சியோமி எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் ஆகஸ்டு 3-ம் தேதி வெளியாகும் என தகவல்

|

சியோமி நிறுவனத்தின் புதிய எம்.ஐ. 6 ஸ்மார்ட்போனின் ஸ்பெஷல் பதிப்பான சில்வர் எடிஷன் வெளியீட்டு தேதியை அந்நிறுவனம் அதிகாப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இது சார்ந்த முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

சியோமி எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் ஆகஸ்டு 3-ம் தேதி வெளியாகும் என தகவல்

சியோமி நிறுவனத்தின் எம்.ஐ. 5எக்ஸ் ஸ்மார்ட்போன் மற்றும் எம்.ஐ.யு.ஐ. 9 ரோம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இத்துடன் அந்நிறுவனத்தின் எம்.ஐ ஏ.ஐ. ஸ்பீக்கர் ஒன்றும் அறிமுகம் செய்யப்பட்டது.

அறிமுக விழாவில் சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் சிறப்பு பதிப்பு வெளியிடப்படும் என அறிவித்தார். எம்.ஐ. 6 சில்வர் வேரியன்ட் மற்றும் பல்வேறு மாடல்கள் ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும் சில்வர் மாடல் விற்பனைக்கு வராமல் வைக்கப்பட்டிருந்தது.

ஜியோபோன் எதிரோலி : விரைவில் வருகிறது அட்காசமான ஐடியா மொபைல் போன்.!ஜியோபோன் எதிரோலி : விரைவில் வருகிறது அட்காசமான ஐடியா மொபைல் போன்.!

சியோமி எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி மெமரி கொண்டுள்ளது. இதன் விலை 3999 யுவான் அதாவது இந்திய மதிப்பில் ரூ.38,000 வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் 100 யுனிட்கள் மட்டுமே தயாரிக்கப்படும் என்றும் இதற்கான விற்பனை ஆகஸ்டு 3-ம் தேதி நடைபெற இருக்கிறது.

புதிய சியோமி எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் சிறப்பு வடிவமைப்பு வழங்கப்படுகிறது. இந்த மாடல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதோடு, இதன் கிளாஸ் கவரிங் அல்ட்ரா-ரிஃப்லெக்டிவ் மிரர் ஃபினிஷ் கொண்டுள்ளது. சில்வர் எடிஷன் கைப்பேசியில் புதிய அனுபவத்தை வழங்குகிறது.

இதன் பாடி வேக்யூம் சேம்பர் மூலம் ஸ்பெஷல் எலெக்ட்ரோபிளேட்டிங் செய்யப்படுகிறது. சிறிய தூசு கூட ஸ்மார்ட்போனினை பயனற்றதாக மாற்றிவிடுகிறது. குறிப்பாக எம்.ஐ. 6 சில்வர் எடிஷன் தயாரிப்பு 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது என லெய் ஜூன் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

Read more about:
English summary
It has been announced that only 100 units of the Xiaomi Mi 6 Silver edition will be made available and the sale will happen on August 3.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X