Home
News

சியோமி மி 6 : என்ன விலை, என்னென்ன அம்சங்கள், எப்போது வெளியீடு.?

சியோமி மி 6 கருவியின் விலை என்ன மற்றும் எப்போது வெளியிடப்படும் போன்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

By Muthuraj

ஒரு வருடத்திற்கு முன்பு சியோமி மி 5 அக்கருவி மிகவும் அழகான, சக்தி வாய்ந்த மற்றும் திறன் மிக்க ஒரு ஸ்மார்ட்போனாக அறிமுகமானது. சியோமி நிறுவனத்தின் பரந்த வாடிக்கையாளர்களை திருப்தி படுத்தும் நோக்கத்தில் தொடர்ச்சியாக வெவ்வேறு பதிப்புகளை அறிமுகம் செய்தது.

சியோமி நிறுவனத்திடம் இருந்து அடுத்து மிகவும் எதிர்பார்க்கப்படும் கருவியான சியோமி மி 6 ஸ்மார்ட்போன் பற்றிய பல சுவாரசியமான லீக்ஸ் தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இப்பொது மி 6 கருவியின் விலை என்ன மற்றும் எப்போது வெளியிடப்படும் போன்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

மார்ச் மாதம்

மார்ச் மாதம்

சியோமி நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் இணை நிறுவனர் ஆன லி வாங்ஜியாங், மார்ச் மாதம் அறிவிக்கப்படும் ஒரு ஆச்சரியமான தயாரிப்பாக மி 6 இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விவரம் கடந்த ஜனவரி 15-ஆம் தேதி நடைபெற்ற கீக் பார்க் இன்னோவேஷன் மாநாட்டின் மூலம் தெரியவந்துள்ளது.

விலை

விலை

உடன் லி வாங்ஜியாங்-ன் கருத்துப்படி சியோமி மி 6 கருவியானது அதன் விலை பாரம்பரியத்தை தொடர்ந்து சுமார் ரூ.20,000/- என்ற விலை கொண்டிருக்கும் உடன் அதன் ஆச்சரியங்கள் மிக்க அம்சங்கள் கொண்டிருக்கும் என்றும் தெரிய வந்துள்ளது.

லீக்ஸ்

லீக்ஸ்

இக்கருவியின் சரியான வெளியீட்டு தேதி மற்றும் விலை பற்றிய தகவல்களை சியோமி நிறுவனம் அடைப்புக்குள் வைத்திருக்க மறுபக்கம் இக்கருவி சார்ந்த பல விவரங்கள் இன்டர்நெட்டில் உலாவிக் கொண்டிருக்கிறது.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி

அப்படியாக மி 6 கருவியானது மீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்டு வரும் மற்றும் இந்த சாதனம் ஒரு உலோக உடல் மற்றும் முந்தைய சியோமி போன்களில் அடக்கமான மீயொலி கைரேகை சென்சார் இடம்பெறும் என்று நம்பப்படுகிறது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மேலும் அறிக்கைகளின்படி டிஸ்ப்ளே வகை மற்றும் ரேம் திறன் அடிப்படையில் சியோமி மி 6 கருவியானது இரண்டு வகைகளில் வெளியாகும் என்று கூறப்படுக்கிறது. ஒரு மாறுபாட்டில் வளைந்த ஓல்இடி டிஸ்ப்ளே இடம்பெறும் வாய்ப்பு உள்ளது, மற்றொரு கருவியானது எல்சிடி டிஸ்ப்ளே கொண்டு வரும் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு, பேட்டரி திறன்

ஆண்ட்ராய்டு, பேட்டரி திறன்

தட்டையான திரை மாறுபாடு கொண்ட கருவி 4ஜிபி ரேம் கொண்டிருக்கும் மற்றொரு மாறுபாடானது 6ஜிபி ரேம் கொண்டிருக்கும் வாய்ப்பு உள்ளது. உடன் மி 6 அக்கருவியானது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு வெளியாகும் மற்றும் 3000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டிருக்கும் என்றும் லீக்ஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூன்று வேறுபாடுகள்

மூன்று வேறுபாடுகள்

முற்றிலும் புதியதொரு லீக் தகவல் ஆனது சியோமி மி 6 கருவியானது மூன்று வெவ்வேறு விலை மூன்று வேறுபாடுகள் வரும் என்கிறது. முதல் மாறுபாடு ஹெலியோ எக்ஸ்30 கொண்டு சுமார் 290டாலர்கள் என்ற விலையிலும், இரண்டாவது மாறுபாடு வலிமைமிக்க ஸ்னாப்டிராகன் 835 கொண்டு சுமார் 360 டாலர்கள் என்ற விலையிலும், மற்றும் மூன்றாவது மாறுபாடானது சமீபத்திய க்வால்காம் சிப்செட் கொண்டு (சாம்சங் கேலக்ஸி எஸ்7 எட்ஜ் போன்ற) டூவல் எட்ஜ் கர்வுடு டிஸ்ப்ளே கொண்டு 434 டாலர்கள் என்ற விலை நிர்ணயத்தில் வெளியாகும் என்கிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

ரெட்மீ நோட் 4 : ப்ளிப்கார்டில் பிரத்தியேக வெளியீடு எப்போது.!?

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 6 price and launch date revealed by company VP. Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X