மொபைல் பறக்குதா? Xiaomi உருவாக்கும் புதுமையான பறக்கும் டிரோன் மொபைல்.. பட்ஜெட்ல இப்படியொரு போனா? விலை என்ன?
சியோமி (Xiaomi) நிறுவனம் சத்தமே இல்லாமல் புது வகையான டிரோன் கேமரா ஸ்மார்ட்போன் (Drone camera smartphone) சாதனத்தை உருவாக்கி வருவதாக வதந்திகள் பரவி வருகிறது. ஸ்மார்ட்போனில் இருந்து தனியாக பிரித்தெடுக்க கூடிய ஒரு மினி டிரோன் (Mini drone) சாதனத்துடன் இந்த புதிய மொபைல் (Mobile) சாதனத்தை சியோமி நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த புதிய பறக்கும் ட்ரோன் கேமரா ஸ்மார்ட்போன் சாதனத்தின் முக்கிய விபரங்கள் மற்றும் சிறப்பம்ச தகவல்களை இப்போது பார்க்கலாம்.
4ஜி மொபைல் (4G mobile), பிறகு 5ஜி மொபைல் (5G mobile), அதனை தொடர்ந்து ஃபிலிப் போன் (Flip phone) மற்றும் போல்டபில் போன் (Foldable phone) என்று ஸ்மார்ட்போன்களின் கலாச்சாரம் ஒவ்வொரு படியாக மாறிவருகிறது. இந்த வரிசையில், விரைவில் உலக ஸ்மார்ட்போன் (smartphone) பயனர்களின் பயன்பாட்டை மாற்றி அமைக்க போகும் புதிய தலைமுறை ஸ்மார்ட்போன் சாதனமாக டிரோன் கேமரா ஸ்மார்ட்போன் சாதனங்கள் பிரபலமடையும் என்று கூரப்படுகிறது.

விவோ (Vivo) மற்றும் ஒப்போ (OPPO) போன்ற நிறுவனங்கள் ஏற்கவனே அவர்களுடைய சொந்த டிரோன் கேமரா போன்களை உருவாக்க துவங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரிசையில், இப்போது சியோமி நிறுவனமும் சேர்ந்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது. சியோமி கீழ் வெளிவரவிருக்கும் டிரோன் கேமரா சாதனம் பிரீமியம் பிளாக்ஷிப் சாதனமாக வெளிவரும் என்றும், ரெட்மி (Redmi) பிராண்டின் கீழ் வரும் பறக்கும் டிரோன் கேமரா ஸ்மார்ட்போன் சாதனம் பட்ஜெட் விருப்பமாக வெளிவருமென்றும் கூறப்பட்டுள்ளது.
நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கும் டிரோன் கேமரா ஸ்மார்ட்போனை இணையத்தில் ரெட்மி ஃபிளையிங் கேமரா 5ஜி போன் (Redmi Flying Camera 5G Phone) என்ற பெயரில் அடையாளம் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 108MP கேமரா கொண்ட ஒரு சிறிய மினி டிரோன் சாதனத்துடன் வெளிவரும் என்று கூரப்படுகிறது. இந்த டிரோனை பயனர்கள் தேவைப்படும் பொழுது போனில் இருந்து பிரித்தெடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த மினி டிரோனை கட்டுப்படுத்தக்கூடிய சாப்ட்வேரை சியோமி நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன்களில் பிரத்தியேகமான ஆப்ஸ் மூலம் கட்டுப்படுத்த அனுமதிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆம், இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே டச் உதவி மூலம், போனின் டிரோனை பயனர்கள் கட்டுப்படுத்தி இயக்க முடியுமென்று கூறப்பட்டுக்கிறது. இது தவிர இந்த போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் என்ன என்பதை இப்போது பார்க்கலாம்.
சியோமி ஃபிளையிங் கேமரா 5ஜி போன் (Xiaomi Flying Camera 5G Phone) அல்லது ரெட்மி ஃபிளையிங் கேமரா 5ஜி போன் (Redmi Flying Camera 5G Phone) என்றழைக்கப்படும் இந்த புதிய போனில், 6.7" இன்ச் அளவு கொண்ட 2400 x 1080 பிக்சல் தீர்மானம் உடைய AMOLED டிஸ்பிளேவை (Display) நாம் எதிர்பார்க்கலாம். இந்த டிஸ்பிளே 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் வரும் என்று கூறப்படுகிறது.
இந்த பறக்கும் டிரோன் மொபைல் சாதனம் மீடியாடெக் டைமென்சிட்டி 1200 சிப்செட் (MediaTek Dimensity 1200 SoC) உடன் வெளிவரலாம் அல்லது ஸ்னாப்டிராகன் 8 எலைட் (Snapdragon 8 Elite SoC) உடன் வெளிவரலாம் என்று கூறப்படுகிறது. இது 5000mAh அல்லது 6000mAh பேட்டரி திறனுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விலை பற்றி பேசுகையில், ரெட்மி ஃபிளையிங் கேமரா 5ஜி போன் பட்ஜெட் விருப்பமாக ரூ. 15,000 முதல் ரூ. 20,000 விலை வரம்பிற்குள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி பிராண்டின் கீழ் சியோமி ஃபிளையிங் கேமரா 5ஜி போன் (Xiaomi Flying Camera 5G Phone) பிளாக்ஷிப் மாடல் ரூ. 50,000 விலை புள்ளியில் எதிர்பார்க்கப்படுகிறது. பிளாக்ஷிப் டிரோன் கேமரா போன் சாதனத்தில் நிறுவனம் 300MP கேமராவை வழங்க வாய்ப்புள்ளத்தக்க கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








