Home
News

Xiaomi நேர்மைக்கு இந்தியர்கள் அளித்த பரிசு: விற்பனை மட்டும் எத்தனை லட்சம் தெரியுமா?

Xiaomi இந்தியாவில் நேர்மையான விலை விற்பனையின் மூலமாக பெரிய திருப்புமுனையை உருவாக்கி இருக்கிறது. சியோமி தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதுமையான தொழில்நுட்பத்தின் மூலம் சிறந்த அனுபவம் வழங்குவதை உறுதி செய்கிறது. சியோமியின் தரம் மற்றும் நியாயமான விலைக்கு இந்திய மக்கள் அளித்த பரிசு என்ன தெரியுமா?

இந்தியர்கள் சியோமிக்கு அளித்த பரிசு

இந்தியர்கள் சியோமிக்கு அளித்த பரிசு

Xiaomi இந்தியா, ரெட்மி மற்றும் சியோமி போர்ட்ஃபோலியோக்கள் மூலமாக இதுவரை 8 மில்லியனுக்கும் அதிகமான ஸ்மார்ட்டிவிகளை விற்றுள்ளதாக அறிவித்திருக்கிறது. சியோமியின் தரம் மற்றும் நியாயமான விலைக்கு இந்திய மக்களிடம் கிடைத்த வரவேற்பே அதற்கு கிடைத்த பரிசாகும்.

புரட்சிகரமான ஸ்மார்ட்டிவி அனுபவத்தை வழங்கும் சியோமி

புரட்சிகரமான ஸ்மார்ட்டிவி அனுபவத்தை வழங்கும் சியோமி

xiaomi இந்தியா ஸ்மார்ட்டிவிகளை புதுப்புது அம்சங்களோடு தரம் வாய்ந்ததாக அறிமுகம் செய்து, நாட்டில் மில்லியன் கணக்கான குடும்பங்களின் டிவி பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் சியோமி இந்தியாவில் ஒரு புரட்சிகரமான ஸ்மார்ட்டிவி அனுபவத்தை வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேம்பட்ட அனுபவத்திற்கு சியோமியின் நடவடிக்கை என்ன?

மேம்பட்ட அனுபவத்திற்கு சியோமியின் நடவடிக்கை என்ன?

Xiaomi மற்றும் Redmi Smart TVகள் ஆனது பார்வையாளர்களுக்கு விருப்பமான வகையில் அதன் உள்ளடக்கம் மற்றும் டிவி பார்க்கும் அனுபவத்தை மேம்படுத்தி வழங்குகிறது. சியோமி மற்றும் ரெட்மி ஸ்மார்ட்டிவிகள் இணையற்ற பார்வை அனுபவத்தை வழங்குவதற்கு என OLED, QLED, LED, Dolby VisionTM, Dolby Atmos, HDR10+, IMAX மேம்பாடு, DTS:X மற்றும் DTS:Virtual X போன்ற பல்வேறு தொழில்நுட்பங்களை கொண்டிருக்கிறது.

தலைமை வணிக அதிகாரி ரகு ரெட்டி கூறிய கருத்துகள்

தலைமை வணிக அதிகாரி ரகு ரெட்டி கூறிய கருத்துகள்

Xiaomi இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி ரகு ரெட்டி இதுகுறித்து கூறிய கருத்துகளை பார்க்கலாம். "கடந்த நான்கு ஆண்டுகளில் ஸ்மார்ட் டிவி வகைபாடுகள் பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது. இந்திய மக்கள் ஸ்மார்ட்டிவியை ஏற்றுக் கொண்டதில் எங்களுக்கு பெரும்பங்கு உள்ளது என்பதில் பெருமிதம் கொள்கிறோம்" என கூறினார்.

பயனர்களின் தேவை அறிந்து பூர்த்தி செய்ய நடவடிக்கை

பயனர்களின் தேவை அறிந்து பூர்த்தி செய்ய நடவடிக்கை

மேலும் ரகு ரெட்டி இதுகுறித்து கூறுகையில், பல ஆண்டுகளாக எங்கள்(இந்தியா) வாடிக்கையாளர்களுடன் ஆழமான தொடர்பை உருவாக்கி வருகிறோம். இது சியோமி சாதனங்களில் புதுமைகளை புகுத்த ஊக்குவிக்கும் விதமாகவும் பயனர்களின் தேவை அறிந்து அதை பூர்த்தி செய்ய உதவும் வகையிலும் இருக்கிறது. வன்பொருள் மற்றும் மென்பொருளின் சரியான கலவையுடன் எங்களது தொலைக்காட்சியை நாங்கள் தொடர்ந்து உருவாக்குவோம்" என குறிப்பிட்டார்

மூன்று தத்துவங்களே அடிப்படை

மூன்று தத்துவங்களே அடிப்படை

Xiaomi மற்றும் Redmi TVகள் ஆனது பேட்ச்வால் மூலம் இயக்கப்படுகின்றன. இது இந்திய வாடிக்கையாளர்களை மையமாக வைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. சியோமி மற்றும் ரெட்மி டிவிகள் ஆனது அதன் உள்ளடக்கம், நிலையான அனுபவம் மற்றும் இந்தியா நுகர்வோரின் தேவைகளை பூர்த்தி செய்வது என்ற மூன்று தத்துவங்களை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்படுவதாக நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்களிடம் தனி வரவேற்பு

இந்திய வாடிக்கையாளர்களிடம் தனி வரவேற்பு

சியோமி ரெட்மி டிவிகள் பல்வேறு விலைப் பிரிவில் இந்தியாவில் கிடைக்கிறது. வீட்டிற்கு தேவைப்படும் அத்தியாவசிய பொருட்களாகவே ஸ்மார்ட்டிவிகள் மாறிவிட்டது என்றால் அது மிகையல்ல. ஏணைய நிறுவனங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு பல்வேறு விலைப் பிரிவில் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்து வருகின்றன. இதில் சியோமி எம்ஐ டிவிகளுக்கு என இந்திய வாடிக்கையாளர்களிடம் தனி வரவேற்பு இருக்கிறது. சியோமி எம்ஐ டிவியின் விலை விவரங்களை பார்க்கலாம்.

ரெட்மி 32 இன்ச் ஸ்மார்ட்டிவி

ரெட்மி 32 இன்ச் ஸ்மார்ட்டிவி

ரெட்மி 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு HD ரெடி ஸ்மார்ட் எல்இடி அம்சத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.24,999 என விற்கப்பட்ட நிலையில் அமேசான் தளத்தில் ரூ.13,499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 46% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

எம்ஐ 32 இன்ச் ஹரிஜான் எடிஷன் ஸ்மார்ட்டிவி

எம்ஐ 32 இன்ச் ஹரிஜான் எடிஷன் ஸ்மார்ட்டிவி

எம்ஐ 32 இன்ச் ஹரிஜான் எடிஷன் எச்டி ரெடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவியானது ரூ.19,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.15,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு அமேசான் தளத்தில் 20% தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஸ்மார்ட்டிவி HD ரெடி ஆதரவு, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே, டிடிஎஸ் எச்டி சவுண்ட் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

எம்ஐ 40 இன்ச் ஹரிஜான் எடிஷன்

எம்ஐ 40 இன்ச் ஹரிஜான் எடிஷன்

எம்ஐ 40 இன்ச் ஹரிஜான் எடிஷன் ஃபுல் எச்டி ஆண்ட்ராய்ட் எல்இடி டிவி ஆனது ரூ.29,999 என கிடைத்த நிலையில் அமேசானில் ரூ.21,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 27% தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. 20 வாட்ஸ் அவுட்புட் உடனான டிடிஎஸ் எச்டி பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் இருக்கிறது. இதன் டிஸ்ப்ளே முழு எச்டி ரெடி ஆதரவோடு 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது.

எம்ஐ 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி

எம்ஐ 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி

எம்ஐ 50 இன்ச் 4கே அல்ட்ரா எச்டி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் எல்இடி டிவியானது ரூ.41,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.29,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு அமேசான் தளத்தில் 29% தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்டிவி 4K Ultra HD ரெடி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் டால்பி+ டிடிஎஸ் எச்டி ஆதரவைக் கொண்டிருக்கிறது.

சியோமி 55 இன்ச் ஓஎல்இடி ஸ்மார்ட்டிவி

சியோமி 55 இன்ச் ஓஎல்இடி ஸ்மார்ட்டிவி

சியோமி ஸ்மார்ட்டிவிகள் பட்ஜெட் விலையில் தான் கிடைக்கிறது என்று நினைத்தால் அதுதான் இல்லை, சியோமி 55 இன்ச் ஓஎல்இடி ஸ்மார்ட்டிவி ரூ.84,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ரூ.1,99,999 என அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது அமேசான் தளத்தில் 58% தள்ளுபடியுடன் ரூ.84,999 என கிடைக்கிறது. விலைக்கு ஏற்ற மேம்பட்ட அம்சங்களை இந்த ஸ்மார்ட்டிவி கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi India Sold Over 8 Million Smart Tv in xiaomi and redmi Portfolios
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X