Home
News

சியோமி அறிமுகப்படுத்தும் மி வைஃபை ரிப்பீட்டர் 2, மி புளூடூத் ஸ்பீக்கர் & மி பவர் பேங்க் 2.!

ஜூலை 7 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் வழியாக கிடைக்கும்.!

By Prakash

சியோமி நிறுவனம் பல்வேறு மொபைல்மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அந்நிறுவனத்திலிருந்த வெளிவரும் தயாரிப்புகள் அனைத்தும் சிறந்த தரம் பெற்றவையாக உள்ளது.

தற்போது சியோமி நிறுவனம் சிறந்த மி வைஃபை ரிப்பீட்டர், மி புளூடூத் ஸ்பீக்கர் மற்றும் மி பவர் பேங்க் போன்றவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது இவை சந்தையில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.ஜூலை 7 ஆம் தேதி முதல் அமேசான் மற்றும் ஃப்ளிப்கார்ட் வழியாக கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மி வைஃபை ரிப்பீட்டர் 2:

மி வைஃபை ரிப்பீட்டர் 2:

இவை 16 சாதனங்களுக்கான வேகமான மற்றும் நிலையான இணைப்புகளை வழங்கும் திறன் கொண்டது, மேலும் ரவுட்டர் சிக்னல் வரம்பை விரிவாக்க மற்றும் பதிவிறக்க வேகத்தை அதிகரிக்க இரண்டு உள்ளமைக்கப்பட்ட உயர் செயல்திறன் பிசிபி ஆண்டெனாக்களைக் கொண்டு வருகிறது. மேலும் 13 லேன் சேனல்களுக்கான ஆதரவு கொண்டுள்ளது, வேகமான டவுன்லோடு செய்யும் வசதி கொண்டதது. இக்கருவியின் விலை ரூபாய்.999 எனக் கூறப்படுகிறது.

 மி புளூடூத்  ஸ்பீக்கர் மினி:

மி புளூடூத் ஸ்பீக்கர் மினி:

இக்கருவியை வீட்டிலோ, அலுவலகத்திலோ, வெளிப்புறத்திலோ நீங்கள் உயர் தரமான அழைப்பு அனுபவத்தை இந்த மி புளூடூத் ஸ்பீக்கர் மினி கொடுக்கிறது. மேலும் யுஎஸ்பி சார்ஜ் இதனுள் அடக்கம். 4மணி நேரம் சார்ஜ் இருக்கும் தன்மைகொண்டது.இதன் விலைப்பொறுத்தமட்டில் ரூபாய.1,199ஆக உள்ளது.

 மி பவர் பேங்க் 2:

மி பவர் பேங்க் 2:

சியோமியின் மி பவர் பேங்க் 2 பொருத்தவரை 20,000எம்ஏஎச் பவர் வேக வேகமாக சார்ஜ் செய்யும் வசதி கொண்டுள்ளது, மேலும் இரட்டை யுஎஸ்பி வெளியீடுகளைக் கொண்டுள்ளது, எனவே நீங்கள் இரண்டு சாதனங்களை ஒரே நேரத்தில் பயன்படுத்தமுடியும். இதன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.2,199ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi launches Mi Wi-Fi Repeater 2 Mi Bluetooth Speaker Mini Mi Power Bank 2 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X