Home
News

Xiaomi-னா சும்மாவா? குறைந்த விலையில் ஸ்டைலிஷ் டேபிள் லேம்ப்.. விலை என்ன தெரியுமா?

சியோமி (Xiaomi) நிறுவனம் இரண்டு புதிய டேபிள் லேம்ப் (Table Lamp) சாதனங்களை அதன் சொந்த சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்ன? இதன் விலை என்ன? மற்றும் இந்த சாதனத்தின் முழு விபரங்களை பற்றி இப்போது பார்க்கலாம்.

சியோமி நிறுவனம் சீனாவில் இப்போது இரண்டு புதிய மிஜியா டேபிள் லாம்ப் 2 (Mijia Table Lamp 2) மற்றும் மிஜியா டேபிள் லேம்ப் 2 லைட் (Mijia Table Lamp 2 Lite) என்ற சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இது படிப்பு மற்றும் வேலை செய்பவர்களுக்கு சிறந்த சாதனமாக அமையும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த டிவைஸ் விலை என்ன? இதன் சிறப்பம்சம் என்ன? இதோ விபரம்.

Xiaomi-னா சும்மாவா? குறைந்த விலையில் ஸ்டைலிஷ் டேபிள் லேம்ப்..

மிஜியா டேபிள் லாம்ப் 2 (Mijia Table Lamp 2):

அணைத்து மக்களுக்கும் பயன்பெறும் வகையில் இந்த டேபிள் லேம்ப் டிவைஸை சியோமி குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. மிஜியா டேபிள் லேம்ப் 2 (Mijia Table Lamp 2) டிவைஸ் சாதனம் 60cm நீளத்துடன் 112 LED விளக்குகளை கொண்ட மிகவும் ஸ்லிம் ஆன தோற்றத்தில் ஸ்டைலிஷ் டிஸைனுடன் வெளிவந்துள்ளது. இது ரீடிங் மற்றும் ரைட்டிங் AA லெவல் போட்டோமெட்ரிக் ரேட்டிங் உடன் வருகிறது.

இந்த ரீடிங் மற்றும் ரைட்டிங் AA லெவல் போட்டோமெட்ரிக் ரேட்டிங் (reading and writing AA-level photometric rating) தவிர, இந்த டேபிள் லேம்ப் சாதனம் லேர்னிங் லேம்ப் AAAA லெவல் சான்றிதழையும் (learning lamp AAAA-level certification) பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு தனி மனித கண்களுக்கு ஏற்றவாறு இதன் பிரைட்னஸ் மற்றும் வெளிச்சத்தின் அளவை கண்ட்ரோல் செய்ய இது அனுமதிக்கிறது.

இதனால், அதிக நேரம் இருளில் படிக்கும் பொழுதும் மற்றும் எழுதும் பொழுதும் உங்கள் கண்களுக்கு எந்தவித பாதிப்பும் சோர்வும் இல்லாமல் இந்த மிஜியா டேபிள் லாம்ப் 2 பார்த்துக்கொள்கிறது. இந்த மிஜியா டேபிள் லாம்ப் 2 சாதனத்தை நீங்கள் உங்கள் வீட்டில் ஸ்மார்ட் சாதனமாக பயன்படுத்தலாம். அதாவது, சியோமி ஸ்மார்ட் எக்கோஸிஸ்டம் ஹைப்பர் ஓஎஸ் (Xiaomi's smart home ecosystem powered by HyperOS) உடன் இயங்குகிறது.

மிஜியா டேபிள் லாம்ப் 2 விலை (Mijia Table Lamp 2 Price):

இதனால், உங்கள் மிஜியா டேபிள் லாம்ப் 2 மற்றும் மிஜியா டேபிள் லாம்ப் 2 லைட் சாதனத்தை நீங்கள் வாய்ஸ் கமாண்ட் மூலம் கண்ட்ரோல் செய்யலாம் என்று சியோமி தெரிவித்துள்ளது. உங்கள் வீட்டில் உள்ள மற்ற ஸ்மார்ட் சாதனங்களுடனும் இதை நீங்கள் இணைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த டேபிள் லேம்ப் பின்னோக்கி மற்றும் முன்னோக்கி சாய்க்க அனுமதிக்கிறது.

முன்பக்கமாக இது 25° டிகிரி வரை சாய்க்க அனுமதிக்கிறது. அதேபோல், 25° டிகிரி வரை பக்கவாட்டில் சாய்க்க அனுமதிக்கிறது. கூடுதலாக, இதன் மெயின் லைன் அடஜஸ்ட்மன்ட் 10,000 முறைக்கும் மேற்பட்ட முறை மடக்கி நீட்டும் படியான தாங்குதலை உறுதிசெய்துள்ளது. அதற்கேற்ற சோதனைகளை இது கடந்துள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 2,335 ஆகும். இதன் லைட் வெர்ஷன் மாடல் இந்திய மதிப்பில் ரூ. 917 ஆகும்.

Best Mobiles in India

English summary
Xiaomi launches Mijia Table Lamp 2 and Lamp 2 Lite Launched Under Rs 2300 Specs and Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X