மார்ச் 27-ல் மி மிக்ஸ் 2எஸ் உடன் சியோமி மி ஏஐ ஸ்பீக்கர் மினியும் வெளியீடு.!
மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பை சியோமி நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது.
வரும் 27 ஆம் தேதி சியோமி மி மிக்ஸ் 2எஸ் தவிர, சியாமி மி ஏஐ ஸ்பீக்கர் மினியும் வெளியிடலாம் என்று தெரிகிறது.
மி மிக்ஸ் 2எஸ் ஸ்மார்ட்போனை வரும் மார்ச் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யலாம் என்ற எதிர்பார்ப்பை சியோமி நிறுவனம் ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் அந்நிறுவனம் வெளியிட்ட ஒரு டீஸரின் மூலம் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மி மிக்ஸ் 2எஸ் உடன் மி ஏஐ ஸ்பீக்கர் என்ற ஒரு புதிய வகையும் வெளியிடப்படலாம் என்ற புதிய தகவல் கிடைத்துள்ளது. இந்த ஸ்பீக்கரின் புதிய பதிப்பிற்கு, லிட்டில் லவ் ஸ்டூடெண்ட்ஸ் மினி எடிஷன் என்று பெயரிடப்படலாம் என்று கூறப்படுகிறது. இதன் பெயருடன் இந்த ஸ்பீக்கரின் சில படங்களும் ஆன்லைனில் கசிந்துள்ளன.

கிஸ்மோசீனா பத்திரிக்கை விஐபோ மூலம் வெளியிட கசிவு படங்களைப் பார்க்கும் போது, சியோமியின் ஸ்மார்ட் ரைஸ் குக்கர் சிறிய அளவில் இருப்பது போன்று காட்சி அளிக்கிறது. அதன் மேற்பகுதியில், ஒரு வட்டத்தை சுற்றிலும் அமைந்த நான்கு பொத்தான்களைக் கொண்ட ஒரு தொடர்பு பேட் இருக்கிறது. இதில் இரண்டு பொத்தான்கள் ஒலி அளவை கட்டுபடுத்தவும் மற்ற இரண்டு பொத்தான்கள் டிராக்கை மாற்றி இயக்கவும்/ இடைநிறுத்தம் செய்யவும் பயன்படுகிறது.
சியாமி மி ஏஐ ஸ்பீக்கர் மினி பதிப்பில் மேற்கூறிய மியூஸிக் ப்ளேபேக்கை தவிர, ரேடியோ-ஆன்-டிமான்டு, ஆடியோபுக்ஸ், டாக் ஷோஸ், வாய்ஸ் அசிஸ்டெண்ட் மற்றும் கல்வி சார்ந்த பொருட்கள் ஆகியவை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைக்கு இந்த ஸ்பீக்கரை குறித்து மேற்கொண்டு எந்த தகவலும் இல்லை.

இது, சியோமி நிறுவனம் வெளியிடும் இரண்டாவது ஸ்மார்ட் ஸ்பீக்கர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலாவதாக, கடந்த 2016 ஜூலை மாதம் ஆறு-மைக்ரோபோன் உடன் கூடிய மி ஏஐ ஸ்பீக்கர் அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை எதுவும் உறுதியாக கூற முடியாவிட்டாலும், இதன் முன்னோடியை போல, அந்நிறுவனம் வெளியிட்ட அனைத்து ஸ்மார்ட் ஹோம் தயாரிப்புகளுக்கும் மையமாக இந்த ஸ்மார்ட்போனும் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே சியோமி நிறுவனத்தின் தயாரிப்பு பட்டியலில் ஒரு ஸ்மார்ட் ஸ்பீக்கர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருக்கும் பட்சத்தில், விலைக் குறைந்த சந்தையை கருத்தில் கொண்டு அடுத்து வரவுள்ள இந்த மினி பதிப்பு களமிறக்கப்பட உள்ளது. அமேசான் நிறுவனம் கூட இதே பாதையை பின்பற்றி, தனது எக்கோ வரிசையில் அமைந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்களில், வெவ்வேறு விதமான விலை நிர்ணயத்தில் அமைந்த 3 வகைகளை வெளியிட்டது.


ஏற்கனவே இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் சந்தையில் கூகுள், ஆப்பிள், அமேசான் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில், வேறு பல நிறுவனங்களும் இந்த பிரிவில் தங்களின் பங்களிப்பை அளிக்க முயற்சித்து வருகின்றன. இறுதியாக, சியோமியின் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் சந்தையை வந்து எட்டும் போது, கடும் போட்டியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை.


Click it and Unblock the Notifications