Xiaomi இன் அதிரடி சுதந்திர தின ஆஃபர்: ரூ.24,000 வரை தள்ளுபடியா? இது தெரியாம போச்சேப்பா!

|

Xiaomi ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ் வெளியாகியுள்ளது. இந்த வருடச் சுதந்திர தினம் யாருக்கெல்லாம் மகிழ்ச்சியளிக்கப் போகிறதோ இல்லையோ, நிச்சயமாக ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி போன்ற எலக்ட்ரானிக் கேட்ஜெட்களை வாங்கத் துடிக்கும் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியான விஷயங்களை வாரி வழங்கப் போகிறது. ஆம், சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு சியோமி நிறுவனம் அதன் ரசிகர்களுக்கு நம்ப முடியாத அதிரடி ஆஃபர்களை இப்போது அறிவித்துள்ளது.

சுதந்திர தின சிறப்பு விற்பனையில் ரூ.24,000 வரை தள்ளுபடியா?

சுதந்திர தின சிறப்பு விற்பனையில் ரூ.24,000 வரை தள்ளுபடியா?

சியோமி இந்தியா இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு அதன் Xiaomi மற்றும் Redmi ஸ்மார்ட்போன்களின் மீது அற்புதமான சலுகைகளை அறிவித்துள்ளது. இந்த சிறப்பு விற்பனையை சியோமி நிறுவனமே நேரடியாக நடத்துகிறது என்பது கவனிக்கத்தக்கது. இந்த சிறப்பு விற்பனையில் ரூ.24,000 வரையிலான தள்ளுபடி உங்களுக்குக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட்டிவி, லேப்டாப், பவர்பேங்க், ட்ரிம்மர் போன்ற பல கேட்ஜெட்கள் மீது ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது வரை இந்த சலுகை கிடைக்கும்?

எப்போது வரை இந்த சலுகை கிடைக்கும்?

விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் Amazon இல் ஆகஸ்ட் 6 முதல் ஆகஸ்ட் 11, 2022 வரை இந்த தள்ளுபடிகளைத் தாராளமாகப் பெறலாம். அதேபோல், சியோமி ரசிகர்கள் Mi இந்தியா வலைத்தளம் மூலமாகவும் இந்த சலுகையை நீங்கள் பெறலாம். இந்த சிறப்பு விற்பனை ஏற்கனவே துவங்கி 2 நாட்கள் முடிவடைந்த நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த விற்பனை நீடிக்கும் என்பதனால் உங்களுக்கான கேட்ஜெட்களை வாங்கச் சரியான நேரம் இது தான்.

ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் வரை எல்லாவற்றிற்கும் தள்ளுபடி

ஸ்மார்ட்போன் முதல் ஸ்மார்ட் கேட்ஜெட்ஸ் வரை எல்லாவற்றிற்கும் தள்ளுபடி

சியோமி நிறுவனம் அறிவித்துள்ள இந்த சுதந்திர தின சிறப்பு விற்பனை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நீடிக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சிறப்பு விற்பனையில் Xiaomi 12 Pro, Xiaomi 11T Pro, Xiaomi 11 Lite NE, Redmi K50i, Redmi Note 11 Pro+ போன்ற சாதனங்களுடன், சியோமியின் பிற பட்ஜெட் மாடல்கள் மீதும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு விற்பனை சலுகை நிறுவனத்தின் அணைத்து தயாரிப்புகளுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக, SBI வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

BSNL அறிவித்த 75ஜிபி இலவச டேட்டா.. சுதந்திர தின அல்டிமேட் சலுகைய மிஸ் பண்ணாதீங்க!BSNL அறிவித்த 75ஜிபி இலவச டேட்டா.. சுதந்திர தின அல்டிமேட் சலுகைய மிஸ் பண்ணாதீங்க!

இவ்வளவு குறைந்த விலையில் Xiaomi 12 Pro வாங்கலாமா?

இவ்வளவு குறைந்த விலையில் Xiaomi 12 Pro வாங்கலாமா?

நீங்கள் SBI வங்கி வாடிக்கையாளராக இருந்தால், SBI கார்டு மூலம் ஷாப்பிங் செய்யும் போது, 10 சதவீத உடனடி தள்ளுபடியையும் பெறுவதற்கு வாய்ப்புள்ளது. சரி, இப்போது ஸ்மார்ட்போன்களின் சலுகை விபரங்களைப் பற்றிப் பார்க்கலாம், முதலில் ரூ.62,999 விலைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட Xiaomi 12 Pro பற்றிய சலுகையைத் தெரிந்துகொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ.5,000 Amazon கூப்பன் தள்ளுபடி மற்றும் SBI கிரெடிட் கார்டுடன் ரூ.8,000 உடனடி தள்ளுபடி கிடைக்கிறது.

