தீப்பிடித்து வெடித்துச் சிதறிய சியோமி ஸ்மார்ட் போன்.! ஸ்மார்ட் போன் பயனர்கள் அதிர்ச்சி.!

சென்ற வாரம் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட் போன், ஒரு பெண்ணின் கைப்பையில் தீப்பிடித்து வெடித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

|

சென்ற வாரம் சாம்சங் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட் போன், ஒரு பெண்ணின் கைப்பையில் தீப்பிடித்து வெடித்த சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அச்சம்பவம் குறித்து அந்தப் பெண் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்து, சாம்சங் நிறுவனத்திடம் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

தீப்பிடித்து வெடித்துச் சிதறிய சியோமி ஸ்மார்ட் போன்.!

அச்சம்பவத்தைத் தொடர்ந்து நேற்று சியோமி நிறுவனத்தின் சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் சார்ஜிங் செய்யும் பொது வெடித்த சம்பவம், ஸ்மார்ட் போன் பயனர்களைப் பயத்தில் உறையச் செய்திருக்கிறது.

சியோமி மி ஏ1

சியோமி மி ஏ1

சியோமி மி ஏ1 ஸ்மார்ட் போன் சார்ஜ் செய்யும் போது தீப்பிடித்து வெடித்த சம்பவத்தை பற்றிய தகவலை, ஸ்மார்ட் போன் உரிமையாளரின் நண்பர் நேற்று MIUI ஃபோரம் தளத்தில் புகைப்படத்துடன் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவில் அவர், 8 மாதங்களுக்கு முன் இந்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் வாங்கப்பட்டது என்றும் நேற்று வரை எந்தப் பிரச்சினையும் தரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.

தீப்பிடித்து வெடித்துச் சிதறியது

தீப்பிடித்து வெடித்துச் சிதறியது

இதுவரை ஓவர்ஹீட் பிரச்சனை கூட ஆனதில்லை என்றும், ஆனால் நேற்று தூங்குவதற்கு முன்னாள் சார்ஜ் செய்வதற்காக சார்ஜரில் கனெக்ட் செய்து விட்டுத் தூங்க சென்ற நேரம், ஸ்மார்ட் போன் எதிர்பாராத விதமா தீப்பிடித்து வெடித்துச் சிதறியது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இழப்பீடு

இழப்பீடு

அதிர்ஷ்டவசமாக ஸ்மார்ட் போன் உரிமையாளருக்கு எந்த தீ காயமும் ஏற்படவில்லை. தீப்பிடித்து வெடித்த சியோமி மி ஏ1 ஸ்மார்ட்போன் இன் புகைப் படங்களை சியோமி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் அவர் பதிவேற்றம் செய்து இழப்பீடு கேட்டும் தனது ஸ்மார்ட் போன்னை மாற்றித் தரும் படி கேட்டிருக்கிறார். ஆனால் இப்பொழுது வரை சியோமி நிறுவனம் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

முன்னெச்சரிக்கை நடவடிக்கை:

பாதுகாப்பாக சார்ஜிங் செய்து, உங்களின் ஸ்மார்ட் போன்னை பாதுகாப்பது எப்படி?

- சார்ஜிங் செய்யும் பொது உங்களின் ஸ்மார்ட் போன் ஓவர் ஹீட் ஆனால் உடனே சார்ஜ்ஜரை டிஸ்கனெக்ட் செய்யுங்கள்.
- சார்ஜிங் செய்யும் பொது ஏதேனும் மெல்லிய சத்தம் கேட்டால் உடனே சார்ஜ்ஜரை டிஸ்கனெக்ட் செய்யுங்கள்.
- உங்களின் ஸ்மார்ட் போன் ஹீட் ஆகும் பட்சத்தில், ஸ்மார்ட் போன் கூல்டௌன் ஆகும் வரை பொறுத்திருந்து சார்ஜிங் செய்து கொள்ளுங்கள்.
- மிக முக்கியமான பாதுகாப்பு முயற்சிகளில் ஒன்று, ஸ்மார்ட் போன் நிறுவனம் வழங்கும் ஒரிஜினல் சார்ஜர்களை மட்டும் பயன்படுத்துங்கள்.
- தூங்கும் பொது ஸ்மார்ட் போன்னை அருகில் வைத்து சார்ஜிங் செய்யும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்துவிடுங்கள்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi A1 Allegedly Explodes While Charging Next to Sleeping Owner : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X