இந்திய மார்க்கெட்டில் நுழைய தயாராகியுள்ள 2 சியாமி பொருட்கள்.!
இந்த இரண்டு பொருட்களும் ஏற்கனவே இந்தியாவின் ஒருசில கடைகளில் கிடைத்தாலும் தற்போது சியாமியின் அதிகாரபூர்வ ஷோரூம்களில் கிடைக்கவுள்ளது.
சியாமி நிறுவனத்திற்கு இந்திய மார்க்கெட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கின்றனர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்திய மார்க்கெட்டில் புதுப்புது பொருட்களை அறிமுகம் செய்து வரும் சியாமி தற்போது செல்பி ஸ்டிக் மற்றும் புளூடூத் ஆடியோ ரீசிவர் ஆகிய இரண்டு பொருட்களை மிக விரைவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.

சீன மார்க்கெட்டில் செல்பி ஸ்டிக் $16 என்ற விலையிலும், புளூடூத் ஆடியோ ரிசீவர் $15 என்ற விலையிலும் விற்பனையாகி வருகிறது. எனவே இந்த இரண்டு பொருட்களும் இந்தியாவில் ரூ.1099 மற்றும் 999 என்ற விலையில் முறையே விற்பனையாகும் என்று எதிர்பார்க்கபப்டுகிறது.
மேலும் செல்பி ஸ்டிக் கருப்பு மற்றும் கிரெ வண்ணத்திலும் புளூடூத் ரிசீவர் வெள்ளை நிறத்திலும் அறிமுகம் ஆக வாய்ப்பு உள்ளது. இந்த இரண்டு பொருட்களும் ஏற்கனவே இந்தியாவின் ஒருசில கடைகளில் கிடைத்தாலும் தற்போது சியாமியின் அதிகாரபூர்வ ஷோரூம்களில் கிடைக்கவுள்ளது. அதுமட்டுமின்றி இந்த இரண்டு பொருட்களையும் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் என இரண்டு விதங்களிலும் பெற்று கொள்ளலாம்
மேலும் சியாமி நிறுவனம் சமீபத்தில் விர்ட்டியுவல் அசிஸ்டெண்ட் சியோ ஏ1 என்ற பொருளின் புரமோஷன் வீடியோவை யூடியூபில் வெளியிட்டது. கூகுள், அமேசான் அலெக்சா, மற்றும் ஆப்பிள் சி'றி போன்று சீனாவில் பயன்படும் இந்த அசிஸ்டெண்ட் சீன மக்களின் பெரும் வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீனாவின் சொந்த அசிஸ்டெண்ட் தயாரிப்பு என்பதும் ஒரு பெருமைதான்
சீன மார்க்கெட்டில் ஹூவாய் நிறுவனமும் அசிஸ்டெண்ட் மார்க்கெட்டில் இருந்தாலும் சியாமி அதை முறியடித்து முன்னேறும். ஏனெனில் இது கூகுள் அசிஸ்டெண்டுக்கு நிகரான ஒன்றாக உள்ளது.

இந்த வீடியோவில் பயனாளிகள் இடும் கட்டளைகளான செயலிகளை ஓப்பன் செய்வது, புகைப்படம் எடுப்பது, மொழிபெயர்ப்பது, தட்பவெப்பநிலையை தெரிந்து கொள்வது, லைட்ஸ்களை ஆப், ஆன் செய்வது, என ஒரு ரோபோட் போன்று சொன்ன வேலைகளை செய்யும் ஒரு அசிஸ்டெண்ட் ஆக இது உள்ளது. மேலும் இதில் உள்ள ஒரு முக்கிய அம்சம் என்னவெனில் சீன மற்றும் ஆங்கில மொழியிலும் சப்போர்ட் செய்யும் எனவே சீனாவில் இதன் மார்க்கெட் அபாரமாக இருக்கும் என கருதப்படுகிறது.
மேலும் இந்த சியோ ஏ1 அசிஸ்டெண்ட் நமது வீட்டை ஒரு ஸ்மார்ட் வீடாக மாற்றுவதில் உதவுகிறது. மேலும் இதற்கு சீனர்கள் தங்கள் தாய்மொழியிலேயே கட்டளையிட்டு ஸ்மார்ட் ஹோமை பெற்று கொள்ளலாம் என்பது ஒரு புதிய வசதி ஆகும்.


Click it and Unblock the Notifications