ரூ.10,000-க்குள் 5ஜி போன்கள் கிடைக்குமா? Xiaomi நிறுவன இந்திய தலைவர் கூறிய பதில் இதுதான்!

|

சியோமி (Xiaomi) நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. தற்போது இந்நிறுவனம் தரமான அம்சங்களுடன் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும்.

முரளிகிருஷ்ணன்

முரளிகிருஷ்ணன்

இந்நிலையில் ரூ.10,000-க்குள் 5ஜி போன்களை வெளியிடுவது கடினம் என்று சியோமி இந்தியா தலைவர் முரளிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். அதாவது சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ஏற்கனவே பல 5ஜி போன்களை அறிமுகம் செய்துள்ளது.

வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?வீட்டிலிருந்தபடி PAN கார்டு போட்டோவை இவ்வளவு சுலபமாக மாற்ற முடியுமா? கட்டணம் எவ்வளவு தெரியுமா?

5ஜி சேவை

5ஜி சேவை

மேலும் விரைவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் 5ஜி சேவைகளை அறிமுகம் செய்ய உள்ளன. எனவே இந்தியாவில் இன்னும் அதிகமான 5ஜி போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது சியோமி நிறுவனம்.

பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!பூமியின் உயிரினங்களுக்கான ஆதாரமே இதுதான்: முதன்முறையாக விண்வெளியில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர்கள்!

பண்டிகை கால விற்பனை

பண்டிகை கால விற்பனை

பின்பு இதுகுறித்து பேசிய சியோமி இந்தியா தலைவர் முரளிகிருஷ்ணன், பண்டிகை காலம் துவங்கும்போது ரூ.15000 அல்லது 20,000-விலைப்பிரிவில் 5ஜி ஸ்மார்ட்போன்களின் வரவு அதிகரிக்க துவங்கும்.

நாங்களும் எங்களது பண்டிகை கால விற்பனைக்கு தயாராகி வருகிறோம். பல்வேறு வகையான போன்கள் மற்றும் தயாரிப்புகளுக்கு தள்ளுபடிகளும் வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.

கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!கூகுள் பே வாடிக்கையாளர்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய விஷயம்.! சிம்பிள் டிப்ஸ்!

15-20 ஆயிரம்

குறிப்பாக தொலைதொடர்பு நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவைகளை வெளியிட உள்ளதால், 5ஜி சாதனங்களுக்கான தேவையில் பெரிய முன்னேற்றத்தை காண்போம்.

அதேபோல் வரும் பண்டிகைக் காலத்தின் தொடக்கத்தில் 15-20 ஆயிரம் விலைப்பிரிவில் 2 அல்லது 3 வருடங்கள் நீடிக்கும் வசதி கொண்ட போன்களை மக்கள் ஆர்வத்துடன் வாங்கத்துவங்குவர். ஆனாலும் பெரும்பாலான இந்தியர்கள் 10-15 ஆயிரம் விலைப்பிரிவில் ஸ்மார்ட்போன்களை வாங்கவே விரும்புவர் என்று தெரிவித்தார்.

5ஜி போன்

ரியல்மி போன்ற சில நிறுவனங்கள் ரூ.10,000 விலையில் 5ஜி போன்களை விரைவில் வெளியிடுவதை உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அத்தகைய மலிவு விலை 5ஜி போன்களை சியோமி நிறுவனம் எப்போது வெளியிடும் என்று கேட்டபோது, அது பொருளாதார அளவை பொறுத்தது என்றும், இந்த ஆண்டு இறுதியில் சிப்செட்களின் விலை குறையும் என்று எதிர்பார்க்கிறோம், எனவே 10,000-க்கு 5ஜி போன்களை வெளியிடச் சிறிது காலம் எடுக்கும், தற்போது அதற்கு வாய்ப்பில்லை என்றும்தெரிவித்தார் முரளிகிருஷ்ணன்.

உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..உலகின் அதிவேக இன்டர்நெட் சேவையின் வேகம் எவ்வளவு தெரியுமா? அசுர வேகம்.! நம்ம ஊர்ல வேகம் பத்தல பத்தல..

குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள்

குறைந்த விலை ஸ்மார்ட்போன்கள்

அதேபோல் சியோமி நிறுவனம் இப்போது குறைந்த விலை ஸ்மார்ட்போன்கனை அதிகம் அறிமுகம் செய்வதில்லை. அதேசமயம் 5ஜி போன்களை தரமான அம்சங்களுடன் அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது சியோமி நிறுவனம்.

ஸ்டைலா., கெத்தா ஒரு ஸ்மார்ட்போன்- அறிமுகமானது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி., 50 எம்பி கேமரா உட்பட நான்கு கேமராக்கள்!ஸ்டைலா., கெத்தா ஒரு ஸ்மார்ட்போன்- அறிமுகமானது டிசிஎல் ஸ்டைலஸ் 5ஜி., 50 எம்பி கேமரா உட்பட நான்கு கேமராக்கள்!

ரியல்மி, விவோ, மோட்டோ

ரியல்மி, விவோ, மோட்டோ

மேலும் ரியல்மி, விவோ, மோட்டோ நிறுவனங்களும் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆனால் இந்நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் தான் 5ஜி போன்களை அறிமுகம் செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் விரைவில் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்பு 5ஜி சேவை நாம் எதிர்பார்க்காத பல மாற்றங்களைத் தரும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi India President says it will be difficult to launch 5G phones under Rs.10,000: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X