Home
News

Mi 10T போன் மீது ரூ.3,000 பிரைஸ் கட்.. 'இந்த' வங்கி வாடிக்கையாளருக்கு இது டபுள்.. புதிய விலை என்ன தெரியுமா?

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தனது பிரீமியம் ஸ்மார்ட்போனான சியோமி Mi 10T ஸ்மார்ட்போன் மாடலை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்தது. படு வேகமாக விற்பனையாகி வந்த இந்த புதிய ஸ்மார்ட்போன் மீதி நிறுவனம் இப்பொழுது ரூ. 3,000 என்ற புதிய விலை குறைப்பை அறிவித்துள்ளது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் கணிசமாகக் குறைந்துள்ளது.

ரூ.3,000 மதிப்பிலான பிரைஸ் கட்

ரூ.3,000 மதிப்பிலான பிரைஸ் கட்

இதன் புதிய விலையுடன், இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் சலுகையும் கிடைக்கிறது. அதிலும் நீங்கள் HDFC வங்கியின் வாடிக்கையாளர் என்றால், உங்களுக்கு இந்த பிரைஸ் கட் உடன், ரூ.3,000 மதிப்பிலான கூடுதல் இன்ஸ்டன்ட் சலுகை என்ற டபுள் நன்மை கிடைக்கிறது. சரி, இப்போது இந்த புதிய விலை குறைப்பு மற்றும் சலுகை பற்றிய விபரங்களை விபரமாகப் பார்க்கலாம்.

Mi 10T ஸ்மார்ட்போன் மீது புதிய பிரைஸ் கட்

Mi 10T ஸ்மார்ட்போன் மீது புதிய பிரைஸ் கட்

சியோமி Mi 10T ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட் மாடலாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த இரண்டு வேரியண்ட் மாடலும் இப்போது விலை குறைப்பைப் பெற்றுள்ளது. Mi 10T ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் மாடல் ரூ. 35,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இப்போது ரூ. 3,000 விலை குறைப்பைப் பெற்று இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 32,999 என்ற விலையில் கிடைக்கிறது.

இவர்களுக்கு மட்டும் இது டபுளாக கிடைக்க வாய்ப்பு

இவர்களுக்கு மட்டும் இது டபுளாக கிடைக்க வாய்ப்பு

அதேபோல், Mi 10T ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மாடல் ரூ. 37,999 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இப்போது ரூ. 3,000 விலை குறைப்பை பெற்று இந்த ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 34,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு இப்போது பிளிப்கார்ட் மற்றும் Mi.com வலைத்தளம் வழியாக கிடைக்கிறது. HDFC வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சலுகையாக ரூ.3,000 இன்ஸ்டன்ட் சலுகையும் கிடைக்கிறது.

ரூ. 6,000 வரை உடனடி சலுகை

ரூ. 6,000 வரை உடனடி சலுகை

இதன் மூலம் HDFC வாடிக்கையாளர்களுக்கு ரூ. 6,000 வரை உடனடி சலுகையை நீங்கள் பெற வாய்ப்புள்ளது. இத்துடன் வாடிக்கையாளர் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் போது Mi ஸ்கிரீன் ப்ரொடெக்ட் பாதுகாப்பு நன்மையாக உங்கள் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவுக்கு பாதுகாப்பு இன்சூரன்ஸ் கவர் நன்மையையும் சியோமி நிறுவனம் இப்போது வழங்குகிறது. இந்த நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 10T comes in two variants and both the variants get Rs. 3000 price cut in India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X