அசுர வளர்ச்சி: இந்தியாவில் 3000-வது ஷோரூம் திறந்த சீன நிறுவனம்., 6000 பேருக்கு வேலை: அமோக வரவேற்பு!

|

சீன நிறுவனமான சியோமி இந்தியாவில் 3000-வது ஷோரூமை திறந்துள்ளது. இந்த ஷோரூம் உத்திரபிரதேச மாநிலம் புலாந்த்ஷாரில் திறக்கப்பட்டுள்ளது. இதன் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் 3000-வது ஷோரூம்

இந்தியாவில் 3000-வது ஷோரூம்

சியோமி நிறுவனம் தனது 3000-வது ஷோரூம் இந்தியாவில் திறக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. சேனல் ப்ளே நடத்திய ஆய்வு குறித்து பார்க்கையில், கடந்த ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய பிராண்ட் சில்லறை நெட்வொர்க்காக இது உருவெடுத்துள்ளதாக தெரிவித்தது. மேலும் தனது நிறுவனத்தை தொடர்ந்து விரிவுப்படுத்தும் விதமாக 3000-வது எம்ஐ ஸ்டோரை சியோமி திறந்துள்ளது.

850 நகரங்களில் எம்ஐ ஸ்டோர்

850 நகரங்களில் எம்ஐ ஸ்டோர்

சியோமி நிறுவனம் தனது 3000-வது ஸ்டோரை உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள புலாந்த்ஷாரில் திறந்துள்ளது. இந்த அறிமுகத்தின் மூலம் எம்ஐ ஸ்டோர் 850 நகரங்களில் விரிவுப்படுத்தி இருக்கிறது.

பெங்களூரில் முதல் ஷோரூம்

பெங்களூரில் முதல் ஷோரூம்

சியோமி தனது எம்ஐ ஸ்டோரை முதன்முதலாக ஆகஸ்ட் 15 2018-ல் பெங்களூரில் தொடங்கப்பட்டது. இந்த ஷோரூம் திறந்த 2 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்து 3000-வது ஷோரூமை தொடங்கியுள்ளது.

6000-த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை

6000-த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை

இந்தியா தனது எம்ஐ ஸ்டோர் விற்பனை நிலையத்தை இந்தியா முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல் இதன்மூலம் இந்தியா முழுவதும் 6000-த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க முடிந்ததாகவும் தெரிவித்தது.

WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!WhatsApp அழகிகளால் ஏற்படும் புதிய சிக்கல்! உஷராக இருங்கள் இல்லைன்னா இதுதான் கதி!

இந்தியாவில் எம்ஐ விவரங்கள்

இந்தியாவில் எம்ஐ விவரங்கள்

எம்ஐ இந்தியாவில் தற்போது 75+ எம்ஐ ஹோம்ஸ், 45+ எம்ஐ ஸ்டுடியோஸ், 8000+ எம்ஐ விருப்பமான கூட்டாளர்கள், 4000+ மிகப்பெரிய ரீடெய்ல் பார்ட்னர்கள் கொண்டிருப்பதாகவும் 3000 எம்ஐ ஸ்டோர்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள், கூட்டாளர்கள் ஆதரவுக்கு மகிழ்ச்சி

ரசிகர்கள், கூட்டாளர்கள் ஆதரவுக்கு மகிழ்ச்சி

இதுகுறித்து முரளிகிருஷ்ணன் சிஓஓ எம்ஐ இந்தியா, கூறுகையில்., தங்களது 3000-வது எம்ஐ ஸ்டோரைத் தொடங்கியுள்ளதாகவும், மிகப்பெரிய பிராண்டாக வலுப்படுத்த உதவிய எம்ஐ ரசிகர்கள், கூட்டாளர்களின் ஆதரவை பெறுவதில் மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்துள்ளார்.

புதுமைகளை வழங்குவதற்கு பணியாற்றுவோம்

புதுமைகளை வழங்குவதற்கு பணியாற்றுவோம்

குறுகிய காலத்தில் நாட்டில் பிராண்ட் சில்லறை நெட்வொர்க், பிராண்டாக அனைவருக்கும் புதுமைகளை வழங்குவதற்கும் தொழில்முனைவோரை வளர்ப்பதற்கும் தொடர்ந்து பணியாற்றுவோம் என கூறினார். தங்களது கூட்டாளர்கள் மற்றும் எம்ஐ ரசிகர்களுடன் இணைந்த பெரிய உயரங்களை எட்ட உறுதியாக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

Best Mobiles in India

English summary
Xiaomi Launches 3000th Mi Store in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X