மூன்று ரியர் கேமராக்களுடன் களமிறங்கும் மடிக்கக்கூடிய சியோமி ஸ்மார்ட்போன்.!
சியோமி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது, பின்பு இந்நிறுவனம் அன்மையில் தனது மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் வீடியோவை சமீபத்தில் வெளியிட்டது, அதன் ஹார்டுவேர் மற்றும் கேமரா பற்றி எந்தத தகவலும் வெளியாகாமல் இருந்தது.

மூன்று ரியர் கேமரா ஆதரவு
தற்சமயம் வெளியாகியுள்ள காப்புரிமை விண்ணப்பங்களில் சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று ரியர் கேமரா ஆதரவு கொண்டிருக்கும் எனத் தெரிய வந்துள்ளது.

செங்குத்தாக இருக்கும்
குறிப்பாக சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மூன்று கேமராக்களும் செங்குத்தாக இருக்கும் என தெரிகிறது, பின்பு இதன் மெகாபிக்சல் விவரங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இரட்டை தாழ் கொண்ட டிஸ்பிளே
மேலும் ஐரோப்பிய காப்புரிமை அலுவலகத்தில் சியோமி பதிவு செய்திருக்கும் விண்ணப்பத்தின்படி சியோமி மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் டேப்லெட் சாதனமாக காடசியளிக்கிறது. இதில் இரட்டை தாழ் கொண்ட டிஸ்பிளே இருபுறங்களிலும் மடிக்கக்கூடியதாக உருவாக்கப்படுகிறது.

உற்பத்தி செய்யும் பணி
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் இதனை அதிகளவு உற்பத்தி செய்யும் பணி எதிர்காலத்தில் துவங்கும் என்றும் பின்பு ஸ்மார்ட்போனின் பெயரையும் வாடிக்கையாளர்களிடம் கேட்க இருப்பதாக தெரிவித்துள்ளது சியோமி நிறுவனம்.

ப்ரோடோடைப் வடிவில்..
வீடியோவில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் மடிக்கப்பட்ட நிலையிலும் பின்புற ஸ்கிரீன் ஆஃப் ஆகாமல் இருக்கிறது. எனினும் இந்த ஸ்மார்ட்போன் தற்சமயம் ப்ரோடோடைப் வடிவில் இருப்பதாக சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது


Click it and Unblock the Notifications