ஆகஸ்ட் 1-ல் வெளிவருகிறது சியாமியின் ''சியாமி மி 5x''

By Siva
|

சியாமி நிறுவனத்தின் அடுத்த மாடலான 'சியாமி மி 5x' மாடல் ஜூலை 26ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் சியாமி ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர். ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்களுக்கு போட்டியாக உள்ள சியாமி நிறுவனத்தின் அடுத்த மாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 1-ல் வெளிவருகிறது சியாமியின் ''சியாமி மி 5x''

தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி இந்த 'சியாமி மி 5x' மாடல் ஸ்மார்ட்போன் ஆகஸ்ட் மாதம் 1ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளிவரவுள்ளதாக தெரிகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில் இந்த மாடலை 12 மணி நேரத்தில் 100,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர்.

இதிலிருந்தே இந்த 'சியாமி மி 5x' மாடலுக்கு கிடைத்திருக்கும் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளலாம், இந்த நிலையில் தற்போதைய ஒரே கேள்வி இந்த மாடல் போன் மற்ற நாடுகளில் எப்போது வெளியாகும் என்பதுதான்

ஆனாலும் இந்த 'சியாமி மி 5x' மாடல் ஸ்மார்ட்போன் நம் கைகளில் தவழ அதிக நாட்கள் காத்திருக்க வேண்டியதில்லை என்பது மட்டும் உறுதி. இந்நிலையில் இந்த போனின் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்த்தோம் என்றால் இந்த மாடல் 5.5 இன்ச் FHD டிஸ்ப்ளேவுடன் 1080P ரெசலூசனை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த 'சியாமி மி 5x' மாடல் ஸ்மார்ட்போன் குவால்கோம் ஸ்னாப்டிராகன் 626 பிராஸசர் மற்றும் 4GB ரேம் கொண்டது. மேலும் சமீபத்தில் ஒருசில இணையதளங்களில் வெளிவந்த தகவலின்படி இந்த மாடல் ஸ்னாப்டிராகன் 660 SoC மற்றும் 6GB ரேம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. மேலும் கேமிராவை பொருத்தவரையில் இந்த மாடலில் டூயல் பின்பக்க கேமிரா உள்ளது.

மேலும் இந்த 'சியாமி மி 5x' மாடல் ஸ்மார்ட்போனில் 3000 mAh பேட்டரி அம்சமும், 3.55mm ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப்C ஃபோர்ட்டும் உள்ளது. இந்த போனின் சீன விலை 1999 யான் என்றும் இந்திய மதிப்பில் சுமார் ரூ.19000 இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
The Xiaomi Mi 5X will get unveiled on July 26 in China.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X