ரெட்மி நோட் 10 ப்ரோ அறிமுகம் இந்தியாவில் உறுதியானது.. கொஞ்சம் வெயிட் பண்ணா வாங்கிடலாம்..

|

சியோமி நிறுவனம் விரைவில் இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் பல சான்றிதழ் வலைத்தளங்களில் வரவிருக்கும் தொலைப்பேசி பட்டியலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்போது, இந்தியாவின் BIS தளத்தில் மாடல் என் M2101K6I உடன் ரெட்மி நோட் 10 ப்ரோ காணப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 10 ப்ரோ

ரெட்மி நோட் 10 ப்ரோ

BIS சான்றிதழ் வலைத்தளத்தில் காணப்படும் ரெட்மி நோட் 10 ப்ரோவின் மாடல் எண்கள், இப்போது இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாவதை உறுதிப்படுத்தியுள்ளது. M2101K6I என்ற மாடல் எண்ணைத் தவிர, BIS வலைத்தளத்தில் M2101K6P என்ற மற்றொரு மாடல் எண்ணையும் இந்திய BIS சான்றிதழ் வலைத்தளம் சான்றளித்துள்ளது. இது ரெட்மி நோட் 10 ப்ரோவின் மற்றொரு வேரியண்ட் மாடலாக இருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

கேமரா விபரம்

கேமரா விபரம்

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன், ஸ்னாப்டிராகன் 732 ஜி சிப்செட் உடன் வழியாகும். இதன் பின்புறத்தில் குவாட்-கேமரா அமைப்பு இருக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பிரைமரி கேமரா 64 மெகாபிக்சல் கொண்ட சாம்சங் எஸ் 5 கேஜிடபிள்யூ கேமராவாக இருக்கக்கூடும். இந்த 64MP சென்சார் அல்ட்ரா-வைட் சென்சார், மேக்ரோ கேமரா மற்றும் டெப்த் சென்சார் உடன் இணைக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கிறது.

ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!ரூ.365-க்கு 365 நாட்கள் வேலிடிட்டி., தினசரி 2 ஜிபி டேட்டா- பிஎஸ்என்எல் மிரட்டல் அறிவிப்பு!

NFC வேரியண்ட் இந்தியாவில் இல்லையா?

NFC வேரியண்ட் இந்தியாவில் இல்லையா?

இந்த ஸ்மார்ட்போன் NFC ஆதரவுடன், 5050mAh சக்தி கொண்ட மிகப்பெரிய பேட்டரியுடன் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. என்எப்சி வேரியண்ட் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது என்றும் ஒரு சில தகவல்கள் பரவி வருகிறது. அதேபோல், முன்னதாக ரெட்மி நோட் 10 ப்ரோ ரெட்மி நோட் 10 ப்ரோ எஃப்.சி.சி இணையதளத்தில் மாடல் எண் M2101K6G உடன் வெளிவந்துள்ளது.

FCC சான்றிதழ்

FCC சான்றிதழ்

இந்த தொலைபேசி ஐரோப்பிய பொருளாதார ஆணையம், சிங்கப்பூரின் ஐஎம்டிஏ மற்றும் மலேசியாவின் எம்சிஎம்சி வலைத்தளங்களிலும் காணப்பட்டுள்ளது. FCC சான்றிதழை இருந்தது காணப்பட்ட போனில் 5G, டூயல் பேண்டு Wi-Fi, NFC, ப்ளூடூத், MIUI 12 போன்ற அம்சங்கள் இருப்பதாக சிம்ரன் பால் சிங் என்ற டிப்ஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார். அதேபோல், டிப்ஸ்டர் முகுல் ஷர்மாவும் ட்விட்டரில் அதே மாடலுக்கான IMEI எண் இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi is expected to launch Redmi Note 10 Pro soon in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X