Home
News

சியோமி எம்ஐ 4 விலை மீண்டும் குறைப்பு

By Meganathan

சியோமி நிறுவனம் 64ஜிபி வகையை சேர்ந்த எம்ஐ4 விலையை இந்தியாவில் மீண்டும் ஒரு முறை குறைத்திருக்கின்றது. ஏப்ரல் மாதம், சியோமி நிறுவனம் 16 மற்றும் 64ஜிபி வகை ஸ்மார்ட்போன்களின் விலையை ரூ.2000 வரை குறைத்தது குறிப்பிடத்தக்கது.

மொபைல் போன் ஹேங் ஆகாமல் இருக்க என்ன செய்யலாம்

சியோமி எம்ஐ 4 விலை மீண்டும் குறைப்பு

புதிய விலையின் படி சியோமி எம்ஐ4 64 ஜிபி மாடல் ரூ.19,999 மற்றும் 16ஜிபி மாடலின் விலை ரூ.19,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது. எம்ஐ 4 சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் ஹெச்டி ஐபிஎஷ் டிஸ்ப்ளே 1920*1080 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் கையுறை அணிந்தும் பயன்படுத்த வழிவகுக்கும் ஓஜிஎஸ் கிளாஸ் வழங்கப்பட்டுள்ளது.

எதை ஒட்டனும்னு சொல்லுங்க, இப்பவே ஒட்டிடலாம்..!

இதோடு 2.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 801 சிபியு மற்றும் 3ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது, ஆண்ட்ராய்டு 4.4.4 கிட்காட் கொண்டு இயங்கும் எம்ஐ4 13 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 8 எம்பி முன்பக்க கேமராவும் கொண்டிருக்கின்றது.

வினோதமாக காட்சியளிக்கும் மொபைல் போன்கள்

சியோமி எம்ஐ 4 விலை மீண்டும் குறைப்பு

மேலும் ப்ரைமரி கேமரா மூலம் 4கே ரெசல்யூஷனில் வீடியோக்களை பதிவு செய்ய முடியும் என்பதோடு சோனி IMX214 கொண்ட CMOS லென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க கேமராவை பொருத்த வரை சோனி IMX219 சென்சார் 5P லென்ஸ் இருப்பதோடு 80 டிகிரி வரை வைடு ஆங்கிள் புகைப்படங்களை எடுக்க முடியும். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 3ஜி, வை-பை, ப்ளூடூத் மற்றும் 3080 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Xiaomi has reduced the price of the 64GB version of Mi 4 in India for the second time within three months.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X