எல்லா புகழும் இந்தியாவுக்கே., உலகின் மூன்றாவது பெரும் நிறுவனமாக உருவெடுத்த Xiaomi!

|

இந்தியாவின் சந்தையை பெரிய அளவில் ஆக்கிரமித்து இருக்கும் சியோமி உலகின் மூன்றாவது பெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதன் காரணமாக அமெரிக்க தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வெளிநாட்டு நிறுவனங்களினால் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்தார்.

இரு நாடுகள் பெரும் பொருளாதார போர்

இரு நாடுகள் பெரும் பொருளாதார போர்

ஏற்கனவே, அமெரிக்கா - சீனா ஆகிய இரு நாடுகள் பெரும் பொருளாதார வர்த்தக போர் நடந்து வருகிறது. இதையடுத்து சமீபத்தில் அமெரிக்க பிறப்பித்த இந்த உத்தரவு பெரும் சர்ச்சைய ஏற்படுத்தியது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை

வெளிநாட்டு நிறுவனங்களில் தயாரிக்கப்படும் தொலைத் தொடர்பு சாதனங்களை பயன்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தடை உத்தரவு பிறப்பித்து அதை அமல் படுத்துவதற்காக கையெழுத்திட்டார்.

சீன நிறுவனமான ஹூவாய் செல்போன்

சீன நிறுவனமான ஹூவாய் செல்போன்

சீன நிறுவனமான ஹூவாய் செல்போன் அலைக்கற்று உள்ளிட்ட பல்வேறு சாதனங்கள் மற்றும் தொழில்களை அமெரிக்காவில் செய்து வந்தது. இந்த தடை உத்தரவால் சீனா உள்பட வெளிநாட்டு நிறுவனங்கள் தொழில் செய்ய புதிதாக உரிமம் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் உளவு வேலை

அமெரிக்காவில் உளவு வேலை

ஹூவாய் நிறுவனம் சீனாவிற்காக அமெரிக்காவில் உளவு வேலை பார்த்து வருவதாக குற்றச்சாட்டும் எழுந்தது. இதனால் அந்த நிறுவனத்துக்கு அமெரிக்காவில் தடை பிறப்பிக்கப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் பெருமளவு பாதிப்பு ஏற்பட்டது.

மூன்றாவது பெரிய ஸ்மார்ட் போன் பிராண்டாக மாறியுள்ளது

மூன்றாவது பெரிய ஸ்மார்ட் போன் பிராண்டாக மாறியுள்ளது

இந்த நிலையில் ஸ்டராடஜி அனலிட்டிக்ஸ் அறிக்கையின் படி, சியோமி உலகின் மூன்றாவது பெரிய ஸ்மார்ட் போன் பிராண்டாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனம் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கில் விற்கப்பட்ட ஸ்மார்ட் போன் என குறிப்பிட்டுள்ளது.

இந்தியா எப்போதும் சியோமிக்கு ஒரு முக்கிய சந்தை

இந்தியா எப்போதும் சியோமிக்கு ஒரு முக்கிய சந்தை

அதேபோல் இந்தியா எப்போதும் சியோமிக்கு ஒரு முக்கிய சந்தையாக இருக்கிறது. தொடர்ந்து சியோமிக்கான வரவேற்பு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல் குறிப்பிட்ட காலமாக இந்தியாவில் சியோமி சந்தையில் தலைதூக்கி உள்ளது.

உலகெங்கும் 5.5 மில்லியன் அளவிலான ஏற்றுமதிகள்

உலகெங்கும் 5.5 மில்லியன் அளவிலான ஏற்றுமதிகள்

சியோமி நிறுவனம் பிப்ரவரியில் உலகெங்கும் 5.5 மில்லியன் அளவிலான ஏற்றுமதிகள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளன. சியோமியின் இந்த வளர்ச்சியில் பெரும் பங்கு இந்தியாவிற்கே உள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi is worlds third largest smartphone company report said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X