சியோமி அறிமுகம் செய்யும் தனிநபர் கடனுக்கான புதிய 'மி கிரெடிட்' சேவை!
சியோமி நிறுவனம் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் இந்தியாவில், தனிநபர் கடன் சேவையை 'மி கிரெடிட்' என்ற பெயரில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த தனிநபர் கடனை நீங்கள் பெறுவதற்கு நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பார்க்கலாம்.

மி கிரெடிட் சேவை
சியோமி நிறுவனத்தின் மி கிரெடிட் சேவை, 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் அடிப்படையில் ஆண்டுக்கு ஒரு தனிநபருக்கு ரூ.1 லட்சம் வரை 16.2% என்ற வட்டியுடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈ.எம்.ஐ பதவிக்காலம் எவ்வளவு தெரியுமா?
தனிநபர் கடன் வாங்கிய பயனர்கள் வாங்கிய கடன் தொகையை ஈ.எம்.ஐ. முறைப்படி திருப்பிச் செலுத்தலாம். தொகையைத் திருப்பி செலுத்த 3 மாதங்கள் முதல் 12 மாதங்கள் வரை ஈ.எம்.ஐ பதவிக்காலத்தைப் பயனர்கள் தேர்வுசெய்துகொள்ளலாம். சேவைக்கான செயலாக்கக் கட்டணம் மற்றும் கால தேர்வை பொறுத்து வட்டியின் மதிப்பு மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி அறிமுகம்
சியோமி தயாரிப்புகளை வாங்குவதோடு, தனிப்பட்ட தேவைக்காகவும் பயனர்கள் இந்த கடன் தொகையை வாங்கிக்கொள்ளலாம். டிசம்பர் 3 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் இந்த சேவை குறித்த அனைத்து அம்சங்களும் விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிதிச் சேவையில் சியோமி
சியோமி நிதிச் சேவையில் ஈடுபடுவது இது முதல் முறையல்ல, இதற்குமுன்பு சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு ருபே மற்றும் ஐசிஐசிஐ வங்கியுடன் இணைந்து இந்தியாவில் மி பே டிஜிட்டல் கட்டண சேவையையும் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications