Home
News

Xiaomi அறிமுகம் செய்த புது Redmi ஸ்பீக்கர்.. அரளுது சவுண்ட்.. தெரிக்கிது RGB லைட்.. இது வேற லெவல் ஸ்பீக்கர் பா

சியோமி (Xiaomi) நிறுவனம் புதிய தொழில்நுட்பத்துடன் ஒரு புது வகை ரெட்மி ஸ்பீக்கர் (Redmi Speaker) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? இதன் விலை என்ன? என்ற முழு விபரத்தை இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.

சியோமி நிறுவனம் அதன் சொந்த சந்தையான சீனாவில் புதிதாக ரெட்மி கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் (Redmi Computer Speaker) மாடலை அறிமுகம் செய்துள்ளது. இது கம்ப்யூட்டர் சாதனங்களுக்கான இணக்கத்துடன் பிரத்தியேகமாக ரெட்மி நிறுவனத்தால் முதல் முறையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது நான்கு யூனிட் அகுஸ்டிக் கான்ஃபிகுரேஷன் (four-unit acoustic configuration) உடன் வருகிறது. இது கோல்டன் இயர் (Golden Ear) சான்றுதலை பெற்றுள்ளது.

Xiaomi அறிமுகம் செய்த புது Redmi ஸ்பீக்கர்.. அரளுது சவுண்ட்..

சியோமி ரெட்மி கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் (Xiaomi Redmi computer speaker):

இது புதுவிதமான சிலிண்டர் வடிவமைப்புடன் RGB லைட்டிங் அம்சத்தை பெறுகிறது. இது மிகவும் அட்டகாசமான ஆடியோ அனுபவத்தை வழங்குவதாக கோல்டன் இயர் தளத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சியோமி ரெட்மி கம்ப்யூட்டர் ஸ்பீக்கர் (Xiaomi Redmi computer speaker) ஒரு சிங்கிள் பீஸ் (one-piece design) சாதனமாக மெஷ் ஃபேப்ரிக் கவர் (mesh fabric cover) உடன் வருகிறது.

இது மெல்லிய ஸ்லிம் ஆன ஒரு RGB முன்பக்க லைட்டிங் ஸ்ட்ரிப் (RGB lighting strip) உடன் வருகிறது. இதை கஸ்டமைஸ் செய்யும் விருப்பத்துடன் இது வருகிறது. உங்களுக்கு விரும்பிய நிறத்தை நீங்கள் செட் செய்யவும் இந்த ஸ்பீக்கர் அனுமதிக்கிறது. இது மிட்ரேஞ் (midrange) மற்றும் ஹை-ஃபிரிக்வேன்சி சவுண்ட் அவுட்புட் (high-frequency sound output) தரத்தை வழங்குகிறது.

ரியல் டைம் RGB கலர் சேஞ்சிங் சிங்க் (real-time sound pick and RGB color-changing sync):

சுருக்கமாக சொன்னால், இது ஒரே கல்லில் இரண்டு மாங்கா நன்மையை வழங்குகிறது. இந்த ஸ்பீக்கர் டூயல் பேசிவ் ரேடியேட்டர் (dual passive radiators) அம்சத்துடன் லோ-ஃபிரிக்வேன்சி பெர்ஃபார்மென்ஸ் (low-frequency performance) உடன் வருகிறது. இதன் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இது உங்கள் கம்ப்யூட்டரில் பிளே செய்யப்படும் விஷுவல் மற்றும் ஆடியோவுக்கு ஏற்றார் போல ரியல் டைம் கலர் சேஞ்சிங் சிங்க் (real-time sound pick and color-changing sync) அம்சத்தை ஆதரிக்கிறது.

அதாவது, உங்கள் கம்பியூட்டரில் பிளே செய்யப்படும் படம் மற்றும் ஆடியோ மாற்றத்திற்கு ஏற்றார் போன்ற நிறங்களை இது அதன் RGB ஸ்ட்ரிப் லைட் மூலம் பிரதிபலிக்கிறது. இது உங்கள் கேமிங், திரைப்படம், போன்ற எல்லா சேவைகளுடன் சிறப்பாக செயல்படுகிறது. இந்த சாதனம் கோல்டன் இயர் மூலம் மிகவும் தரமான சாதனமாக சான்றளிக்கப்பட்டுள்ளது என்பதால், இதை நீங்கள் தாராளமாக நம்பி வாங்கலாம்.

இந்த ஸ்பீக்கர் இல் ஹிட்டன் மைக்கும் வைக்கப்பட்டுள்ளது. இதனால் வீடியோ கால் போன்றவற்றை நீங்கள் தாராளமாக அணுகலாம். இது ப்ளூடூத் 5.0 அம்சத்துடன் வருகிறது. இது 3.5mm ஆடியோ ஜாக் அம்சத்துடன் வருகிறது. இதன் விலை பற்றி பேசுகையில், இது சீனாவில் 199 யுவான் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ.2,300 என்ற விலை புள்ளியை பெறுகிறது. இது இந்தியாவிற்கு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi launches Redmi computer speaker with real time sound pickup and color changing sync tech
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X