விண்டோஸ் இயங்குதளம் கொண்ட சியோமி சீற தயார்.!!

Written By:

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் கருவியை வெளியிட இருப்பதாக இணையத்தில் செய்திகள் கசிந்து வருகின்றன.

இது குறித்து சீன இணையதளம் ஒன்றில் வெளியான சில தகவல்கள் கருவியின் பெயர் மற்றும் அதில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. வெளியான தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாததும் குறிப்பிடத்தக்கது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
எம்ஐ 5

எம்ஐ 5

சியோமி நிறுவனம் அடுத்து வெளியிட இருக்கும் கருவியானது ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் என இரு இயங்குதளங்களில் தனித்தனி மாடல்கள் வெளியாகும் என கூறப்படுகின்றது.

புதிது

புதிது

சியோமி நிறுவனத்தின் எம்ஐ4, எம்ஐ பேட் 2 போன்ற கருவிகளில் ஏற்கனவே விண்டோஸ் 10 இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளதால் சியோமி நிறுவனத்திற்கு விண்டோஸ் இயங்குதளம் புதிதல்ல என்றும் கூறலாம்.

தேதி

தேதி

சியோமி நிறுவனம் எம்ஐ5 கருவியை பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி சீனாவிலும் 2016 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் மொபைல் வேல்டு காங்கிரஸ் விழாவிலும் அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

பிராசஸர்

பிராசஸர்

எம்ஐ 5 கருவியில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 பிராசஸர் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

திரை

திரை

சியோமி எம்ஐ5 கருவியில் 5.2 இன்ச் திரை ஃபுல்-எச்டி அல்லது க்யூஎச்டி திரை கொண்டிருக்கலாம்.

மெமரி

மெமரி

மேலும் இந்த கருவியில் 3ஜிபி ரேம், 32ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 4 ஜிபி ரேம், 64ஜிபி இன்டர்னல் மெமரி என இரு வித மெமரி கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை எம்ஐ5 கருவியில் 16 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 13 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்படலாம் என்றும் 3600 எம்ஏஎச் பேட்டரி மற்றும் க்விக் சார்ஜ் 3.0 தொழில்நுட்பமும் வழங்கப்படலாம் என கூறப்படுகின்றது.

3டி டச்

3டி டச்

ஆப்பிள் நிறுவனத்தின் 3டி டச் போன்ற ப்ரெஷர்-சென்சிட்டிவ் ஸ்கிரீன் எம்ஐ 5 கருவியில் வழங்கப்படலாம்.

விலை

விலை

தற்சமயம் வரை எம்ஐ5 கருவியின் விலை குறித்து எவ்வித தகவல்களும் இல்லை என்றாலும் பெரும்பாலும் இந்த கருவியானது இந்தியாவில் ரூ.19,990 என்ற விலையில் விற்பனை செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முகநூல்

முகநூல்

மேலும் இது போன்ற தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Xiaomi Mi 5 rumoured to Launch in Windows 10 Mobile Variant Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot