சியாமி நிறுவனத்தின் 5வது இந்திய கிளை எங்கே தெரியுமா?

By Siva
|

இந்தியாவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் வலுவாக காலூன்றி இருக்கும் சீனாவின் சியாமி நிறுவனம் தனது முதல் 'மி ஹோம் ஸ்டோரை பெங்களூரில் சமீபத்தில் தொடங்கியது.

சியாமி நிறுவனத்தின் 5வது இந்திய கிளை எங்கே தெரியுமா?

இதனை அடுத்து டெல்லி, கூர்கிராம் மற்றும் சென்னை ஆகிய பகுதிகளில் ஸ்டோர்களை தொடங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக சேவை செய்து வந்தது. முதல் ஸ்டோரை ஆரம்பிக்கும் தினத்தன்றே இந்தியாவில் மிக விரைவில் 100 ஸ்டோர்களுக்கும் அதிகமாக ஆரம்பிக்கவுள்ளதாக வாக்குறுதி அளித்தது

ஏற்கனவே ஆன்லைன் விற்பனை மூலம் வாடிக்கையாளர்களின் மனதில் பதிந்து மில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன்களை சியாமி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

தற்போது மி ஹோம் ஸ்டோர் ஆரம்பித்துள்ளது அந்நிறுவனத்தின் கூடுதல் விற்பனைக்கு உதவும் வகையில் உள்ளது. இந்த ஹோம் ஸ்டார்களால் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஸ்டோருக்கு வருகை தந்து திருப்தி அளிக்கும் வகையில் ஸ்மார்ட்போனை வாங்கி செல்கின்றனர்

லேட்டஸ்ட் பொருட்களை ஷோரூமில் வாங்குவது என்பது ஒரு தனி உணர்வுதான். அந்த உணர்வை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் வகையில் இந்தியாவில் ஷோரூம்கள் திறக்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் ஐந்தாவதாக சியாமி நிறுவனம் தேர்வு செய்துள்ள நகரம் ஐதராபாத். மதாபூர் மெயின் ரோடு மதாபூரில் சியாமி நிறுவனத்தின் ஐந்தாவது இந்திய கிளை ஆரம்பிக்கப்படவுள்ளது.

500 கல்லூரிகளின் புதிய ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ள ஹைக் மெசஞ்சர்500 கல்லூரிகளின் புதிய ஸ்டிக்கர்களை அறிமுகம் செய்துள்ள ஹைக் மெசஞ்சர்

எனவே ஐதராபாத் பகுதி மக்கள் இனிமேல் ஆன்லைனில் மட்டுமின்றி நேரடியாக சியாமியின் ஷோரூமுக்கு சென்று லேட்டஸ்ட் மாடல்களின் கேட்லாக் வாங்கி அதன் விபரங்களை அறிந்து கொள்ளலாம். சியாமியின் ஐதராபாத் கிளை இன்று முதல் அதாவது செப்டம்பர்ம் 12 முதல் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சியாமி நிறுவனத்தின் கிளைகள் இன்னும் பல இந்திய நகரங்களில் விரைவில் அமைக்கப்படவுள்ளன. எனவே சியாமியின் பொருட்கள் ரீடெயிலில் நல்ல விற்பனை உச்சத்தை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறாது. அதுமட்டுமின்றி ரீடெய்லர், டிஸ்ட்ரிபியூட்டர் மற்றும் டைரக்ட் டூ ரீடெயில் முறைகளை நாடு முழுவதும் பின்பற்றவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளது

ஏற்கனவே இந்நிறுவனம் பிரபல நிறுவனங்களான விஜய் சேல்ஸ், சங்கீதா, பிக் C, ஈஜோன் மற்றும் ஹாட்ஸ்பாட் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியா முழுவதும் 11 நகரங்களில் சுமார் 600 ரீடெயில் கடைகளில் தங்களது தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

வெகுவிரைவில் இந்தியாவில் 30 நகரங்களில் சுமார் 1500க்கும் மேற்பட்ட ஷோரூம்களில் சியாமி நிறுவனத்தின் தயாரிப்புகள் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படும் என்று கூறப்படுகிறது

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi has now chosen Hyderabad as the ideal destination to open a new Mi Home Store.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X