Xiaomi Independence Day Sale.. ஸ்மார்ட் டிவி, போன்களுக்கு தள்ளுபடி வழங்கி தெறிக்கவிட்ட சியோமி..
சியோமி நிறுவனம் சியோமி சுதந்திர தின சேல் (Xiaomi Independence Day Sale) எனும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனை ஆனது வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிறப்பு விற்பனையில் சியோமி டிவி, ஸ்மர்ட்போன் உட்பட பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எம்.காம் தளத்தில் இந்த சியோமி சுதந்திர தின சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. அதேபோல் தேர்வு செய்யப்பட்ட வாங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த சிறப்பு விற்பனையில் சாதனங்களை வாங்கும் பயனர்களுக்குக் கூடுதல் தள்ளுபடி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இப்போது சியோமி சாதனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளைப் பார்ப்போம்.

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தற்போது ரூ.2000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.14,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 12சி போனுக்கு ரூ.1300 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரெட்மி 12 போனை ரூ.7,699-விலையில் வாங்க முடியும்.
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி 12 போனுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த போனை ரூ.8,999-விலையில் வாங்க முடியும். மேலும் 12ஜிபி ரேம் மற்றம் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி போன் தற்போது ரூ.24,999-க்கு வாங்கக் கிடைக்கிறது என்பத குறிப்பிடத்தக்கது.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த சியோமி 12 ப்ரோ ஸ்மார்ட்போனை ரூ.39,999-விலையில் வாங்க முடியும். அதேபோல் இதன் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் ரூ.7000 விலைகுறைப்பை பெற்று ரூ.42,999-விலையில் வாங்க கிடைக்கிறது.
ரெட்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. அதாவது ரெட்மி ஸ்மார்ட் ஃபையர் (Redmi Smart Fire TV) 32-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு ரூ.4,250 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே தற்போது இந்த 32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவியை ரூ.9,749-விலையில் வாங்க முடியும்.
அதேபோல் சியோமி எக்ஸ்65 2020 எடிஷன் (Xiaomi X65 2023 Edition) 65-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு ரூ.3000 தள்ளுபடி கிடைத்துள்ளது. எனவே இந்த 65-இன்ச் சியோமி ஸ்மார்ட் டிவியை ரூ.58,999-விலையில் வாங்க முடியும். மேலும் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் ப்ரோ (Xiaomi Smart TV X Pro) 55-இன்ச் டிவிக்கு 2500 தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த 55-இன்ச் ஸ்மார்ட் டிவியை ரூ.45,499-விலையில் வாங்கலாம்.
சியோமி அறிவித்துள்ள இந்த சிறப்பு விற்பனையில் அசத்தலான இயர்பட்ஸ் மற்றும் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை கூட கம்மி விலையில் வாங்க முடியும். அதாவது ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலுக்கு ரூ.200 விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் மாடலை ரூ.1,199-விலையில் வாங்க முடியும்.

மேலும் ரெட்மி வாட்ச் 3 ஆக்வட் மாடலை தற்போது ரூ.2999-விலையில் வாங்க முடியும். இதுதவிர பல்வேறு இயர்போன்கள், ஸ்மார்ட்வாட்ச், ட்ரிம்மர் உள்ளிட்ட பல சாதனங்களுக்குத் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. குறிப்பா கம்மி விலையில் சியோமி ஸ்மார்ட் டிவிகளை வாங்க இதுதான் சரியான நேரம்.
அதேபோல் சியோமி நிறுவனம் இந்த ஆண்டு இறுதியில் பல அசத்தலான 5ஜி ஸ்மார்ட்போன்களை கம்மி விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக சியோமி நிறுவனம் அறிமுகம் செய்யும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








