200 மெகாபிக்சல் கேமரா சென்சாருடன் வெளியாகிறதா அடுத்த சியோமி ஸ்மார்ட்போன்?

|

பல ஸ்மார்ட்போன் உற்பத்தியாளர்கள் எந்த நேரத்திலும் திட்டமிடாத ஒன்றை சியோமி நிறுவனம் தற்பொழுது செய்து முடிக்கத் திட்டமிட்டுள்ளது. புதிய அறிக்கையின் தகவலின்படி, சியோமி நிறுவனம் தனது எதிர்கால ஸ்மார்ட்போன்களில் 200 மெகாபிக்சல் கொண்ட கேமரா சென்சாரை பயன்படுத்தக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 108 மெகாபிக்சல் சென்சார்களுடன் ஸ்மார்ட்போன்கள் இப்போது தான் வெளிவர துவங்கியுள்ளன. இந்த நிலையில் சியோமி அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளது.

200 மெகாபிக்சல் கேமரா சென்சார்

200 மெகாபிக்சல் கேமரா சென்சார்

இப்போது தான் முதல் முதலில் 200 மெகாபிக்சல் சென்சார் பற்றி கேள்விப்படுகிறோம். சியோமி ஸ்மார்ட்போன்களில் வரவிருக்கும் 200 மெகாபிக்சல் சென்சார் சாம்சங்கின் தயாரிப்பில் முதன்முதலில் சியோமி போன்களில் மட்டுமே இடம்பெறும் என்று ஒரு புதிய கசிவு வெளியாகியுள்ளது. இந்த 200 மெகாபிக்சல் சென்சார் பற்றிய சில கசிவுகள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வெளியான தகவலில் சாம்சங் நிறுவனம் இதைத் தயாரித்து வருகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

சாம்சங் நிறுவனத்தின் ISOCELL சென்சார் தொழில்நுட்பம்

சாம்சங் நிறுவனத்தின் ISOCELL சென்சார் தொழில்நுட்பம்

சமீபத்தில் சியோமி நிறுவனம் வெளியிட்ட சில ஸ்மார்ட்போன் மாடல்களில் 108 மெகா பிக்சல் கேமராக்கள் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் சியோமி நிறுவனம் அறிமுகம் செய்த புதிய Mi 11x Pro மாடலிலும் 108 மெகா பிக்சல் கொண்ட கேமரா சென்சார்கள் வழங்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. புதிய 200 மெகா பிக்சல் கேமரா சென்சார் சாம்சங் நிறுவனத்தின் ISOCELL சென்சார் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்படும் என்று டிப்ஸ்டர் தகவல் தெரிவித்துள்ளது.

திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..திருட வந்த பெண்களின் வீட்டில் ஆபாச படங்கள் டவுன்லோட்.. பெண்கள் பயன்படுத்திய 'அந்த' பொருள் அபேஸ்..

16K வீடியோவை ரெக்கார்டிங்

16K வீடியோவை ரெக்கார்டிங்

குறிப்பாக சியோமி தயாரிப்பில் 108 மெகா பிக்சல் கேமரா சென்சார்கள் இப்பொழுது பிரீமியம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் மாடல்களிலும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 200 மெகா பிக்சல் சென்சார் 1/ 1.37 இன்ச் அளவு கொண்டது என்றும், இது 1.28 மைக்ரான் பிக்சல் அளவை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த சென்சார் உங்களை அதிக தரம் கொண்ட 16K வீடியோவை ரெக்கார்டிங் செய்ய அனுமதிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 22 OLYMPUS கேமரா

சாம்சங் கேலக்ஸி எஸ் 22 OLYMPUS கேமரா

சில வாரங்களுக்கு முன்பு, சாம்சங் கேலக்ஸி எஸ் 22 இன் பகிர்வுகளை லெட்ஸ் கோ டிஜிட்டலின் மார்க் பீட்டர்ஸ் பகிர்ந்தது, அதில் 200 மெகாபிக்சல் OLYMPUS கேமரா இடம்பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. சாம்சங் நிறுவனத்தின் எதிர்கால கேலக்ஸி போன்களில் சாம்சங் ஒலிம்பஸுடன் கூட்டு சேருவது குறித்து அறிக்கைகள் வெளிவந்துகொண்டிருக்கிறது. இந்த கசிவு நம்பகமான இரண்டு டிப்ஸ்டர்களால் மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. இருப்பினும், இந்த தகவலை முழுமையாக நாம் இப்போது நம்ப முடியாது.

Best Mobiles in India

English summary
Xiaomi may be the first to feature Samsungs upcoming 200 megapixel sensor : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X