Home
News

உங்க வீட்டு பெரியவங்ககிட்ட எந்த போன் இருக்கிறது? இந்த போன் இருந்தா வீட்டுக்கே வரும் நன்மை!

இந்தியாவில் தனக்கென்று ஒரு தனி இடத்தை நிலை நாட்டிக்கொண்டதில் சியோமி நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்கு ஒன்று உள்ளது. கம்மி விலையில் சிறப்பான சாதனங்களை வழங்குவது. விற்பனைக்கு பிந்தைய சேவைகளை தடையில்லாமல் வழங்குவது என்று மக்களை இந்த பிராண்ட் மிகவும் அதிகமாக கவர்ந்துவிட்டது.

சியோமி (Xiaomi) நிறுவனத்தின் அடுத்த பிசினஸ் டாக்டிக்ஸாக நிறுவனம் ஒரு புதிய சேவையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதை நாம் ஒரு பெஸ்ட் சேவை என்று கூறலாம். ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் டிவி பிராண்டுகளில் ஒன்றான Xiaomi இந்தியா, இப்போது நாட்டிலுள்ள மூத்த குடிமக்களுக்கான ஒரு புதிய பிரத்தியேக ஸ்மார்ட்போன் ஆதரவு சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

உங்க வீட்டு பெரியவங்ககிட்ட எந்த போன் இருக்கிறது? இந்த போன் இருக்கா?

இந்த புதிய முயற்சியின் ஒரு பகுதியாக, Xiaomi சாதனங்களை வாங்கிய மூத்த குடிமக்களுக்கான ஃபோன் செட்டப் சேவைகளை நேரடியாக, முதியவர்களின் வீட்டிற்கே நேரில் சென்று வழங்கும் படியான ஒரு சேவையை தான் நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த சேவைகளைப் பெற, வாடிக்கையாளர்கள் சில எளிய வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். QR குறியீட்டை ஸ்கேன் செய்து, அவர்களின் விவரங்களைப் பதிவு செய்து, அவர்கள் விரும்பும் சேவையைத் தேர்வு செய்யலாம்.

தனிப்பட்ட விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டதும், Xiaomi சேவைப் பிரதிநிதி வாடிக்கையாளரைத் தொடர்புகொண்டு சேவையின் வகை மற்றும் தகுதியைச் சரிபார்த்து அவர்களின் பின் குறியீட்டைச் சரிபார்ப்பார்கள், இதற்கு பிறகு, Xiaomi சேவைப் பிரதிநிதி பதிவு செய்யப்பட்டு, உதவியை நாடிய பயனரின் வீட்டு வாசலுக்கே நேரில் சென்று, முடிந்த வரை சீக்கிரமாக சேவையை வழங்குவார்கள் என்று நிறுவனம் கூறியுள்ளது.

கஸ்டமர் ஹாட்லைன் எண் 1800-103-6286 மற்றும் Whatsapp எண்- 8861826286 மூலமாக டோக்கன்களைப் பெறலாம். Xiaomi இந்தியாவில், அதன் வாடிக்கையாளர்களுக்குத் தேவையான சேவைகளைப் பூர்த்தி செய்யப் புதுமையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட தீர்வுகளை வழங்க முயற்சி செய்து வருகிறது. பல்வேறு காரணங்களுக்காகச் சேவை மையத்திற்குச் செல்ல முடியாத சியோமி பயனர்களின் மூத்த குடிமக்களுக்காகவே இந்த பிரத்தியேக சேவையை நிறுவனம் வடிவமைத்துள்ளது என்று முரளிகிருஷ்ணன் பி கூறியுள்ளார்.

உங்க வீட்டு பெரியவங்ககிட்ட எந்த போன் இருக்கிறது? இந்த போன் இருக்கா?

சியோமியின் இந்த புதிய டோர் ஸ்டேப் சேவை, முதியவர்களின் வீட்டு வாசலுக்கு ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் இலவச சேவையாகக் கிடைக்கும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சியோமி பயனர்களை, கஸ்டமர் சர்வீஸ் குழுக்களுடன் சிறந்த முறையில் இணைந்திருக்க ஊக்குவிப்பதோடு, ஒரு சுமூகமான சேவையை வழங்கவும் நிறுவனம் விரும்புவதாக சியோமி தெரிவித்துள்ளது.

இந்த புதிய டோர் ஸ்டேப் சர்வீஸ் சேவை அருகில் உள்ள சேவை மையத்திலிருந்து 20 கிமீ தொலைவில் வசிக்கும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே கிடைக்கும். இவர்களுக்கு இந்த சேவை முற்றிலும் இலவசமானதாம். மூத்த குடிமக்களுக்கான இலவச சேவையை அறிமுகச் சலுகையாக 30 நாட்களுக்குள் மீட்டெடுக்கலாம். மற்ற வாடிக்கையாளர்களும் சேவைகளைப் பெறலாம். ஆனால், பெயரளவிலான கட்டணமாக ரூ. 249 ஆகும்.

முதற்கட்டமாக அகமதாபாத், பெங்களூரு, போபால், புவனேஸ்வர், சண்டிகர், சென்னை, டெல்லி, ஹைதராபாத், இந்தூர், ஜெய்ப்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நொய்டா, புனே உள்ளிட்ட 15 நகரங்களில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. மற்ற நகரங்களிலும் இந்த சேவை விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் கூறியுள்ளது. சியோமி சர்வீஸ் சென்டர் இருக்கும் பெரும்பாலான இடங்களில் இந்த சேவை விரைவில் கிடைக்குமென்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi India launched new free phone setup service support at your home doorstep for senior citizens
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X