பிரீமியம் மாறுபாடாக களமிறங்கும் சியோமி மி 6 (லீக் அம்சங்கள்).!
மி 6 கருவி சார்ந்த ஒரு புதிய கசிவு ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களுடன் அதன் வடிவமைப்பு, விலை ஆகியவைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது.
2017-ஆம் ஆண்டில் வெளியாகப்போகும் சியோமி நிறுவனத்தின் தலைமை ஸ்மார்ட்போன் ஆன மி 6 கருவியானது பார்சிலோனாவில் நிகழப்போகும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017 நிகழ்வில் மூன்று வகைகளில் அறிமுகமாகும்என்று வதந்திகள் கிளம்பின அதன் பின்னர் எம்டபுள்யூசி 2017-ல் சியோமி அதன் மி 6 கருவியை வெளியிடாது என்ற உறுதியான தகவல் கிடைக்கப்பெற்றது.
இப்போது மி 6 கருவி சார்ந்த ஒரு புதிய கசிவு ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்களுடன் அதன் வடிவமைப்பு, விலை ஆகியவைகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது, அவைகள் என்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.

சியோமி மி 6 டிஸ்ப்ளே மற்றும் வடிவமைப்பு
இந்த லீக் தகவலில் மிகவும் முக்கியமாக சாதனத்தின் பீங்கான் உடல் வடிவமைப்பானது ஆனது கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பெஸல்லெஸ் மாறுபாடு சியோமி மி மிக்ஸ் கருவி போன்றே காட்சியளிப்பது தான். மிகவும் விலையுயர்ந்த இந்த மி 6 மாறுபாட்டில் 6ஜிபி, பீங்கான் உடல், ஒரு இரட்டை முனைகள் கொண்ட வளைந்த திரை கொண்டிருக்கும். உடன் 4ஜிபி ரேம் மாறுபாட்டில் இரண்டு பிளாட் திரை கொண்ட கருவிகளும் வெளியாகலாம்

செயலி
முன்பு குறிப்பிட்டது போல மி 6 கருவியானது 3 மாறுபாட்டில் வெளியாகலாம் அதாவது இரண்டு கருவிகள் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டும் மற்றொன்று மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்30 செயலி கொண்டும் வெளியாகலாம்.

கேமரா, பேட்டரி, சேமிப்பு
ஒளியியல் துறையை பொறுத்தவரை, சோனி ஐஎம்எக்ஸ்362 சென்சார் கொண்ட ஒரு 12எம்பி பின்புற கேமரா எதிர்பார்க்கப்படுகிறது. உடன் ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி திறன் கொண்டு சமீபத்திய ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும். மேலும் அறிக்கையின்படி மி 6 ஸ்மார்ட்போன் ஆனது 128ஜிபி மற்றும் 256ஜிபி சேமிப்பு திறன் விருப்பங்கள் கொண்டு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெளியீட்டு தேதி
மி 6 கருவி எம்டபுள்யூசி 2017 நிகழ்வை சுற்றி வெளியாகலாம். குறிப்பாக இக்கருவியின் வெளியீடு கேலக்ஸி எஸ்8 மற்றும் எல்ஜி ஜி6 அக்கருவிகள் அறிமுகமான பிறகு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விலை நிர்ணயம்
மி 6 கருவியின் மீடியா டெக் செயலி மாறுபாடு சுமார் ரூ.19,800/- விலை நிர்ணயம் பெறலாம் மற்றும் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட்கொண்ட மாறுபாடு சுமார் ரூ.24,800/- என்ற விலை நிர்ணயத்தையும், இரட்டை முனைகள் வளைந்த காட்சி கொண்ட மாதிரியானது சுமார் ரூ.29,800/- என்ற விலையில் விற்கப்படலாம்.

மேலும் படிக்க
பிப்ரவரியில் களம் காணுமா சியோமி மி 5சி.? எதிர்பார்ப்புகள் என்னென்ன.?


Click it and Unblock the Notifications