Android 16 உங்களுக்கு கிடைக்குமா? உங்க போன் இந்த லிஸ்ட்ல் இருக்கா? உடனே இப்படி செக் பண்ணுங்க.. Xiaomi டிப்ஸ்..
சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் பயனர்களுக்காக மிகவும் பயனுள்ள ஒரு புதிய மொபைல் ஆப்ஸை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மொபைல் ஆப்ஸை சியோமி நிறுவனம் சியோமி மீம் ஓஎஸ் என்ஹான்ஸர் (Xiaomi MemeOS Enhancer) என்று பெயரிட்டுள்ளது. இந்த சியோமி மீம் ஓஎஸ் என்ஹான்ஸர் ஆப்ஸ் என்ன செய்யும்? இதை வைத்து எப்படி உங்கள் ஸ்மார்ட்போன் சாதனம் ஆண்ட்ராய்டு 16 (Android 16) உடன் ஹைப்பர் ஓஎஸ் (Hyper OS) அப்டேட்டை பெரும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.
சீயோமி நிறுவனம் சியோமி MemeOS Enhancer என்ற புதிய மொபைல் ஆப்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்களுக்கு HyperOS 3 அல்லது Android 16 குறித்த அப்டேட் விபரங்களை காண்பிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. சியோமி வரிசையில் பல சாதனங்கள் தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படுகின்ற, இவற்றில் எந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டிற்கு இணக்கமானது என்பதை தெளிவாக இந்த ஆப்ஸ் காண்பிக்கிறது.

Android 16 உங்களுக்கு கிடைக்குமா? உங்க போன் இந்த லிஸ்ட்ல் இருக்கா?
இதன் மூலம் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் எளிமையாக அவர்களுக்கு மேம்படுத்தல் கிடைக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க இந்த ஆப்ஸ் உதவுகிறது. இந்த ஆப்ஸ் ஆண்ட்ராய்டு மொபைல் சாதனத்தின் அப்டேட் தகுதியை சரிபார்ப்பதைத் தாண்டி, மொபைல் செட்டிங் அப்டேட் மற்றும் சீயோமியின் பிரத்தியேக ஆப்ஸ்களின் அப்டேட் என்று இரண்டிற்கும் கிடைக்கக்கூடிய புதுப்பிப்புகள் பற்றிய விரிவான தகவல்களை வழங்குகிறது.
இந்த மீம் ஓஎஸ் என்ஹான்ஸர் ஆப்ஸ் வசதியுடன், சீயோமி பயனர்கள் சமீபத்திய சாப்ட்வேர் அப்டேட்கள் பற்றி அறிந்துகொள்ள முடியும். அதேபோல், சாதனங்கள் புதுப்பித்த நிலையில் இருப்பதை உறுதி செய்யவும் இந்த ஆப்ஸ் பயன்படுத்தப்படுகிறது. சரி, இப்போது உங்கள் ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 16 அப்டேட்டை பெற தகுதியானது தானா என்று செக் செய்யலாம்.
சியோமி மீம் ஓஎஸ் என்ஹான்ஸர் ஆப்ஸ் (Xiaomi MemeOS Enhancer App):
- முதலில் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) இலிருந்து MemeOS Enhancer ஐ டவுன்லோட் செய்யவும்.
- இந்த ஆப்ஸை இன்ஸ்டால் (Install) செய்து ஓபன் செய்ததும் சாதனத்தின் மாடல் விபரம் காண்பிக்கப்படும்.
- பிறகு, உங்கள் போனில் தற்சமயம் இயங்கி கொண்டிருக்கும் இயக்க முறைமை பற்றி தகவல் காண்பிக்கப்படும்.
- ஸ்கேன் (Scan) என்ற விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
- இந்த ஆரம்ப ஸ்கேன் முக்கியமானது.
- ஸ்கேன் செய்து முடியும் வரை பொறுத்திருக்கவும்.
- உங்கள் சாதனம் சமீபத்திய HyperOS 3 அல்லது Android 16 அப்டேட் பெற தகுதியானதா என்பது காண்பிக்கப்படும்
சியோமி போனில் இந்த ஆப்ஸ் கட்டாயம் இருப்பது ஏன் பெரிதும் பலனளிக்கும்?
இந்த முறையை பின்பற்றி உங்கள் சியோமி ஸ்மார்ட்போன் சாதனம், ஆண்ட்ராய்டு 16 மற்றும் ஹைப்பர் ஓஎஸ் 3 அப்டேட்களை பெற தகுதியானதா என்பதை சில நிமிடங்களில் தெரிந்துகொள்ள முடியும். இதுமட்டுமின்றி, இந்த Xiaomi MemeOS Enhancer ஆப்ஸ் உங்கள் சீயோமி சாதனத்த்தை தொடர்ந்து அப்டேட் நிலையில் வைத்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது. நீங்கள் செய்ய மறக்கும் அப்டேட் குறித்த தகவலை இது நினைவூட்டுகிறது.
குறிப்பாக இந்த MemeOS Enhancer ஆப்ஸ் அப்டேட்களுக்கான மதிப்பிடப்பட்ட நேரத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது. இந்த அம்சம் குறிப்பாக பயனுள்ளதாக இருக்கும், பயனர்கள் தங்கள் சாதனங்கள் இந்த குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை எப்போது பெறும் என்பதை எதிர்பார்க்க இந்த ஆப்ஸ் நேரடியாக அனுமதிக்கிறது. மாறாக, அப்டேட்டை ஆதரிக்காத சாதனங்களுக்கு, இந்த ஆப்ஸ் ஒட்டுமொத்த பயனர் அனுபவத்தை மேம்படுத்த மாற்று அப்டேட்கள் குறித்த தகவலை இது பரிந்துரைக்கிறது.
புதிய MemeOS Enhancer ஆப்ஸை பயன்படுத்தி, சீயோமி பயனர்கள் தங்கள் சாதனங்களை முதன்மை நிலையில் வைத்திருக்கலாம். பழைய வெர்ஷன் சாப்டவேரில் இயங்குவதை தவிர்த்து, சீயோமி வழங்கும் சமீபத்திய அம்சங்கள் மற்றும் மேம்பாடுகளை இந்த ஆப்ஸ் மூலம் சியோமி ஸ்மார்ட்போன் பயனர்கள் அனுபவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








