2.3 மில்லியன் கருவிகளை விற்பனை செய்து அசத்திய பிரபல நிறுவனம்.!

Written By:

இந்தியாவில் மட்டும் சுமார் 2.3 மில்லியன் சியோமி ரெட்மி நோட் 3 கருவிகளை விற்பனை செய்திருப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மார்ச் மாதம் வெளியான இந்தக் கருவி ஒவ்வொரு 9 நிமிடங்களுக்கும் ஒரு ரெட்மி நோட் 3 கருவி ஆன்லைனில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா ஆன்லைன் சந்தையில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கருவியாக சியோமி ரெட்மி நோட் 3 இருக்கின்றது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
சலுகை

சலுகை

இந்த நற்செய்தியைக் கொண்டாடும் வகையில் சியோமி நிறுவனம் தனது பயனர்களுக்குச் சிறப்பு போட்டி ஒன்றை அறிவித்து பல்வேறு இலவசங்களையும் வழங்குகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

விளையாட்டு

விளையாட்டு

இந்த விளையாட்டுகளின் படி பயனர்கள் ஏழு விநாடிகளில் ஏதேனும் வாக்கியத்தைப் பதிவு செய்ய வேண்டும். வியாழன் கிழமைக்குள் பயனர்களால் மூன்று முறை வாக்கியங்களைப் பதிவு செய்ய முடியும். டைப்பிங் போட்டியில் தோல்வியுற்றால் அதிக வாய்ப்புகளைப் பெற இந்த போஸ்ட்களை நாள் ஒன்றிற்கு இரண்டு முறை ஃபேஸ்புக்கில் பகிர வேண்டும்.

வெளியீடு

வெளியீடு

சியோமி ரெட்மி நோட் 3 கருவி இந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இரண்டு வித மாடல்களில் 2 ஜிபி ரேம் + 16 ஜிபி இன்டர்னல் மெமரி மற்றும் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் மெமரிகளில் வெளியிடப்பட்டது. இவை முறையே ரூ.9,999 மற்றும் ரூ.11,999 விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

ரெட்மி நோட் 3 கருவியின் சிறப்பம்சங்களை பொருத்த வரை குவால்காம் ஸ்னாப்டிராகன் 650 சிப்செட் மற்றும் 4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. மேலும் FHD டிஸ்ப்ளே மற்றும் 1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது.

புதிய டேப்ளெட் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

கேமரா

கேமரா

கேமராவை பொருத்த வரை 16 எம்பி பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்பக்க கேமராவும், ஆண்ட்ராய்டு 5.1 சார்ந்த MIUI 7 யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது. இதோடு கைரேகை ஸ்கேனர் மூலம் பாதுகாக்கப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
Xiaomi has sold 2.3 million Redmi Note 3 units in India Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot