சியாமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பு இண்டலிஜெண்ட் டோர்லாக்

By Siva
|

ஸ்மார்ட்போன் தயாரிப்பு மட்டுமின்றி மக்களின் மனம் கவர்ந்த சியாமி நிறுவனம் வேறு பல நுகர்வோர்களுக்கான தயாரிப்புகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. பவர்பேங்க் முதல் பிட்னஸ் பொருட்கள் வரை, லேப்டாப்புகள், டிவி, உள்பட பல பொருட்களை தயாரித்து வருகிறது

சியாமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பு இண்டலிஜெண்ட் டோர்லாக்

இந்த நிலையில் சியாமி நிறுவனம் தற்போது மிக அவசியமான பொருள் ஒன்றை அசத்தலான டிசைனில் தயாரித்துள்ளது. அதுதான் கிளாசிக் இண்டலிஜெண்ட் பிங்கர்பிரிண்ட் டோர் லாக். இந்த புதிய பொருள் இந்திய மதிப்பில் ரூ.16687 என்ற விலையில் வெளிவரவுள்ளது. இதில் இன்ஸ்டாலேஷன் கட்டணமும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய தயாரிப்பான டோர்லாக்கின் சிறப்பு அம்சம் எனனவெனில் இந்த லாக்கில் பதிவு செய்யப்பட்ட கைரேகையை உடையவர் தவிர வேறு யாரும் கதவை திறக்க முடியாது. நான்கு சிறப்பு பாதுகாப்பு அம்சங்கள் அடங்கியுள்ள இந்த சாதனத்தை உடைக்கவோ, சேதப்படுத்தவோ யாராலும் முடியாது.

சியாமி நிறுவனத்தின் புதிய தயாரிப்பு இண்டலிஜெண்ட் டோர்லாக்

இந்த டோர்லாக்கை திறக்க வேண்டுமானால் பிங்கர் பிரிண்டு, மொபைல் செயலி ஆகியவற்றை புளூடூத் மூலம் பாஸ்வேர்டு கொண்டு திறக்க வேண்டும். இதுபோக இந்த லாக்கை திறக்க தனியாக சாவி ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தயாரிப்பு சுமார் பத்து ஆண்டுகாலம் உழைக்கும் தன்மை உடையது என்றும், 100,000 தடவை இந்த டோர்லாக்கை பயன்படுத்தலாம் என்றும் இந்நிறுவனம் உறுதி அளித்துள்ளது. நேரடி கைரேகை இருந்தால் மட்டுமே திறக்க முடியும் என்பதால் இந்த டோர்லாக் மிகுந்த பாதுகாப்புக்கு உரியதாக கருதப்படுகிறது

இந்த டோர்லாக்கில் தவறுகள் ஏற்பட 0.0005 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளது என்றும் இந்த டோர்லாக்கை ஏழு வயது முதல் எழுபது வயது வரை உள்ளவர்கள் தாராளமாக தங்கள் கைரேகை மூலம் பயன்படுத்தலாம் என்று சியாமி நிறுவனம் கூறியுள்ளது.

நோக்கியாவிற்கு நோக்கியாவிற்கு "நேரடியாக" சவால் விடும் சியோமி ரெட்மீ நோட் 5 அம்சங்கள்.!

மேலும் உயர் அல்லது குறைந்த வெப்பநிலை இருந்தாலும் இந்த டோர்லாக் எந்தவித சேதமும் அடையாது என்பது இதன் கூடுதல் சிறப்பு அம்சம் ஆகும்

மேலும் இந்த டோர்லாக்கை வேறு யாராவது சம்பந்தம் இல்லாமல் திறக்க முயற்சித்தால், அதாவது 15 முறைக்கு மேல் திறக்க முயற்சித்தால் அலாரம் அடித்து நமக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே திருடன், கொள்ளையர்களிடம் இருந்து மிகுந்த பாதுகாப்பை இந்த டோர்லாக் நமக்கு தருகிறது. இந்த டோர்லாக்கை பயன்படுத்துபவர்கள் 6 டிஜிட் கோட் நம்பர் மற்றும் 16 டிஜிட் பாஸ்வேர்ட் ஏற்படுத்தி கூடுதல் பாதுகாப்பையும் ஏற்படுத்தி கொள்ளும் வசதியும் இதில் உண்டு.

Best Mobiles in India

English summary
Chinese manufacturing giant Xiaomi has launched a Classic Intelligent Fingerprint Door Lock with a price tag of 1699 Yuan (roughly Rs. 16,687).

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X