Home
News

சியோமி எம்ஐ 4ஐ 32 ஜிபி வெளியானது..!

By Meganathan

முன்பு அறிவித்ததை போன்று சியோமி நிறுவனம் இந்தியாவில் முதலாம் ஆண்டு விழாவை 32 ஜிபி எம்ஐ4ஐ கருவியின் வெளியீட்டோடு கொண்டாடுகின்றது. சாம்பல் நிறத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த கருவி எம்ஐ.காம் இணையதளத்தில் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றது. எம்ஐ.காம் சியோமி எம்ஐ 4ஐ 32 ஜிபி கருவியின் விலை ரூ.14,999 என நிர்ணயக்கப்பட்டுள்ளது.

 சியோமி எம்ஐ 4ஐ 32 ஜிபி வெளியானது..!

இதற்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு துவங்கி அதன் விற்பனை ஜூலை 28 ஆம் தேதி மதியம் 2 மணி வரை நடைபெறுகின்றது. மேலும் முதலாம் ஆண்டு விழாவை ஒரு வாரம் கொண்டாட இருப்பதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

எம்ஐ 4ஐ 16ஜிபி மாடலுக்கு எம்ஐ இந்தியா இணையதளம் மட்டுமல்லாமல் ப்ளிப்கார்ட், அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் போன்ற தளங்களில் இன்று ஒரு நாளைக்கு மட்டும் பிரத்யேக சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறப்பம்சங்களை வைத்து பார்க்கும் போது எம்ஐ 4ஐ கருவியில் 5 இன்ச் 1080 பி ஃபுல் எச்டி ஸ்கிரீன், 3120 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியும் வழங்கப்பட்டுள்ளது.

 சியோமி எம்ஐ 4ஐ 32 ஜிபி வெளியானது..!

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. 5 இன்ச் திரை என்றாலும் இந்த கருவி கைகளில் கச்சிதமாக பொருந்துவகால் ஒரே கையில் பயன்படுத்த முடிகின்றது. முதலாம் ஆண்டு விழாவை அனுசரிக்கும் சியோமி நிறுவனம் எம்ஐ ஸ்டோர் செயலியை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Xiaomi is celebrating its first anniversary in India with the launch of the highly speculated 32GB Mi 4i.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X