ஸ்மார்ட் டிவி வகைகளை அறிமுகம் செய்த சியோமி!
சியோமி நிறுவனம் பெய்ஜிங்' இல் நடைபெற்ற விழாவில் புதிய வகை எம்ஐ தொலைக்காட்சி பெட்டிகளை அறிமுகம் செய்துள்ளது. எம்ஐ டிவி 3எஸ் எனப் பெயரிடப்பட்டிருக்கும் புதிய தொலைக்காட்சி பெட்டிகள் ஆண்ட்ராய்டு இயங்குதளம் சார்ந்த ஸ்மார்ட் டிவிக்கள் ஆகும்.

சீன நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் டிவிக்கள் அல்ட்ரா-தின் அதாவது மிகவும் மெல்லியதாக மெட்டல் பாடி கொண்டிருக்கின்றது. 65 இன்ச் மாடல் டிவி CNY 4999 இந்திய மதிப்பில் ரூ.49,800 என்றும் 55 இன்ச் மாடல் CNY 3,499 இந்திய மதிப்பில் ரூ.34,900 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஹோம் தியேட்டர் கருவி ஒன்றும் இந்த விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. சியோமி நிறுவனத்தின் புதிய ஹோம் தியேட்டர் கருவிகள் CNY 5,999 இந்திய மதிப்பில் ரூ.59,800 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சியோமி எம்ஐ டிவி 3எஸ் மாடலை பொருத்த வரை 9.9 மில்லி மீட்டர் மெலிதாக இருக்கின்றதாகவும் 37.6 மில்லிமீட்டர் தடிமனாகவும் இருக்கின்றது. மேலும் அனோடைஸ்டு அலுமினியம் அல்லாய் ஃபிரேம் கொண்டிருக்கின்றது. இவ்வகை 45 கோணத்தில் டைமண்ட் கட் கொண்டுள்ளதாகவும் பிரெஷ்டு அலுமினியம் கொண்ட பேக் பேனல் கொண்டிருக்கின்றது என அந்நிறுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

65 இன்ச் மாடல் 4K (3840x2160 பிக்சல்) கொண்ட சாம்சங் டிஸ்ப்ளே மற்றும் NTSC 85 சதவீத கலர் கமுட் கொண்டிருக்கின்றது. 55 இன்ச் மாடல் டிவியில் எல்ஜடி நிறுவனத்தின் IPS டிஸ்ப்ளே பேனல் மற்றும் 4K ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது. இவை இரண்டும் 64 பிட் அம்லாஜிக் டி966 பிராசஸர், அதாவது 4 கார்டெக்ஸ்-ஏ53 கோர் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் குவாட்கோர் மலி டி830 ஜிபியு கொண்டுள்ளது. இந்த சிப்செட் 2 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்பில்ட் eMMC ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது.
சியோமி எம்ஐ டிவி 3எஸ் கருவியின் மற்ற அம்சங்களைப் பொருத்த வரை வை-பை 802.11ac மற்றும் ப்ளூடூத் கனெக்டிவிட்டி, H.265 வன்பொருள் டீகோடர் மூலம் 4K தரம் கொண்ட தரவுகளை நொடிக்கு 60 ஃபிரேம் (60fps) வீதத்தில் வழங்க முடியும். மேலும் இந்தத் தொலைக்காட்சியானது ஐந்தாம் தலைமுறை இமேஜ் குவாலிட்டி என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுவதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இந்தத் தொலைக்காட்சியானது HDR, மற்றும் OpenGL 3.1 தரம் கொண்டது என்றும் இதில் நான்கு ஸ்பீக்கர்களும் தனித்தனி சவுன்டு பார் மற்றும் டால்பி மற்றும் டிடிஎஸ் வன்பொருள் அளவு டீகோடிங் போன்றவற்றையும் கூறி வருகின்றது.


Click it and Unblock the Notifications