எக்ஸிகோ உள்ளிட்ட இ-வாலெட் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு எம்ஐ பொருட்களை வாங்கினால் தள்ளுபடியை அறிவித்துள்ளன.
இந்த ஆப்பரானது 23ம் தேதி (நாளை) துவங்கி முதல் 25ம் தேதி வரை 3 நாளுக்கு நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எம்ஐ பொருட்களுக்கு தள்ளுபடி அறிவித்த போதிலும், இந்த இ-வாலெட்களை பயன்படுத்தி வாங்கும் போதும் நமக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதால், உண்மையாகவே நமக்கு தல தீபாளி தான்.

எம்ஐ தீபாவளி தள்ளுபடி:
தற்போது தீபாவளி பண்டிகை 23ம் தேதி (நாளை) முதல் 25ம் தேதி வரை நடக்கின்றது. இந்நிலையில் எம்ஐ நிறுவனம் டிவி, மொபைல் போன், ஸ்மார்ட் போன், பவர் பேங், இயர்போன், வீட்டு கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதனால் சுமார் ஒரு பொருட்களுக்கு சுமார் 3 ஆயிரம் வரை தள்ளுபடி கிடைக்கின்றது.
மேலும் அதோடு இல்லாமல் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் போது, நாம் இ-வாலெட்களை பயன்படுத்தினால் நமக்கு கூடுதலாகவும் சலுகைள் சுமார் ரூ. 7500 வரை கிடைக்கின்றது. அதன்படி எந்ததெந்த நிறுவனங்களில் வாங்கும் பொருட்களுக்கு தள்ளுபடியை அறிவித்துள்ளது என்று பார்க்கலாம்.!

எஸ்பிஐ பேங்க் கார்டு:
எம்ஐயின் பொருட்களை வாங்கும் போது எஸ்பிஐ வங்கியின் கிரெடிட் கார்டு பயன்படுத்தினால், ரூ.750 வரை தள்ளுபடியாக பெற முடியும் என்று எஸ்பி நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், குறைந்த பட்சம் ரூ.7500 வரையிலான பொருட்களுக்கும் தள்ளுபடியும் பெற முடியும்.

மொபிக்விக்:
எம்யின் பொருட்களை பொருட்களை மொபிக் விக்கில் பயன்படுத்தி பொருட்களை வாங்கும் போது, 20 சதவீதம் வரை சிறப்பு தள்ளுபடியாக பெற முடியும். அதோடு இல்லாமல் ரூ.2000 சூப்பர் கேஷ் தள்ளுபடியாகவும் பெறமுடியும்.

அமேசான் பே:
அமோசான் பேயை பயன்படுத்தி 32 இன்ச் மற்றும் 42 இன்ச் டிவியை வாங்கும் போது, நமக்கு ரூ.500 வரை சிறப்பு தள்ளுபடி கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இக்ஸிகோ:
இக்ஸிகோ இ-வாலெட்டை பயன்படுத்தி வாங்கும் போது, ரூ.3500 வரை பரிசு கூப்பனை பெற முடியும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

பேடிஎம் பே:
பேடி எம் பேயை பயன்படுத்தி ரெட்மி நோட் 5 புரோ மற்றும் போகோ எப்1 ஆகிய போன்களை வாங்கும் போது, ரூ.500ஐ கேஷ் பேக்காக பெறமுடியும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications