சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஒத்திவைப்பு.!
மி 7 சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன் ஆன சியோமி மி 7 சாதனத்தில் புதிய வயர்லெஸ் சார்ஜ் வசதி இடம்பெறலாம். அப்படியானால் இந்த அம்சம் பெறும் முதல் சியோமி ஸ்மார்ட்போனாக அது திகழும்.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது, சியோமி நிறுவனம் அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடைபெறும் எம்டபள்யுசி 2018-நிகழ்ச்சியில் சியோமி மி 7 அறிமுகம் செய்ய இருந்த நிலையில், இப்போது அதன் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் ஆன்லைனில்
வெளிவந்துள்ளது.

சியோமி நிறுவனத்தின் மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போனின் அடுத்த மாதம் நடைபெறும் எம்டபள்யுசி 2018-நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு சியோமி மி 7 ஸ்மார்ட்போன் மாடல் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.

மி 7
சியோமி நிறுவனத்தின் வரவிருக்கும் முதன்மை ஸ்மார்ட்போன் ஆன சியோமி மி 7 சாதனத்தில் புதிய வயர்லெஸ் சார்ஜ் வசதி இடம்பெறலாம். அப்படியானால் இந்த அம்சம் பெறும் முதல் சியோமி ஸ்மார்ட்போனாக அது திகழும்.

பின்புற கண்ணாடி வடிவமைப்பு
மி 7 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் முன்னிலை பெறும் பட்சத்தில் அக்கருவிஅநேகமாக பின்புற கண்ணாடி வடிவமைப்பும் பெறும் என்று அர்த்தம். இந்த மி 7, அடுத்த 2018-ஆம் ஆண்டின் காலிறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845
சியோமி மி 7 ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில், க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845 கொண்டு இயங்கலாம், 6 அங்குல ஓல்இடி டிஸ்பிளே இடம்பெறலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எல்ஜி ஜி 7
2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படும் சியோமி மி 7, அதே காலப்பகுதியில் அறிவிக்கப்படும் ஸ்மார்ட்போன்களான சாம்சங் கேலக்ஸி எஸ்9 மற்றும் எல்ஜி ஜி 7 ஆகியவைகளுக்கு காடுபோட்டியாக அமையலாம்.


6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம்
மேலும் வெளியான லீக்ஸ் தகவலின் கீழ், மி 7 ஆனது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் - என்ற இரண்டு வகைகளில் அறிமுகமாகலாம் மற்றும் இந்த சாதனம் மி 6 போன்ற இரட்டை பின்புற கேமரா அமைப்பு கொண்டுவரும் என்றும் கூறப்படுகிறது.

இரட்டை பின்புற கேமரா அமைப்பு
அதாவது ஒரு பரந்த கோணம் லென்ஸ் மற்றும் ஒரு டெலிபோட்டோ லென்ஸ் கொண்டிருக்க வேண்டும். மேலும் கூறப்படும் இந்த மி 7 ஆனது கண்ணாடி மற்றும் பீங்கான் உடல் வடிவமைப்பு கொண்ட ஒரு புஃல் ஸ்க்ரீன் டிஸ்பிளே மற்றும் திரையில் கைரேகை சென்சார் ஒன்றும் இணைக்கப்பெற்று வெளியாகலாம்.


Click it and Unblock the Notifications








