பிப்ரவரியில் களம் காணுமா சியோமி மி 5சி.? எதிர்பார்ப்புகள் என்னென்ன.?
சியோமி ரெட்மீ நோட் 4 கருவியை தொடர்ந்து சியோமி மி 5சி கருவி வரும் பிப்ரவரி மாதமே வெளியாகும் என்ற தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
சியோமி நிறுவனத்தின் ரெட்மீ நோட் 4 ஸ்மார்ட்போன் தான் உலக மொபைல் சந்தையின் இப்போதைய 'ஹாட் டாப்பிக்' - ஒவ்வொரு பிளாஷ் விற்பனையிலும் நிமிடங்களுக்குள் விற்று தீர்ந்துக் கொண்டே இருக்கிறது.
அப்படியான ரெட்மீ நோட் 4 கருவி சில அதிர்ஷ்டசாலிகளின் கைகளுக்கு மட்டுமே சொந்தமாகியுள்ளது. அதனை மனதிற்கொண்டு நம் தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்தில் ரெட்மீ நோட் 4 கருவிக்கு சிறந்த மாற்று கருவிகளின் பட்டியலை வழங்கி வாடிக்கையாளர்களை ஆசுவாசப்படுத்தினோம்.
இப்போது அதன் வாடிக்கையாளர்களை சியோமி நிறுவனமே திருப்தி படுத்தும் நோக்கத்தில் இருப்பது போல தெரிகிறது. அதாவது சியோமி ரெட்மீ நோட் 4 கருவியை தொடர்ந்து சியோமி மி 5சி கருவி வரும் பிப்ரவரி மாதமே வெளியாகும் என்ற தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது. உடன் இக்கருவி சார்ந்து வெளியாகியுள்ள அம்சங்கள் பற்றிய தகவல்கள் என்ன என்பதை பற்றிய விரிவான தொகுப்பே இது.
சியோமி மி 5சி என்றவொரு கருவி இந்த ஜென்மத்தில் வெளியாகாது போல என்ற எண்ணம் முளைவிடும் நேரம் பார்த்து எதிர்பார்ப்புகளுக்கு நம்பிக்கையை கொடுக்கும் வண்ணம் ஆன்லைன் லீக் ஒன்று நிகழ்ந்துள்ளது. சீனாவின் தர சான்றிதழ் (3சி) மையத்தின் வலைத்தளம் வழியாக கசிந்துள்ள சியோமி மி 5சி சாதனம் பற்றி முக்கிய தகவல்கள் இக்கருவி மீதான எதிர்பார்ப்பை மீண்டும் தூண்டிவிட்டுள்ளது. கிஸ்மோசீனா அறிக்கையின்படி ஐந்து வெவ்வேறு சியோமி மாதிரிகள் சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்பட்டுள்ளது. அதில் மாடல் எண் எம்ஏஇ136 (MAE136) ஆனது ஒரு சியோமி மி 5சி (அல்லது சியோமி மெரி) கருவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடன் சான்றிதழ் தளத்தில் மாதிரி எண்கள் 2105212, 2016089, 2016101, மற்றும் எம்பிஇ6A5 ஆகிய கருவிகளும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. லீக் தகவலில் சிக்கியுள்ள மாடல் எண் எம்ஏஇ 36 அதாவது சியோமி மி 5சி கருவியில் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு இல்லை என்பதை உறுதிப்படுத்தும் வண்ணம் இக்கருவியில் ஒரு 5வி / 2ஏ பவர் அடாப்டர் பயன்படுத்தபட்டுள்ளது வடன் ஸ்மார்ட்போன் உடன் கருவியில் மிக குறுகிய பெசல்கள் காணபப்டுகிறது மற்றும் 2.5டி வளைந்த கண்ணாடி பாதுகாப்பு கொண்ட ஒரு 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே உள்ளது. உடன் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் உடன் நிறுவனத்தின் பைன்கோன் (Pinecone) செயலி மூலம் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 64ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு, 12 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் செல்பீ மற்றும் வீடியோ சாட்களுக்கான 8 எம்பி முன்பக்க கேமரா, பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ சார்ந்த மியூ8 இயங்குதளம் எதிர்பார்க்கப்படுகிறது. பல தாமதங்களுக்கு பிறகு இந்த கருவியின் வெளியீடு இறுதியாக பிப்ரவரி மாத வாக்கில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இக்கருவி டிசம்பர் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை. அதற்காக இந்த முறை கண்டிப்பாக சியோமி மி 5சி வெளியாகும் என்று நீங்கள் நம்பிக்கை கொள்ளலாம் என்று நாங்கள் பரிந்துரைக்க விரும்பவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 4000 எம்ஏஎச், 4ஜிபி ரேம் கொண்ட லெனோவா கே6 பவர் (விலை, அம்சங்கள்).!
நம்பிக்கை

மாடல் எண் எம்ஏஇ136

டிஸ்ப்ளே

சேமிப்பு, கேமரா

பிப்ரவரி மாத வாக்கில்

மேலும் படிக்க
புகைப்படங்கள் : 3சி, விபோ


Click it and Unblock the Notifications