அவ்வளவுதான்: இனி "எம்ஐ" கிடையாது- சியோமி அதிரடி- காரணம் என்ன தெரியுமா?

|

உலகின் சிறந்த ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்றாக இருப்பது சியோமி. இந்திய சந்தையை ஆக்கிரமித்திருக்கும் ஸ்மார்ட்போன்களில் பிரதானமானவை சியோமி. இந்தியாவில் சியோமிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர். இந்தியாவில் மட்டுமில்லை அனைத்து நாடுகளிலும் அதன் சந்தை அடிப்படையிலான சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது.

சிறந்த அம்சங்களோடு குறைந்த விலை

சிறந்த அம்சங்களோடு குறைந்த விலை

சீன நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் சிறந்த அம்சங்களோடு குறைந்த விலையில் தரம் வாய்ந்த சாதனங்களை அறிமுகம் செய்கிறது. இதன் காரணமாகவே சியோமி நீண்ட காலமாக பிற நிறுவனங்களைவிட தொடர்ந்து முன்னணியில் இருக்கிறது. இந்த நிலையில் சியோமி அதன் சாதனங்களில் இருந்து எம்ஐ பிராண்டிங்கை தவிர்க்கப் போவதாக தெரிவித்துள்ளது.

எம்ஐ பிராண்டின் கீழ் பல்வேறு தயாரிப்புகள்

எம்ஐ பிராண்டின் கீழ் பல்வேறு தயாரிப்புகள்

ரெட்மி, எம்ஐ மற்றும் போக்கோ பிராண்டுகளின் கீழ் சியோமி தனது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. அதன்பின் போக்கோ சுயாதீன பிராண்டாக நிறுவனம் அறிவித்தது. தற்போது சியோமி அதன் சாதனங்களில் எம்ஐ பிராண்டை அகற்றத் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. சியோமியின் பெரும்பாலான தயாரிப்புகள் எம்ஐ பிராண்டிங் கீழ் இருக்கிறது. ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல ஸ்மார்ட் டிவிகள், உடற்பயிற்சி பேண்ட்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் கடிகாரங்கள் உள்ளிட்ட தயாரிப்புகளும் எம்ஐ பிராண்டிங்கின் கீழ் உள்ளது.

தயாரிப்புகளில் எம்ஐ பிராண்டை பயன்படுத்தாது

தயாரிப்புகளில் எம்ஐ பிராண்டை பயன்படுத்தாது

எக்ஸ்டிஏ டெவலப்பர்கள் அறிக்கைப்படி, சியோமி இனி அதன் தயாரிப்புகளில் எம்ஐ பிராண்டை பயன்படுத்தாது என தெரிவிக்கப்படுகிறது. இந்த மாற்றமானது மிக்ஸ் 4 சாதனத்துடன் தொடங்குகிறது. சியோமியின் முதல் ஸ்மார்ட்போன் அண்டர் டிஸ்ப்ளே கேமராவுடன் வருகிறது. இந்த தொடரில் முன்னர் வெளியிடப்பட்ட அனைத்து சாதனங்களும் எம்ஐ மிக்ஸ் தொடங்கி அனைத்திலும் பெயரிடப்பட்டது. ஆனால் எம்ஐ மிக்ஸ் 4 சாதனத்தில் எம்ஐ என்ற பிராண்டிங் பெயர் கைவிடப்பட்டு மிக்ஸ் 4 என பெயரிடப்பட்டது.

எம்ஐ பிராண்டிங் படிப்படியாக நிறுத்தம்

எம்ஐ பிராண்டிங் படிப்படியாக நிறுத்தம்

சியோமியின் தயாரிப்பு போர்ட்ஃபோலியோ முழுவதும் எம்ஐ என்ற பெயரை தவிர்க்க நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. எம்ஐ பிராண்டிங் கைவிடப்பட்டதற்கான காரணத்தை சியோமி இன்னும் தெளிவுப்படுத்தவில்லை. எம்ஐ பிராண்டிங் இல்லாமல் சீனாவில் சியோமி சாதனங்களை விற்பனை செய்வதால், சியோமி பிராண்டிங்கை மிகவும் திறமனையானதாக மாற்றுவதற்காக எம்ஐ பிராண்டிங் படிப்படியாக நிறுத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக கூறப்படுகிறது. சியோமியின் துணை பிராண்ட் ஆன ரெட்மியின் கீழ் வெளியிடப்பட்ட சாதனங்களின் பெயர்களில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.

உலகின் சிறந்த பிராண்டாக சியோமி

உலகின் சிறந்த பிராண்டாக சியோமி

சாம்சங் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்கு தள்ளி சியோமி உலகின் சிறந்த பிராண்டாக மாறி இருக்கிறது. சியோமி பல ஆண்டுகளாகவே இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களிலேயே மிகவும் வரவேற்புத்தக்க ஸ்மார்ட்போனாக சியோமி மாறி இருக்கிறது. சீனாவின் சியோமி நிறுவனத்தை தொடர்ந்து ஒப்போ மற்றும் விவோ போன்ற சீன சாதனங்களும் இந்தியாவில் வலுவாக இருக்கிறது.

பல்வேறு விலை பிரிவு

பல்வேறு விலை பிரிவு

சியோமி வெற்றியின் காரணம் குறித்து பார்க்கையில், இது பட்ஜெட் விலை பிரிவு, இடைநிலை விலை பிரிவு, உயர்தர பிரிவு அனைத்து வகைகளிலும் சிறந்த அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கிறது. பிற நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களின் அதே அம்சங்களோடு குறைந்த விலையில் சாதனங்களை அறிமுகம் செய்கிறது. எம்ஐ பிராண்டிங் தவிர்க்கப்படும் என தெரிவிக்கப்படும் நிலையில் இனி வரும் சாதனங்கள் எப்படி அறிமுகமாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Xiaomi is reportedly going to discontinue its MI branded device

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X