Home
News

வலிமை.. உறுதி.. அசைக்க முடியாத நம்பிக்கை.. சியோமி வெளியிட்ட புது சூட்கேஸ்.. விலை என்ன?

சியோமி (Xiaomi) நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் பல புதிய சாதனங்களை சேர்த்துக்கொண்டே இருக்கிறது. ஸ்மார்ட்போன், லேப்டாப், டேப்லெட், ஸ்மார்ட் வாட்ச், டிவி, பைக் என்று பல தயாரிப்புகளை அறிமுகம் செய்த நிறுவனம் இப்போது புதிதாக சூட்கேஸ் சாதனத்தையும் அறிமுகம் செய்துள்ளது.

ஆம், மக்களே.. சியோமி நிறுவனம் இப்போது அதன் போர்ட்போலியோவில் மிகவும் வலிமையான மற்றும் உறுதியான சூட்கேசை சேர்த்துள்ளது. இது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கலாம், இன்னும் சிலருக்கு வேடிக்கையாக கூட இருக்கலாம். என்னடா ஒரு டெக் நிறுவனம் திடீரென சூட்கேஸ் விற்பனைக்குள் வந்துவிட்டது என்று கூட சிலர் கேளிக்கை செய்யலாம்.

வலிமை.. உறுதி.. அசைக்க முடியாத நம்பிக்கை.. சியோமியின் புது சூட்கேஸ்..

தெரியாதவர்களுக்கு, சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி (Xiaomi) அதன் பிராண்டின் கீழ் சமீப நாட்களாக அனைத்து துறைகளிலும் புது புது தயாரிப்புகளை அறிமுகம் செய்து, பல புதிய வெளியீட்டு விழாவை நடத்தி வருகிறது. இது ஸ்மார்ட்போன்கள் முதல் ஸ்மார்ட்வாட்ச்கள், இயர்பட்கள் மற்றும் ஸ்மார்ட் ஹோம் கேஜெட்டுகள் வரை புதிய தயாரிப்புகளை நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

சியோமி நிறுவனம் அதன் பிரபலமான பாகங்கள் வரிசையை விட்டுவிடவில்லை - MIJIA சூட்கேஸ் இதில் அடங்கும். சீன தொழில்நுட்ப நிறுவனமான சியோமி பிராண்டின் கீழ், இயங்கும் மிஜியா (MIJIA) கீழ் நிறுவனம் அலுமினியம் பிரேம் சூட்கேஸ் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இது மிஜியா அலுமினியம் சூட்கேஸ் என அழைக்கப்படும். இது 20 அங்குல சூட்கேஸ் சாதனமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் விலை சீனாவில் சுமார் 549 யுவான் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டாலர் மதிப்பில் இதன் விலை வெறும் $75 ஆகும். இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.6230 மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய மிஜியா அலுமினியம் பிரேம் சூட்கேஸ் (MIJIA Aluminium Frame Suitcase) வடிவமைப்பைப் பொறுத்தவரை, இந்த புதிய சூட்கேஸ் 6-சீரிஸ் அலுமினிய அலாய் நடுத்தர சட்டத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உறுதியை அடைய "ஜின்க் அலாய் கார்னர் கார்டுகளை (zinc alloy corner guards)" இது கொண்டுள்ளது. இது சூட்கேஸை எளிதில் சிதைக்க முடியாது என்பதை உறுதி செய்கிறது.

வலிமை.. உறுதி.. அசைக்க முடியாத நம்பிக்கை.. சியோமியின் புது சூட்கேஸ்..

கூடுதலாக, சூட்கேஸில் இரட்டை TSA லாக் அம்சத்துடன் வருகிறது. இது உயர் செயல்திறன் கொண்ட கூட்டு PC ஷீட் உடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுயமாக உருவாக்கப்பட்ட உயர் துல்லியமான புஷிங் யுனிவர்சல் வீல் மற்றும் 99% வரை பாக்டீரியா எதிர்ப்பு அம்சம் போன்ற அம்சங்களை இந்த மிஜியா அலுமினியம் பிரேம் சூட்கேஸ் சாதனம் கொண்டுள்ளது.

சூட்கேஸில் நான்கு-நிலை அனுசரிப்பு டிராபார் உள்ளது, இது அனோடைஸ் செய்யப்பட்ட அலுமினிய செயல்முறையைப் பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட நிலையான அலுமினிய கலவையால் ஆனது என்று கூறப்படுகிறது. கூடுதலாக, சூட்கேஸ் தாக்க எதிர்ப்பு சோதனை, சோர்வு எதிர்ப்பு சோதனை, எடை குறைப்பு சோதனை, நடைபயிற்சி சோதனை மற்றும் தூக்கும் அதிர்ச்சி சோதனை போன்ற தேசிய தரநிலைகளின் வரிசையிலும் தேர்ச்சி பெற்றுள்ளது.

உள் சேமிப்பகத்தைப் பொறுத்தவரை, சூட்கேஸில் U- வடிவ பைகள் மற்றும் பல்வேறு பொருட்களை நெகிழ்வாக சேமிக்க எக்ஸ்-வெப்பிங் வடிவமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, சூட்கேஸில் "நீர்ப்புகா பெட்டிப் பை" உள்ளது, அது "ஈரமான ஆடைகளை கண்ணியமாக சேமித்து, அதை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் மாற்றும்".

இந்த புதிய MIJIA அலுமினியம் பிரேம் சூட்கேஸ் தற்போது சீனாவில் ஜிங்டாங் (JD.com) வழியாக வாங்க கிடைக்கிறது. இது விரைவில் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi launched new MIJIA Aluminium Frame Suitcase
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X