ஒன் டைம் ஆஃபர்.. ஒன் டைம் செட்டில்மென்ட்

ஒன் டைம் ஆஃபர்.. ஒன் டைம் செட்டில்மென்ட்

இதன் மூலம் இந்த புதிய Xiaomi 12 Pro ஸ்மார்ட்போன் மாடலை நீங்கள் வெறும் ரூ. 49,999 என்ற விலையில் வாங்க முடியும். அதேபோல், சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Redmi K50i ஸ்மார்ட்போன் மீதும் சலுகைகள் கிடைக்கிறது. இது ஒரு 5G டிவைஸ் என்பது கவனிக்கத்தக்கது. இத்துடன், Xiaomi மற்றும் Redmi இன் பல ஸ்மார்ட்போன்களின் மீது சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த மாடல் மீது என்ன சலுகைகள் கிடைக்கிறது என்பதை இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.

ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?ஒரே ஸ்மார்ட்போனில் 2 WhatsApp நம்பரை பயன்படுத்துவது எப்படி? உங்க போனில் டூயல் வாட்ஸ்அப் யூஸ் பண்ணலாமா?

Xiaomi 12 Pro மாடலை கம்மி விலையில் வாங்க பெஸ்ட் சான்ஸ்

Xiaomi 12 Pro மாடலை கம்மி விலையில் வாங்க பெஸ்ட் சான்ஸ்

Xiaomi 12 Pro ஸ்மார்ட்போனின் 8GB/256GB மாடல் இந்தியில் ரூ. 62,999 என்ற அசல் விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையை முன்னிட்டு, இப்போது இந்த டிவைஸை நீங்கள் ரூ. 49,999 விலையில் வாங்கலாம். இதன் 12GB/256GB மாடலின் அசல் விலை 66,999 ஆகும். இதை இப்போது நீங்கள் ரூ. 53,999 என்ற சலுகை விலையில் வாங்கலாம்.

Redmi K50i மீது இப்படி ஒரு சலுகையா?

Redmi K50i மீது இப்படி ஒரு சலுகையா?

Redmi K50i ஸ்மார்ட்போனின் 6GB/128GB மாடல் இந்தியில் ரூ. 25,999 என்ற அசல் விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையை முன்னிட்டு, இப்போது இந்த டிவைஸை நீங்கள் ரூ. 21,499 விலையில் வாங்கலாம். இதன் 8GB/128GB மாடலின் அசல் விலை 28,999 ஆகும். இதை இப்போது நீங்கள் ரூ. 24,499 என்ற சலுகை விலையில் வாங்கலாம்.

EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?EPFO: உங்கள் PF கணக்கில் ரூ.40000 டெபாசிட்! யாருக்கெல்லாம் இது கிடைக்கும்? Online பேலன்ஸ் செக் செய்வது எப்படி?

மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல் இது தானா?

மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல் இது தானா?

Redmi Note 11 Pro+ ஸ்மார்ட்போனின் 6GB/128GB மாடல் இப்போது ரூ. 17,749 என்ற விலையில் கிடைக்கிறது. Xiaomi 11 Lite NE ஸ்மார்ட்போனின் 6GB/128GB மற்றும் 8GB/128GB மாடல்கள் முறையே ரூ. 18,749 மற்றும் ரூ. 19,749 விலையில் வாங்கக் கிடைக்கிறது. குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடலாக Redmi 9A Sport விற்பனை செய்யப்படுகிறது. Redmi 9A Sport ஸ்மார்ட்போனின் 2GB/32GB மாடல் இப்போது ரூ. 6,399 விலையில் சலுகையுடன் வாங்கக் கிடைக்கிறது.

இன்னும் ஏராளமான Xiaomi தயாரிப்புகள் மீது சலுகையா?

இன்னும் ஏராளமான Xiaomi தயாரிப்புகள் மீது சலுகையா?

இதேபோல், Xiaomi 11T Pro ஸ்மார்ட்போன், Redmi Note 11, Redmi Note 11 Pro, Redmi Note 11S, Redmi Note 11T, Redmi 9A, Redmi 9A Sport, Redmi 9 Activ, Redmi 10A, Redmi 10 Prime, Redmi 10A Sport போன்ற மாடல்கள் மீது இந்த சலுகை ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை கிடைக்கிறது. இவை அனைத்தும் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் Redmi மற்றும் Xiaomi பிராண்டட் ஸ்மார்ட்போன் மாடல்கள் என்பது கவனத்திற்கு. சியோமியின் சலுகைகள் ஏற்கனவே நேரலையில் உள்ளன என்பதனால் உடனே முந்துங்கள்.

Best Mobiles in India

English summary
Xiaomi Independence Day sale Best Offers On Xiaomi and Redmi Smartphones To Buy

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X