சூழ்நிலை இப்ப சரியில்ல., உங்க எதிர்பார்ப்பு புரியுது- சியோமி வெளியிட்ட பதிவு!

|

எம்ஐ 11 அல்ட்ரா ஏற்றுமதி இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்டன. சூழ்நிலை சீரடையும் போது விற்பனை தேதி அறிவிக்கப்படும் என சியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஐ 11 அல்ட்ரா ஏற்றுமதி இந்தியாவில் தாமதம்

எம்ஐ 11 அல்ட்ரா ஏற்றுமதி இந்தியாவில் தாமதம்

எம்ஐ 11 அல்ட்ரா ஏற்றுமதி இந்தியாவில் தாமதமாகிவிட்டது என சியோமி நிறுவனம் தரப்பில் அறிவித்துள்ளது. ஒரு மாதத்திற்கு முன்பு இந்திய சந்தையில் அறிவிக்கப்பட்ட முதன்மை ரக ஸ்மார்ட்போன் இதுவாகும். எம்ஐ 11 அல்ட்ரா இந்தியாவில் எம்ஐ 11 எக்ஸ் மற்றும் எம்ஐ 11 எக்ஸ் ப்ரோ உடன் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்பட்டது. விற்பனை தேதியில் விரைவில் அறிவிக்கப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது தற்போது வரை அறிவிக்கப்படவில்லை, சூழ்நிலை சரியாகும் போது மட்டுமே விற்பனை தேதி அறிவிக்கப்படும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்ஐ 11 அல்ட்ரா விற்பனை

எம்ஐ 11 அல்ட்ரா விற்பனை

இந்தியாவில் எம்ஐ 11 அல்ட்ரா விற்பனை தாமதமானது குறித்து சியோமி டுவிட் செய்துள்ளார். இதுகுறித்த பதிவில் " உங்களில் பலர் இந்த அல்ட்ரா ப்ரீமியம் முதன்மை ரக ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வமாக இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் புரிந்துக் கொள்கிறோம். இருப்பினும் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சூழ்நிலைகள் காரணமாக எம்ஐ 11 அல்ட்ரா ஏற்றுமதி தாமதம் ஏற்படும் என தெரிவித்துக் கொள்கிறோம்.

சரியான விற்பனை தேதி

சரியான விற்பனை தேதி

விரைவில் இந்திய சந்தையில் கொண்டு வர கடுமையாக முயற்சித்து வருவதாகவும்., தற்போதைய நிலைமை விரைவில் மேம்பட்டவுடன் சரியான விற்பனை தேதி மட்டுமே வழங்க முடியும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பூட்டுதல் காரணமாக சியோமி வழங்கல் மற்றும் உற்பத்தியில் சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள்

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள்

சியோமி எம்ஐ 11 அல்ட்ரா சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது ஆண்ட்ராய்டு 11 ஆதரவு, 6.81 இன்ச் டபிள்யூக்யூஎச்டி ப்ளஸ் இ4 அமோலெட் டிஸ்ப்ளே, 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் கொண்டுள்ளது. இது கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் பாதுகாப்பு ஆதரவும், பின்புறத்தில் இரண்டாம் நிலை டிஸ்ப்ளேவாக 1.1 இன்ச் அளவுடன் இருக்கிறது. எம்ஐ 11 அல்ட்ரா குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி அட்ரினோ 660 ஜிபீயுடன் இயக்கப்படுகிறது.

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா

50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 48 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 120 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் வருகிறது. இதன் முன்பக்கத்தில் திரையின் மேல் இடதுமூலையில் 20 மெகாபிக்சல் செல்பி ஷூட்டர் இருக்கிறது. இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி, 67 வாட்ஸ் வயர் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு இதில் இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது.

எம்ஐ அல்ட்ரா விலை

எம்ஐ அல்ட்ரா விலை

இந்த ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.69,999 ஆக இருக்கிறது. அதேபோல் இது காஸ்மிக் பிளாக் மற்றும் காஸ்மிக் வைட் வண்ண விருப்பங்களில் வருகிறது. சியோமி எம்ஐ 11 அல்ட்ரா 12ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.69,990 என இருக்கிறது. இது கருப்பு மற்றும் வெள்ளை வண்ண விருப்பங்களில் கிடைக்கும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi Mi 11 Ultra Shipments Delay Due to Circumstances Beyond Our Control

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X