2018ஆம் ஆண்டின் முதல் காலிறுதியில் கையில் தவழும் சியாமி மி7

சியாமி நிறுவனம் மிக விரைவில் மி7 மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது

By Siva
|

சியாமி மி6 மாடல் வெளிவந்து ஒருசில மாதங்களே ஆகியுள்ள நிலையில் இந்த மாடல் உலகம் முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள்ளாகவே சியாமி நிறுவனம் மிக விரைவில் மி7 மாடலை அறிமுகம் செய்யவுள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த மாடல் அடுத்த தலைமுறையினர்களுக்கான மாடல் என்று கூறப்படுகிறது.

2018ஆம் ஆண்டின் முதல் காலிறுதியில் கையில் தவழும் சியாமி மி7

சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்ற செய்திகளின்படி சியாமி மி 7 மாடல் ஸ்மார்ட்போன் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 845 புராஸசர் என்றும், இது இளையதலைமுறையினர்களுக்கான பொக்கிஷம் என்றும் கூறப்படுகிறது.

மேலும் இந்த போன் 6 இன்ச் OLED டிஸ்ப்ளே இருக்க வாய்ப்பு இருப்பதாகவும், இந்த டிஸ்ப்ளேவை சாம்சங் உருவாக்கி தருவதாகவும் தெரிகிறது. இந்த மாடம் 2018ஆம் ஆண்டின் முதல் காலிறுதி ஆண்டில் வெளிவர அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எல்ஜி G7 மாடல்கள் இதே ஸ்னாப்டிராகன் 845 பிராஸசரை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த சியாமி மி 7 மாடல் ஸ்மார்ட்போனின் அடுத்த அம்சமாக இதில் 6GB/8GB ரே இருக்கும் என்றும், டூயல் பின்கேமிராவில் வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் டெலிபோட்டோ லென்ஸ் இருக்கும் என்று கருதப்படுகிறது. அடுத்த தலைமுறையினர் விரும்பும் வகையில் செராமிக் உலோகத்தில் இந்த போன் அமைந்திருக்கும்

பிஎஸ்என்எல் 5ஜி புரட்சி : மிகப்பெரிய ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் 5ஜி சேவை.!பிஎஸ்என்எல் 5ஜி புரட்சி : மிகப்பெரிய ஆப்டிகல் பைபர் நெட்வொர்க் மூலம் 5ஜி சேவை.!

இந்த சியாமி மி 7 மாடல் ஸ்மார்ட்போன் மாடலின் டிஸ்ப்ளே பெரிய அளவில் முழுவதும் உபயோகப்படுத்தும் வகையிலும் இருக்கும். மேலும் டிஸ்ப்ளேவின் முன்பக்கத்தில் ஹோம் பட்டன் இருக்கும். அதில் பிங்கர்பிரிண்ட் சென்சாரும் இருக்கும் வகையில் அமைக்கப்படுகிறது.

ஆனாலும் 2018ஆம் ஆண்டு வெளிவரவுள்ள இந்த சியாமி மி 7 மாடல் ஸ்மார்ட்போனின் விபரங்கள் குறித்து தற்போதே ஆராய்ச்சி செய்வது சரியானது அல்ல. மேற்கண்ட விபரங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் உலவி வரும் தகவல்கள் மட்டுமே, எதுவுமே அதிகாரபூர்வ தகவல்கள் அல்ல.

இன்னும் ஒருசில மாதங்களில் சியாமி நிறுவனமே இந்த சியாமி மி 7 மாடல் ஸ்மார்ட்போன் மாடல் குறித்து சரியான தகவலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
The Xiaomi Mi 7 with a 6-inch OLED screen and Qualcomm Snapdragon 845 SoC is believed to be launched in Q1 2018.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X