இந்தியர்களுக்காக ரூ.1000 தள்ளுபடி விலையில் சியாமி Mi A1 மாடல் ஸ்மார்ட்போன்

By Siva
|

சியாமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட்போன் Mi A1 மாடல் தற்போது இந்திய வாடிக்கையாளர்களுக்காக நிரந்தரமாக ரூ.1000 தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது. இந்த மாடலின் ஒரிஜினல் விலை ரூ.14999 என்று இருந்த நிலையில் இனிமேல் இதன் விலை ரூ.13999 மட்டுமே

இந்தியர்களுக்காக ரூ.1000 தள்ளுபடி விலையில் சியாமி Mi A1 மாடல் ஸ்மார்ட்

கடந்த செப்டம்பர் மாதம் சியாமி நிறுவனத்தின் இந்த Mi A1 மாடல் ஸ்மார்ட்போன் வெளியானபோது வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இந்நிறுவனத்தின் புகழ்மிக்க மாடல்களில் ஒன்றாக மாறியது. இந்த நிலையில் சியாமியின் இந்திய மேனேஜிங் டைரக்டர் மனுகுமார் ஜெயின் இந்த தள்ளுபடி விவரத்தை அறிவித்துள்ளார்

அவர் தனது டுவிட்டரில், Mi A1 ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி.. இந்தியாவில் Mi A1 மாடலுக்கு ரூ.1000 தள்ளுபடி. இந்த தள்ளுபடி வசதியை நீங்கள் பிளிப்கார்ட் மற்றும் மி.காம் இணையதளங்கள் மூலம் ஆர்டர் செய்யும்போது பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்

சியாமி நிறுவனத்தின் இந்த சலுகை அறிவிப்பு தவிர, இந்த மாடல் போனை நீங்கள் ப்ளிப்கார்ட் மூலம் ஆர்டர் செய்து பணத்தை ஆக்சிஸ் வங்கியின் கிரெடிட் கார்ட் மூலம் செலுத்தினால் உங்களுக்கு கூடுதலாம 5% தள்ளுபடி சலுகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெட்மீ பாவம், ஒப்போ ரொம்ப பாவம்: அடித்து நொறுக்கும் நோக்கியா 6 (2018).!ரெட்மீ பாவம், ஒப்போ ரொம்ப பாவம்: அடித்து நொறுக்கும் நோக்கியா 6 (2018).!

அதுமட்டுமின்றி ஒரு நயா பைசா இன்று தவணை முறையில் மாதம் ரூ.1556 செலுத்தியும் இந்த போனை பெற்று கொள்ளலாம். மேலும் இந்த போனை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் என்ற சலுகையிலும் பெற்று கொள்ளலாம் என பிளிப்கார்ட்தெரிவித்துள்ளது

இந்த மாடல் குறித்த விவரங்களை பார்த்தோம் என்றால் இதில் 5.5 இன்ச் HD டிஸ்ப்ளே, ஆக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராஸசர், 4GB ரேம் மற்றும் 64 GB இண்டர்னல் ஸ்டோரேஜ் ஆகிய வசதியும் 128 GB மெமரி கார்ட் போடும் வசதியும் உண்டு

12MP பின்கேமிரா, 5 MP செல்பி கேமிராவும் உள்ள இந்த போனில் பிக்சர் தெளிவாக பதியும் வகையில் நவீன டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது

மேலும் இந்த போனில் 3800mAH பேட்டரிஉம், ஆண்ட்ராய்டு 7.1.2 நெளக்ட் ஓஎஸ் ஆகியவையும் உண்டு. ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ வகை ஸ்மார்ட்போனான இந்த மாடலில் ஆடியோ தரத்திற்காக 10V ஸ்மார்ட் ஆம்ப்ளிஃபையர் உள்ளது.

டூயல் சிம், 4G VoLTE, வைபை, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் C, 3.5மிமி ஹெட்போன் ஜாக், மேக்னோமீட்டர், பிராக்ஸிமிட்டி சென்சார் உள்பட இன்னும் பல வசதிகள் கொண்ட இந்த மாடலின் எடை 168 கிராம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Manu Kumar Jain, Xiaomi India's Managing Director has now announced that Xiaomi Mi A1 is now getting a permanent price cut of Rs. 1,000 in India.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X