Home
News

வரும் மார்ச்சில் சியோமி மி 7 மற்றும் மி 7 பிளஸ் அறிமுகம்?

By Jijo Gilbert

சியோமி நிறுவனத்தின் அடுத்து வரவுள்ள முன்னணி ஸ்மார்ட்போனான மி 7, ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓசியை பயன்படுத்தி இயங்கும் என்று அந்நிறுவன சிஇஓ தரப்பில் இருந்து ஏற்கனவே நமக்கு உறுதி கிடைத்துள்ளது. மேலும், இந்த ப்ராஸசரைக் கொண்ட முதல் சீன ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் மார்ச்சில் சியோமி மி 7 மற்றும் மி 7 பிளஸ் அறிமுகம்?

அதே நேரத்தில், சீன இணையதளமான கிஸ்மோசீனா மூலம் மைடிரைவர்ஸில், மி 7 ஸ்மார்ட்போன் இரண்டு அளவுகளில் அறிமுகப்பட்டு அவை இரண்டும் ஒரே நேரத்தில் வெளியிடப்படப் போவதாக, ஒரு புத்தம் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்தாண்டு ஏப்ரல் மாதத்தில் சியோமி மி 6 ஸ்மார்ட்போனை சியோமி நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த அறிமுகம் நடைபெறும் முன், இதனோடு மி 6 பிளஸையும் அந்நிறுவனம் வெளியிடலாம் என்ற யூகங்கள் உலா வந்தன.

ஆனால் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் தேவைக்கு ஏற்ப இல்லாத நிலையில், மி 6 பிளஸ் வகையை வெளியிடுவதில் இருந்து சியோமி நிறுவனம் பின்வாங்கியது. இந்நிலையில் மி 7 பிளஸின் வெளியிடு அடுத்தாண்டு நடைபெறலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

முந்தைய யூகங்களின் அடிப்படையில் பார்த்தால், மி 7 ஸ்மார்ட்போன் 5.65 இன்ச் திரையை பெற்றிருக்கும் என்று நம்பப்படுகிறது. அதே நேரத்தில் இதன் பிளஸ் வகையில் இன்னும் சற்று பெரிதாக 6.01 இன்ச் திரை காணப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இவ்விரண்டு ஃபோன்களின் திரைகளும் 18.9 விகிதத்தில் அமைந்து, ஒரு முழு திரை வடிவமைப்பை பெற்றிருக்கலாம் என்று தெரிகிறது. பேட்டரியைத் திறனைப் பொறுத்த வரை, மி 7-ல் 3200எம்ஏஹெச்சும், மி 7 பிளஸில் 3500எம்ஏஹெச்சும் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விரண்டு சியாமி ஸ்மார்ட்போன்களிலும் ஒரு மெட்டல் மற்றும் கண்ணாடி கட்டமைப்பு காணப்பட்டு, இவற்றிற்கு ஒரு பிரிமியம் தோற்றத்தை அளிப்பதோடு, இரண்டிலும் வயர்லெஸ் சார்ஜிங் செய்யும் அம்சம் காணப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹார்ட்வேரைப் பொறுத்த வரை, ஸ்னாப்டிராகன் 845 எஸ்ஓஇ உடன் 6ஜிபி ரேம் கூட்டிணைந்து செயல்படலாம் என்ற கருத்துக்கள் நிலவி வருகின்றன.

மி 6-யைப் போல, சோனி ஐஎம்எக்ஸ்380 மற்றும் ஐஎம்எக்ஸ்350 என்று இரட்டை பின்பக்க கேமராக்களைப் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏஐ திறன்களின் உதவியைப் பெற்று, போட்டோகிராஃப்பி அனுபவம் மேலும் செறிவூட்டப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மி 7 மற்றும் மி 7 பிளஸில் பயன்படுத்த வேண்டிய குவால்காமின் நவீன சிப்செட்டை போதுமான அளவுக்கு சியோமி நிறுவனம் கையிருப்பில் வைத்திருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் இந்த ஸ்மார்ட்போன்களை உருவாக்கி, விற்பனைக்கு வெளியிடுவதில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

மி 7க்கு 2699 யென் (ஏறக்குறைய ரூ.26,000) மற்றும் மி 7 பிளஸிக்கு 2999 யென் (ஏறக்குறைய ரூ.29,999) என்று விலை நிர்ணயிக்கப்படலாம் என்பதோடு, அடுத்தாண்டு மார்ச் மாதத்தை ஓட்டி இவை விற்பனைக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 7 and Mi 7 Plus are expected to be launched at the same time in March next year.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X