Home
News

108 எம்பி கேமரா கொண்ட சியோமி எம்ஐ 10: பல்வேறு சலுகைகளோடு பிளிப்கார்டில் வாங்கலாம்!

108 எம்பி கேமரா, 6.67 இன்ச் முழு ஹெச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் கொண்ட சியோமி எம்ஐ 10 முன்னதாக அமேசான் மற்றும் எம்ஐ.காம்-ல் மட்டுமே கிடைத்த நிலையில் தற்போது பிளிப்கார்டிலும் கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

சியோமி எம்ஐ 10

சியோமி எம்ஐ 10

இந்த ஆண்டின் தொடக்கத்தில் சியோமி எம்ஐ 10 அறிமுகப்படுத்தப்பட்டு அமேசான் மற்றும் எம்ஐ.காம்-ல் கிடைத்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் வழியாகவும் வாங்க கிடைக்கும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. சியோமி இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை சியோமி இந்திய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தது.

சியோமி எம்ஐ 10 விலை

சியோமி எம்ஐ 10 விலை

சியோமி எம்ஐ 10 விலை குறித்து பார்க்கையில் இதன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி வேரியண்டின் விலை ரூ.49,999 ஆகும். அதேபோல் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி விலை ரூ.54,999-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அமேசான், எம்ஐ.காம் மட்டுமின்றி பிளிப்கார்டிலும் தற்போது கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கோரல் பச்சை மற்றும் டவைலைட் க்ரே வண்ணங்களில் கிடைக்கிறது.

பிளிப்கார்ட் சலுகை

பிளிப்கார்ட் சலுகை

ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் பிளிப்கார்டில் ஐந்து சதவீதம் வரம்பற்ற கேஷ்பேக் பெறலாம், ஆக்சிஸ் பேங்க் பஜ் கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஐந்து சதவீதம் தள்ளுபடி பெறலாம், அதோடு மாதம் ரூ.5,278 என்ற வீதத்தில் விலையில்லா இஎம்ஐ முறையிலும் இந்த ஸ்மார்ட்போன் வாங்கலாம்.

6.67-இன்ச் டிஸ்பிளே வசதி

6.67-இன்ச் டிஸ்பிளே வசதி

சியோமி எம்ஐ 10 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.67-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 2340x1080 பிக்சல் திர்மானம்,19:5:9 என்ற திரைவிகிதம், எச்டிஆர்10 பிளஸ், ஆதரவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு வசதியோடு உள்ளது.

108 எம்பி பிரைமரி கேமரா

108 எம்பி பிரைமரி கேமரா

சியோமி மி 10 5ஜி ஸ்மார்ட்போனில் 108 எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 20எம்பி செல்பீ கேமரா, ஏஐ தொழில்நுட்பம்,எல்இடி பிளாஸ் உள்ளிட்ட ஆதரவுகளும் இதில் இடம்பெற்றுள்ளது.

4780 எம்ஏஎச் பேட்டரி

4780 எம்ஏஎச் பேட்டரி

இந்த ஸ்மார்ட்போனில் 4780 எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் உள்ளிட்ட ஆதரவுகளம் இந்த சாதனத்தில் இடம்பெற்றுள்ளது.

யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்

யு.எஸ்.பி. டைப்-சி போர்ட்

பின்பு யு.எஸ்.பி. டைப்-சி, 5ஜி SA/NSA டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சியோமி மி 10 5ஜி மாடல். மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Mi 10 now Available on Flipkart India With Cashback and More
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X