Home
News

சபாஷ்., ரூ.10,000 விலைக்குறைப்பு- 108 எம்பி கேமரா, 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ!

சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ சாதனம் 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியோடு வருகிறது. இந்த சாதனமானது 108 எம்பி கேமரா சென்சார் உடன் இயக்கப்படுகிறது. உலகளாவிய அறிமுகத்தை தொடர்ந்து சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.39,999 என அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனம் இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ரக மலிவு விலை ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.10,000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

அதிகாரப்பூர்வமாக விலைக்குறைப்பு

அதிகாரப்பூர்வமாக விலைக்குறைப்பு

சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு அதிகாரப்பூர்வமாக விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. நீங்கள் முதன்மை ரக ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் முதன்மை ரக அம்சத்தோடு கிடைத்த சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு தற்போது சிறந்த விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.39,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.29,999 என கிடைக்கிறது. அதாவது சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 விலைக் குறைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்

சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ சிறப்பம்சங்கள்

சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். சியோமி எம்ஐ 11எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானத்தோடு 6.67 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கிறது. சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ பஞ்ச் ஹோல் கட்அவுட் வடிவமைப்போடு செல்பி கேமரா அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், எச்டிஆர் 10+ ஆதரவு மற்றும் பாதுகாப்பு அம்சத்துக்கு என கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்போடு வருகிறது.

108 எம்பி முதன்மை தர கேமரா

108 எம்பி முதன்மை தர கேமரா

சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது ஹூட்டின் கீழ் முதன்மை தர குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 செயலி ஆதரவோடு வருகிறது. இது 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு அம்சத்தைக் கொண்டுள்ளது. சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது பல்வேறு சாதனங்களுக்கு போட்டியாக வருகிறது. சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது 108 எம்பி முதன்மை தர கேமரா உடன் வருகிறது. இது 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 5 எம்பி மூன்றாம் நிலை டெலி மேக்ரோ கேமரா என டிரிபிள் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 20 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

4250 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

4250 எம்ஏஎச் பேட்டரி அம்சம்

சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது டால்பி அட்மாஸ் டியூன் செய்யப்பட்ட இரட்டை ஸ்பீக்கர் அமைப்போடு வருகிறது. மேலும் சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. இந்த சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவோடு எம்ஐயூஐ 12 கஸ்டம் ஸ்கின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சியோமி எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட்போனானது 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது 4250 எம்ஏஎச் பேட்டரி அம்சம் கொண்டிருக்கிறது. ரூ.40,000 விலைப்பிரிவில் விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.30,000 விலைப்பிரிவில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 11X Pro Gets Official Price Cut in India: Current Price, Specs Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X